Friday, March 22, 2019

அமெரிக்க அரசு வங்கிக் கணக்கில் இந்தியா செலுத்திய ரூ.20,000 கோடியை கண்டுபிடித்த பாரிக்கர்

Published : 20 Mar 2019 07:50 IST

புதுடெல்லி




மனோகர் பாரிக்கர்


ஆயுத கொள்முதலுக்காக அமெரிக்க அரசின் வங்கிக் கணக்கில் இந்தியா செலுத்திய ரூ.20,676 கோடி நீண்டகாலமாக கவனிக்கப்படாமல் இருந்தது. அந்த தொகையை மனோகர் பாரிக்கர் கண்டுபிடித்து வரவு, செலவு கணக்குக்கு கொண்டு வந்தார்.

கோவா முதல்வராக இருந்த பாரிக்கர் கடந்த 2014 நவம்பரில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவியேற்றார். அவர் பொறுப்பேற்றவுடன் பாதுகாப்புத் துறையின் நிதி நிர்வாகத்தை சீர்படுத்தினார்.

பழைய கணக்குகளை தூசி தட்டினார். அப்போது அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் வங்கிக் கணக்கில் ஆயுதங்கள் வாங்குவதற்காக இந்திய தரப்பில் ரூ.20,676 கோடி செலுத்தப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார். நிர்வாக குளறுபடிகளால் அந்த பணம் பயன்படுத்தப்படாமல் இருந்தது.

நீண்ட காலமாக மறக்கப்பட்டு, கவனிக்கப்படாமல் இருந்த ரூ.20,676 கோடியையும் வரவு, செலவு கணக்குக்கு கொண்டு வந்த பாரிக்கர், அமெரிக்காவுடனான ஆயுத கொள்முதல் தொகைக்கு ஈடுகட்டினார். இதன் மூலம் கடந்த 2016-ம் ஆண்டு பாதுகாப்புத் துறையின் ஆயுத கொள்முதல் செலவு பெருமளவு குறைந்தது.

சில நிறுவனங்களுக்கு பணம்செலுத்தப்பட்ட நிலையில் அந்த நிறுவனங்கள் பொருட்களை விநியோகம் செய்யாமல்இருப்பதை பாரிக்கர் கண்டுபிடித்தார். இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க பாதுகாப்புத் துறையின் ஒப்பந்தங்கள், பணப் பரிமாற்றங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார்.

கடந்த 2016-ம் ஆண்டு பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறையின் மூலதன செலவுக்கு ரூ.77,798 கோடி ஒதுக்கப்பட்டது. பாரிக்கரின் நிர்வாகத் திறமை, சிக்கனத்தால் ரூ.9,000 கோடி வரை மிச்சப்படுத்தப்பட்டது. தனிப்பட்ட வாழ்வில் எளிமை, சிக்கனத்தைக் கடைப்பிடித்த பாரிக்கர், அரசு நிர்வாகத்திலும் சிக்கனத்துக்கு முதலிடம் அளித்தார்.

No comments:

Post a Comment

Airline fined ₹75k for delayed return of passenger’s baggage

Airline fined ₹75k for delayed return of passenger’s baggage Vineet.Upadhyay@timesofindia.com 02.10.2024  New Delhi : Holding an internation...