Wednesday, February 19, 2020

வரும் கல்வியாண்டு முதல் ஜிப்மர் எம்பிபிஎஸ் இடங்கள் 249 ஆக உயர்கிறது
புதுச்சேரி

இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றான ஜிப்மரில் எம்பிபிஎஸ் இடங்கள் 200-லிருந்து 249-ஆக உயர்கிறது. ஜிப்மர் நுழைவுத் தேர்வு தற்காலிக அட்டவணையில் இவ்விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜவஹர்லால் மருத்துவ பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிநிறுவனத்தில் (ஜிப்மர்) எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், எம்டிஎஸ், பிஎஸ்சி, எம்எஸ்சி, பிஎச்டி மருத்துவம் மற்றும் மருத்துவம் சார் படிப்புகள் உள்ளன.

இக்கல்லூரியில், வரும் 2020-21ம் கல்வியாண்டு படிப்புகளுக்கான தற்காலிக நுழைவுத்தேர்வு அட்டவணை பட்டியல் அதன் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் ஜூலையில் எம்டி, எம்எஸ், பிடிஎப், எம்டிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் பதிவு மார்ச் 4-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 9-ம் தேதி முடிவடைகிறது. ஆன்லைன் நுழைவுத் தேர்வு மே 17-ம் தேதியும் அதைத்தொடர்ந்து கலந்தாய்வும் நடக்கிறது. ஜூலை 31-ல் சேர்க்கை நிறைவடைகிறது.

எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வானது நீட் கலந்தாய்வு முறையில் வரும் கல்வியாண்டில் நடத்தப்படும் என்று ஜிப்மர் தெரிவித்துள்ளது. இதற்கான தேதி பின்னர் தெரிவிக்கப்படும்.

தற்போது புதுச்சேரி ஜிப்மரில் 150, காரைக்காலில் 50 என மொத்தம் 200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு 10 சதவீதம் தரப்படுவதால் வரும் கல்வியாண்டில் இந்த இடங்கள் உயர்த்தப்படுமா என்று கேள்வி எழுந்தது. 10 சதவீத இடஒதுக்கீட்டு அமலால், கூடுதல் இடங்கள் பெற்று கலந்தாய்வு நடத்தலாம் என்றும் மத்திய அரசும் குறிப்பிட்டிருந்தது.

அதன்படி, வரும் கல்வியாண்டில் 49 இடங்கள் உயர்த்தப்பட உள்ளன. தற்காலிக தேர்வு அட்டவணையில் எம்பிபிஎஸ் இடங்கள் 249 என ஜிப்மர் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் பிஎஸ்சி, எம்எஸ்சி, எம்பிஎச், பிஎச்டி, பிபிடி படிப்புகளுக்கு ஏப்ரல் 21-ம் தேதி ஆன்லைன் பதிவு தொடங்கும். மே 20-ம் தேதி நிறைவடையும். ஆன்லைன் நுழைவுத் தேர்வு ஜூன் 21-ல் நடக்கும். அதைத்தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறும். ஆகஸ்ட் 31-ல் இதற்கான சேர்க்கை நிறைவடையும்.

ஜனவரி 2021-ம் ஆண்டுக்கான எம்டி, எம்எஸ். டிஎம், எம்சிஎச் படிப்புகளுக்கான ஆன்லைன் பதிவு வரும் செப்டம்பர் 16-ல் தொடங்கி அக்டோபர் 21-ல் நிறைவடையும். ஆன்லைன் நுழைவுத் தேர்வு டிச.6-ம் தேதியும் அதையடுத்து கலந்தாய்வும் நடக்கும். எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு 2021 பிப்.27-ம் தேதியும் டிஎம், எம்சிஎச்படிப்புகளுக்கு 2021 ஜன.30-ம் தேதியும் சேர்க்கை முடிவுபெறும் என்று ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...