Monday, April 8, 2019


'எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன்'


Added : ஏப் 08, 2019 06:30

மதுரை:''தெர்மொகோல் விஷயத்தில், பொறியாளர் செய்த தவறால், ராஜுவான என்னை, 'தெர்மொகோல் ராஜு' என்று சமூக வலைதளங்கள் பரவ செய்தன,'' என, மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு நொந்தபடி கூறினார்.

மதுரை, ரேஸ்கோர்ஸ் ஜாகிங் கிளப்பில், நடை பயிற்சி மேற்கொண்டவர்களிடம், அ.தி.மு.க., வேட்பாளர், ராஜ்சத்யனுக்கு ஆதரவாக, அமைச்சர் ராஜு ஓட்டு சேகரித்தார்.அமைச்சர் பேசிய தாவது: கலிபோர்னியாவில் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின்படி, வைகை அணையில் தெர்மொகோல் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது.

தெர்மொகோல் விஷயத்தில் பொறியாளர் செய்த தவறால், ராஜுவான என்னை, 'தெர்மொகோல் ராஜு' என்று சமூக வலைதளங்கள் பரவ செய்தன.மதுரையில், எருமை மாட்டை குளிப்பாட்டினால் கூட, மக்கள் கூடி வேடிக்கை பார்ப்பர். அதுபோல தான், நடிகர் - நடிகையரின் பிரசாரத்திற்கு கூடும் கூட்டம். அந்த கூட்டம் எல்லாம், ஓட்டாக மாறி விடாது.

நடிகை குஷ்புவுக்காக கூடும் கூட்டத்தினர், தேர்தலில் ஓட்டளிக்க மாட்டார்கள். நடிகர் வடி வேலுக்கு பெரியளவில் கூட்டம் கூடியது. அவர்கள், தி.மு.க.,விற்கு ஓட்டளிக்கவில்லை.தற்போது, தி.மு.க.,வினர், '2ஜி' ஊழல் செய்து வைத்திருந்த பணத்தை வெளியே எடுக்கின்றனர்.

தொடர்ந்து, தி.முக., பிரமுகர்களிடமிருந்து அதிக பணம் வெளியே வரும். தி.மு.க., பொருளாளர், துரைமுருகன் வீட்டில், வருமான வரித்துறையினர் கைப்பற்றிய பணம், யாரோ கொண்டு வந்து வைத்தது என்பது முறையற்ற பதில்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024