Thursday, April 25, 2019

திருப்பதி, 'டெபாசிட்' ரூ.12 ஆயிரம் கோடி

Updated : ஏப் 25, 2019 05:01



திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம், பல்வேறு வங்கிகளில் செய்துள்ள, முதலீடுகள், 12 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.

ஆந்திராவில் உள்ள, உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானம், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் இதர வருவாயை, வங்கிகளில், 'டெபாசிட்' செய்கிறது.இவ்வாறு, பல்வேறு வங்கிகளில் செய்துள்ள, டெபாசிட் அளவு, 12 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதற்கு வட்டியாக, ஆண்டுக்கு, 845 கோடி ரூபாய் கிடைக்கும் என, தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தேவஸ்தானத்திடம், 8.7 டன் தங்கம் உள்ளது. இதைத் தவிர, 550 கிலோ தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் உள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024