Friday, April 12, 2019

அரசு டாக்டர்கள் ஆதரவு யாருக்கு?

Added : ஏப் 11, 2019 22:05


'தமிழக அரசு தெரிவிக்கும் முடிவை பொறுத்தே, யாருக்கு ஆதரவு என, தீர்மானிப்போம்' என, தமிழக அரசு டாக்டர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும், அரசு மருத்துவமனைகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், 'தகுதிக்கேற்ற ஊதியம் வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டங்களில் ஈடுபட்டனர். இவர்களுடன் பேச்சு நடத்திய அரசு, விரைவில் கோரிக்கையை நிறைவேற்றுவ தாக உறுதி அளித்தது.காலங்கள் கடந்தும் பலன் கிடைக்காததால், அரசு டாக்டர்கள், நீதிமன்றம் சென்றனர்.
மதுரை உயர் நீதிமன்ற கிளையில், வழக்கு நடந்து வருகிறது. இவ்வழக்கு, வரும், 15ம் தேதி விசாரணைக்கு வருகிறது.இதுகுறித்து, அனைத்து அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:'தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும், அரசு டாக்டர்களின் கோரிக்கைகள் தொடர்பான நிலைப்பாட்டை, வரும், 15ம் தேதி, அரசு தெரிவிக்க வேண்டும்' என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எங்களுக்கு சம்பள உயர்வு வழங்கினால், ஆண்டுக்கு கூடுதலாக, 200 கோடி ரூபாய் தான் செலவாகும். அரசு நல்ல முடிவை தெரிவிக்கும் என்று நம்புகிறோம். அரசு எடுக்கும் முடிவுக்கேற்ப, தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை தீர்மானிப்போம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 02.10.2024