Thursday, April 25, 2019

மாற்றப்பட்ட பணம் எவ்வளவு? வேலுார் கனரா வங்கியில் விசாரணை!

Added : ஏப் 24, 2019 23:09

வேலுார், கனரா வங்கியில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, எவ்வளவு பணம் மாற்றப்பட்டது என்பது குறித்து, வங்கி அதிகாரிகளிடம், நிதித்துறை சேவைகளை கண்காணிக்கும் அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, வேலுாரில் உள்ள கனரா வங்கியில், கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டன.இதற்கு உடந்தையாக இருந்த, வங்கியின் மண்டல மேலாளரும், தி.மு.க., பொருளாளர், துரைமுருகனின் உறவினருமான தயாநிதி, கிளை மேலாளர், சிங்காரம் உட்பட, மூன்று அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், இந்த வங்கியில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, எவ்வளவு தொகை மாற்றப்பட்டது என்பது குறித்து, விசாரணை துவங்கி உள்ளது. விசாரணை அதிகாரிகள் கூறியதாவது:வேலுார் கனரா வங்கியில் நடந்த சம்பவம், மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.தேர்தலுக்காக, பெரிய தொகையை மாற்றியவர்கள், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, எவ்வளவு தொகை மாற்றி இருப்பர் என்ற கேள்வி எழுந்தது.இது தொடர்பாக, நிதி துறை சேவைகளை கண்காணிக்கும் அதிகாரிகள், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமும், துறை ரீதியிலான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...