பாலின மாற்று சிகிச்சை செய்தவரும் இந்து திருமணச் சட்டத்தில் மணமகள்தான்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
By DIN | Published on : 23rd April 2019 07:19 PM |
சென்னை: பாலின மாற்று சிகிச்சை செய்தவரும் இந்து திருமணச் சட்டத்தில் மணமகள்தான் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த சிரிஜா என்ற பாலின மாற்று சிகிச்சை செய்து கொண்ட திருநங்கைக்கும், அருண்குமார் என்ற இளைஞருக்கும் திருமணம் செய்ய இருவீட்டாரும் பேசி முடிவெடுத்தனர்.
அதன்படி அவர்கள் அங்குள்ள கோயில் ஒன்றின் நிர்வாகத்தை அணுகிய போது, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்து விட்டது. ஆனால், கடும் போராட்டத்துக்கு பின்னர் அவர்கள் திருமணம் கடந்த மாதம் நடைபெற்றது.
பின்னர் அவர்கள் தங்கள் திருமணத்தை பதிவு செய்யுமாறு கோரி பதிவாளரை அணுகியுள்ளனர். ஆனால் அவர்களது திருமணத்தை இந்து திருமணச் சட்ட விதிகளின் படி பதிவு செய்ய இயலாது என்று பதிவாளர் மறுப்பு தெரிவித்து விட்டார்.
இதனை எதிர்த்து தம்பதியர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது தமிழ் பாரம்பரியம் மற்றும் சம்மந்தப்பட்ட இரு தரப்பின் தனிச் சட்டங்கள் உள்ளிட்டவைகளின் விதிகளில் பதிவாளர் திருப்தியாகவில்லை எனில் எந்த ஒரு திருமண பதிவு விண்ணப்பத்தையும் அவரால் நிராகரிக்க முடியும் என தமிழக அரசு கடுமையாக வாதத்தை முன்வைத்து எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால் இந்த வழக்கில் திங்களன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் பாலின மாற்று சிகிச்சை செய்தவரும் இந்து திருமணச் சட்டத்தில் மணமகளாகத்தான் கருதப்படுவார் என்று கூறியதோடு, இந்து திருமணச் சட்டத்தின்படி அவர்களது திருமணம் செல்லும் எனவும் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அவர்களது திருமணத்தை முறைப்படி பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment