Wednesday, February 26, 2020

முன்பதிவு டிக்கெட்டுகள் 'கேன்சல்' ரயில்வே வருமானம் ரூ.9,௦௦௦ கோடி

Updated : பிப் 26, 2020 01:50 | Added : பிப் 26, 2020 01:48

கோட்டா : இந்திய ரயில்வேயில் முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கட்டணம் மற்றும் ரத்து செய்யப்படாத முன்பதிவு டிக்கெட்டுகள் மூலம் மூன்றாண்டு காலத்தில் 9,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.;

ராஜஸ்தானைச் சேர்ந்த சுஜீத் சுவாமி என்பவர் மத்திய ரயில்வே தகவல் அமைப்பிடம் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனு மூலம் கிடைத்த விபரங்கள் வருமாறு:இந்திய ரயில்வேயில் 2017 ஜன. 1 முதல் 2020ம் ஆண்டு ஜன. 31 வரை காத்திருப்போர் பட்டியலில் இருந்த 9.5 கோடி பயணியர் தங்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்யவில்லை. இதன் மூலம் ரயில்வேக்கு 4335 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்த மூன்றாண்டுகளில் டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கட்டணமாக மட்டும் 4,684 கோடி ரூபாயை பயணியரிடம் இருந்து ரயில்வே வசூலித்துள்ளது.

இந்த மூன்றாண்டு காலத்தில் இணையதளம் மூலமாக 145 கோடி பயணியரும் ரயில்வே கவுன்டர்களில் 74 கோடி பயணியரும் முன்பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து சுஜீத் சுவாமி தரப்பில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.அந்த மனுவில் 'ஆன்லைன் மற்றும் கவுன்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான ரயில்வே கொள்கைகளில் அதிக வேறுபாடுகள் உள்ளன. 'இதனால் பயணியருக்கு நிதிச்சுமை மற்றும் மனச்சோர்வு ஏற்படுகிறது. இதில் பயணியருக்கு நிவாரணம் வழங்குவதுடன் ரயில்வே நியாயமற்ற முறையில் வருவாய் ஈட்டுவதையும் தடுக்க வேண்டும்' என கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024