தனியார் கல்லூரி முதலாளியா சுரப்பா: ராமதாஸ்
Added : ஏப் 23, 2019 23:22
சென்னை, 'அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா, கல்வியாளராக செயல்படாமல், தனியார் கல்லுாரி முதலாளி போல செயல்படுகிறார்' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:அண்ணா பல்கலை பணியாளர்களுக்கு, ஊதியம் தர நிதி தேவைப்படுவதால், கல்வி கட்டணம் உயர்த்தப்படுவதாக, சுரப்பா கூறியுள்ளார். அண்ணா பல்கலை துணைவேந்தர் என்ற நிலையில் இருப்பவரிடமிருந்தோ, கல்வியாளரிடமிருந்தோ, இப்படி ஒரு விளக்கம், ஒருபோதும் வந்ததில்லை; வரவும் கூடாது.கல்லுாரிகளை, லாப நோக்கத்துடன் நடத்தும் தனியார் முதலாளிகளிடம் இருந்து தான், இப்படி ஒரு விளக்கம் வெளிப்படும். இதன்படி பார்த்தால், சுரப்பா கல்வியாளராக செயல்படாமல், தனியார் கல்லுாரி முதலாளி போல செயல்படுகிறார். அண்ணா பல்கலைக்கு மத்திய அரசும், தமிழக அரசும், தாராளமாக மானியம் வழங்குகின்றன. உறுப்பு கல்லுாரிகளை நடத்துவதில், நிதி நெருக்கடி இருந்தால், அதுகுறித்து அரசிடம் தெரிவித்து, தேவையான நிதியை பெறலாம்.உலக அளவில் ஏற்பட்டு வரும், நான்காம் தொழில் புரட்சி காரணமாக, பெருமளவில் வேலையிழப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. இதைத் தடுக்கவும், நான்காம் தொழில் புரட்சியின் தேவைகளை நிறைவேற்றவும் வசதியாக, புதிய பாடத் திட்டங்களையும், படிப்புகளையும் உருவாக்கும் பணியில், அண்ணா பல்கலை தீவிரமாக ஈடுபட வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்
No comments:
Post a Comment