Saturday, March 16, 2019


ரூ.37 லட்சம் ஏலச்சீட்டு மோசடி :ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை

Added : மார் 16, 2019 04:41


கடலுார்:ஏலச்சீட்டு நடத்தி, 38 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை முன்னாள் ஊழியருக்கு, கடலுார் கோர்ட்டில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன், 43; சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பிளம்பர். இவன், 2012ல் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தியுள்ளார். ஏலச்சீட்டில் பணம் கட்டிய, அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக்கல்லுாரியில் நர்சாக பணிபுரியும், சித்ரா, 46 உள்ளிட்ட, 56 பேருக்கு, 38 லட்ச ரூபாயை திருப்பிக்கொடுக்காமல் பாலசுப்ரமணியன் ஏமாற்றியுள்ளார்.
இது குறித்து, சித்ரா கொடுத்த புகாரின் படி, பாலசுப்ரமணியன் மீது,கடலுார் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், 2014 டிச., 8ல் வழக்கு பதிந்தனர்.இவ்வழக்கு விசாரணை, கடலுார் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இவ்வழக்கை விசாரித்த, நீதிபதி ரவி நேற்று தீர்ப்பு கூறினார். பாலசுப்ரமணியனுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை, 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 01.10.2024