Friday, March 22, 2019

மருந்தாளுநர் பணிக்கு போலி நியமன ஆணை: அமைச்சரின் உதவியாளர் உட்பட 3 பேர் கைது

Published : 20 Mar 2019 08:54 IST

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதியைச் சேர்ந்தவர் முத்துராசு மகன் கார்த்திகேயன்(23). இவர், தன்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுநராக நியமனம் செய்யுமாறு அரசாணை, பணி நியமன ஆணை போன்றவற்றை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திடம் நேற்று முன்தினம் அளித்துள்ளார்.

அதில், பணி நியமன ஆணை போன்ற கடிதத்தில் முதல்வர் மீனாட்சி சுந்தரம் கையெழுத்திட்டதாக இருந்துள்ளது.

தான் கையெழுத்திடாத நிலை யில், பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருப்பது குறித்து அதிர்ச்சியடைந்த மீனாட்சிசுந்தரம், இதுகுறித்து புதுக்கோட்டையில் உள்ள மாவட்டக் குற்றப் பிரிவில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக ஆய்வாளர் லட்சுமி மேற்கொண்ட விசாரணையில் கறம்பக்குடி அருகே உள்ள நரங்கியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பசுபதி மகன் பிரபாகரன்(33) என்பவர் மூலம் புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியைச் சேர்ந்தவரும் அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் உதவியாளராகவும் இருந்த விக்னேஷ் என்ற விக்னேஷ்வரன்(25) என்பவர் ரூ.2 லட்சத்தை வாங்கிக்கொண்டு மருத்துவக் கல்லூரி முதல்வரின் கையெழுத்தை போலியாக இட்டு, போலி பணி நியமன ஆணை தயாரித்து தந்தது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திகேயன், பிரபாகரன் மற்றும் விக்னேஷ்வரன் ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.

No comments:

Post a Comment

HC confirms death for man who killed mother, ‘cooked’ organs

HC confirms death for man who killed mother, ‘cooked’ organs  Swati.Deshpande@timesofindia.com 02.10.2024  Mumbai : Bombay HC on Tuesday con...