Wednesday, August 26, 2020

'Not Seeking Mercy; Asking For Judicial Statesmanship': Dhavan To SC In Prashant Bhushan Contempt Case

'Not Seeking Mercy; Asking For Judicial Statesmanship': Dhavan To SC In Prashant Bhushan Contempt Case: Senior Advocate Dr. Rajeev Dhavan, appearing for Advocate Prashant Bhushan in the contempt case, told the Supreme Court that he was not seeking mercy and was asking for 'judicial

Prashant Bhushan Tweets Case

Prashant Bhushan Tweets Case: Breaking: SC. Prashant Bhushan Contempt Case Over Two Tweets

[Breaking] NEET, JEE Exams To Be Held On Dates In September As Announced Earlier: National Testing Agency

[Breaking] NEET, JEE Exams To Be Held On Dates In September As Announced Earlier: National Testing Agency: The National Testing Agency (NTA) issued a press release on Tuesday stating that NEET(UG) and JEE(Main) exams will be held on the dates as announced before. The dates for JEE are from September 1 to 6...

யாசகம் பெற்று ரூ.1 லட்சம் கொரோனா நிதி




யாசகம் பெற்று ரூ.1 லட்சம் கொரோனா நிதி

மதுரை: யாசகம் பெற்று, 10வது முறையாக, ரூ.10,000 கொரோனா நிவாரண நிதி வழங்கிய முதியவருக்கு, பாராட்டு குவிந்து வருகிறது. இதுவரை அவர் 1 லட்சம் ரூபாய், கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.துாத்துக்குடி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன், 65. இவர், திருமணம் முடிந்த சில மாதங்களில், குடும்பத்தை பிரிந்து, மும்பை சென்றார். அங்கு வேலை கிடைக்காததால், பிச்சை எடுக்க துவங்கினார். ஊருக்கு திரும்பியவரை குடும்பத்தினர் சேர்க்கவில்லை. பிச்சை எடுத்து வந்தவர், செலவு போக மீதி பணத்தை, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல மாநிலங்களிலுள்ள பள்ளிகளுக்கு, மேஜை, நாற்காலிகள் வாங்க வழங்கினார். மும்பையில், 20 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கியுள்ளார்.இவர், மே முதல் யாசகம் பெற்று சேமித்த பணம் தலா, 10 ஆயிரம் ரூபாய் வீதம் 9 முறை, மதுரை கலெக்டரிடம், கொரோனா நிவாரண நிதியாக வழங்கியிருந்தார். இந்நிலையில், இன்று பத்தாவது முறையாக, 10 ஆயிரம் ரூபாயை, கலெக்டர் வினய்யிடம் வழங்கினார். கொரோனா நிதியாக இதுவரை ரூ.1 லட்சம் வழங்கிய அவரை பலரும் பாராட்டினர்.முன்னதாக, சுதந்திர தின விழாவில், பூல் பாண்டியனுக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியாததால், அன்று விருது வழங்க முடியவில்லை. இத்தகவல் தெரிந்து, கலெக்டர் அலுவலகம் வந்த பூல் பாண்டியனுக்கு, கலெக்டர் விருது, சான்றிதழ் வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt

19 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது அமெரிக்கன் ஏர்லைன்ஸ்

19 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது அமெரிக்கன் ஏர்லைன்ஸ்

வாஷிங்டன்: அரசு நிதி கையிருப்பு காலியானதால், 19 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவை தடை செய்யப்பட்டது. இதனால் அமெரிக்காவில் பல்வேறு விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.செலவை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் பல விமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள முன்னணி விமான நிறுவனமான அமெரிக்கன் ஏர்லைன் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறின. இதை சமாளிக்க 25 மில்லியன் டாலர் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. அந்த நிதியும் காலியானதால், செப்.ர் 1 ம் தேதி முதல் 19 ஆயிரம் விமான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.அரசு நிதி வழங்கும் பட்சத்தில் இந்த வேலை இழப்பு தவிர்க்கப்படலாம் இல்லையேல் 19 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்க முடிவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt

சிங்கப்பூரில் 'மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர்' 26.08.2020

சிங்கப்பூரில் 'மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர்'  26.08.2020 


ஆப்பிள் நிறுவனம் சிங்கப்பூரில் தனது மூன்றாவது புதிய ஸ்டோரை திறக்க உள்ளது. மெரினா பே சாண்ட்ஸில் உலகின் முதல் மிதக்கும் சில்லறை விற்பனை ஸ்டோராக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் இணையதளமான டுடேயின் அறிக்கையின்படி, புதிய ஆப்பிள் ஸ்டோர் மெரினா பே சாண்ட்ஸில் மிதக்கும் கோள வடிவில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆப்பிள் மெரினா பே சாண்ட்ஸ் சிறந்த படைப்பாற்றலாக இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆர்வத்தையும், கவனத்தையும் ஈர்ப்பதற்காக ஒரு புது முயற்சியாக வித்தியாசமான இந்த ஸ்டோரை உருவாக்கியுள்ளோம் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் சிங்கப்பூரில் தனது முதல் ஸ்டோரை ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள நைட்ஸ்பிரிட்ஜ் கட்டிடத்தில் கடந்த 2017-இல் திறந்தது. ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் அமைந்துள்ள அதன் இரண்டாவது ஸ்டோர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திறக்கப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவில் திறக்கப்பட்ட முதல் ஆப்பிள் ஸ்டோர் 'ஆப்பிள் ஆர்ச்சர்ட் சாலை' என்பது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt

மன்னிப்பு கேட்க பூஷண் மீண்டும் மறுப்பு: தண்டனை விவரம் ஒத்திவைப்பு

மன்னிப்பு கேட்க பூஷண் மீண்டும் மறுப்பு: தண்டனை விவரம் ஒத்திவைப்பு

26.08.2020

புது தில்லி: தனது கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாகக் கூறிவிட்ட நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை தொடர்பான விவரங்களை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

நீதித் துறையை விமர்சித்து சமூக ஆர்வலரும், வழக்குரைஞருமான பிரசாந்த் பூஷண் சுட்டுரையில் 2 பதிவுகள் வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவுகள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் கூறி உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. இது தொடர்பாக, பிரசாந்த் பூஷண் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் கடந்த 20 ஆம் தேதி உத்தரவிட்டது. அவர் மன்னிப்புக் கேட்க மறுத்ததை அடுத்து, இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரை மணி நேரம் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மீண்டும் விசாரணை தொடங்கியபோது, தனது கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், நீங்கள் ஏற்படுத்திய காயத்தை நீங்கள் தான் சரி செய்ய வேண்டும். மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் போன்றோர் நீதித் துறைக்கு எதிராக பதிவிடும் சிறிய கருத்தும் பெரிதாகப் பார்க்கப்படும். நீதித் துறையைச் சேர்ந்தோர் கூறும் கருத்துகள் மக்களிடையே நீதித் துறை மீதான நம்பிக்கையை நீர்த்துப் போகச் செய்யும். மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? அது என்ன அவ்வளவு மோசமான வார்த்தையா? என்று கூறினர்.

உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா பேசுகையில், எத்தனை நாளுக்குத்தான் நீதிபதிகள் வாய் மூடி மௌனமாக இருப்பது. தங்களை தற்காத்துக் கொள்ள நீதிபதிகளிடம் எந்த ஆயுதமும் இல்லை. நீதிபதிகளையும், நீதித்துறையின் மாண்புகளையும் காக்க வழக்குரைஞர்கள்தான் உதவ வேண்டும் என்று கூறினார்.

இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை தொடர்பான விவரங்களை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக மன்னிப்புக் கேட்க முடியாது என்று கூறி உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷண் திங்கள்கிழமை தாக்கல் செய்த பதில் மனுவில், நீதித் துறையில் தவறுகள் நடைபெறும்போது அதனை சுட்டிக் காட்டுவது எனது கடமை. அதன் அடிப்படையிலேயே கருத்து தெரிவித்தேனே தவிர, உச்சநீதிமன்றத்துக்கு எதிராகவோ, குறிப்பிட்ட தலைமை நீதிபதிக்கு எதிராகவோ கருத்து தெரிவிக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தைக் காக்கும் பணியில் இருந்து தடம் மாறுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதற்காகவே ஆக்கபூர்வமாக விமர்சனம் செய்திருந்தேன்.

சுட்டுரையில் நான் தெரிவித்த கருத்துகளில் உறுதியாக இருக்கிறேன். குடிமகனாகவும், வழக்குரைஞராகவும் பொது வெளியில் கருத்துகளைத் தெரிவிப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

எனவே எனது கருத்துக்கு நிபந்தனையுடன் அல்லது நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பது என்பது எனது மனசாட்சிக்கு எதிரானதும், போலியானதும் ஆகிவிடும்.

மக்களின் அடிப்படை உரிமைகளையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதில் கடைசி நம்பிக்கையாக உச்சநீதிமன்றமே விளங்குகிறது.

குழப்பம் நிறைந்த இந்தக் காலகட்டத்தில் சட்டத்தின் ஆட்சியையும், அரசியலமைப்பு சட்டத்தையும் உச்சநீதிமன்றமே காக்கும் என மக்கள் நம்புகின்றனர். இந்த நீதிமன்றத்தின் மீது மிகப் பெரிய மதிப்பு வைத்துள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கில், பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. மன்னிப்பு கேட்கும்படி உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டும், அதனை பிரசாந்த் பூஷண் நிராகரித்துவிட்டார். எனவே, அவருக்கு 6 மாதம் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.2 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கருதப்படுகிறது.

Dailyhunt

NEWS TODAY 30.03.2026