Sunday, March 3, 2019

எழும்பூர் -கொல்லம்மார்ச் 5 முதல் தினசரி ரயில் : விருதுநகர்-செங்கோட்டை வழித்தடத்தில் கிடைத்தது கூடுதல் ரயில்

Added : மார் 03, 2019 04:33


ஸ்ரீவில்லிபுத்துார்:சென்னை எழும்பூரிலிருந்து கொல்லத்திற்கு திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக மார்ச் 5 முதல் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூரிலிருந்து (ரயில் எண்.16101) தினமும் மாலை 5:00 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம் 5:28, விருத்தாசலம் இரவு 8:13, திண்டுக்கல் அதிகாலை 12:15, மதுரை 1:10, விருதுநகர் 2:13, சிவகாசி 2:39, ஸ்ரீவில்லிபுத்துார் 2:54, ராஜபாளையம் 3:08, செங்கோட்டை 5:10, ஆரியங்காவு 5:54 வழியாக 8:45 மணிக்கு கொல்லம் வந்தடைகிறது.

கொல்லத்திலிருந்து (ரயில் எண்:16102) தினமும் காலை 11:45 மணிக்கு புறப்பட்டு புனலுார் 12:35, தென்மலை 1:38, ஆரியங்காவு 2:03, செங்கோட்டை 3:10, தென்காசி 3:28, கடையநல்லுார் 3:44, ராஜபாளையம் 4:38, ஸ்ரீவில்லிபுத்துார் 4:42, சிவகாசி 4:56, விருதுநகர் 5:23, மதுரை மாலை 6:30, திண்டுக்கல் இரவு 7:55, திருச்சி 9:15, விருத்தாசலம் 11:23, விழுப்புரம் அதிகாலை 12:25, செங்கல்பட்டு 2:13, தாம்பரம் 2:43 மணிக்கு வந்து 3:30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது.

14 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 2 மூன்றாம் வகுப்பு ஏ.சி.,பெட்டிகள், 8 சிலிப்பர் பெட்டிகள், தலா 2 முன்பதிவில்லா பெட்டிகள் உள்ளன. இதற்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.இந்த ரயில் இயக்கப்படுவதன் மூலம் பல ஆண்டுகளுக்கு பிறகு விருதுநகர்- செங்கோட்டை வழித்தடத்தில் சென்னைக்கு கூடுதலாக ஒரு ரயில் கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024