முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்புவது எப்படி?
Added : ஏப் 13, 2020 01:04
சென்னை : முதல்வர் நிவாரண நிதிக்கு, நிதி செலுத்தும் முறைகள் குறித்து, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, நிதியுதவி வழங்கும்படி, முதல்வர், இ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையேற்று, பலரும் நிவாரண நிதியை அனுப்பி வருகின்றனர்.அதேநேரம்,googlepay, paytmபோன்றவற்றின் வாயிலாக, நிவாரண நிதி அனுப்பு வழிவகை செய்ய வேண்டும் என, மக்கள் கோரி வருகின்றனர்.இந்நிலையில், நிவாரண நிதியை எவ்வாறு அனுப்பலாம் என்பது குறித்து, தமிழக அரசு அளித்துள்ள விளக்கம்:யு.பி.ஐ., செயல்படுத்தப்படும் ,அனைத்து வங்கிகள் மற்றும்,phonepe, googlepay, paytm, mobikwikபோன்ற தளங்களின், 'மெபைல் ஆப்'பில், இதற்கான வசதி ஏற்கனவே உள்ளது.
வங்கி அல்லது தளத்தின் பயன்பாட்டில், யு.பி.ஐ., விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின்,upi vpa tncmprf@iobஐ,டைப் செய்து, உள்ளே சென்று, நன்கொடை அளிக்க வேண்டிய தொகையை, உறுதிப்படுத்த வேண்டும்இது தவிர, வங்கி இணைய சேவை கடன் அட்டை அல்லது பற்று அட்டை வழியே,https://ereceipt.tn.gov.in/cmprf.cmprf.htmlஎன்ற இணையதளத்தில் செலுத்தலாம்குறுக்கு கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலையை, 'அரசு துணை செயலர் மற்றும் பொருளாளர், கொரோனா நிவாரணத்திற்கான முதல்வர் பொது நிவாரண நிதி, தமிழ்நாடு, இந்தியா' என்ற முகவரிக்கு அனுப்பலாம். ''
இ.சி.எஸ்., வழியே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு அனுப்பலாம். வங்கி சேமிப்பு கணக்கு எண்,117201000000070;ஐ.எப்.எஸ்., குறியீடு;ioba0001172; CMPRF PAN; AAAGC0038F.இவ்வழிகளில், பொதுமக்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு, தங்களால் முடிந்த நிதியுதவியை அளிக்கலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment