Saturday, April 25, 2020

காஞ்சி, செங்கல்பட்டில் முழு ஊரடங்கு பகுதிகள்

Added : ஏப் 24, 2020 23:51

'காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளிலும், நாளை முதல், நான்கு நாட்களுக்கு, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்' என, இரு மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம்

தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், செம்பாக்கம் நகராட்சிகள்; பீர்க்கன்கரணை, பெருங்களத்துார், சிட்லபாக்கம், திருநீர்மலை, மாடம்பாக்கம் பேரூராட்சிகள்; அகரம்தென், மதுரப்பாக்கம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், வேங்கைவாசல், மூவரசம்பட்டு, திரிசூலம், பொழிச்சலுார், கவுல்பஜார், சித்தாலபாக்கம், ஒட்டியம்பாக்கம், திருவஞ்சேரி, முடிச்சூர், பெரும்பாக்கம், நன்மங்கலம், கானாத்துார் ரெட்டிக்குப்பம், முட்டுக்காடு ஊராட்சிகள்; சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட, செங்கல்பட்டு மாவட்ட பகுதிகள்.

காஞ்சிபுரம் மாவட்டம்

மாங்காடு, குன்றத்துார் பேரூராட்சிகள்; அய்யப்பன்தாங்கல், பரணிபுத்துார், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், கோவூர், தண்டலம், தரப்பாக்கம், இரண்டாம்கட்டளை, மவுலிவாக்கம், பெரியபணிச்சேரி, நந்தம்பாக்கம், சிறுகளத்துார், கொல்லச்சேரி, கொழுமணிவாக்கம், சிக்கராயபுரம், பூந்தண்டலம், மலையம்பாக்கம், திருமுடிவாக்கம் ஊராட்சிகள் மற்றும் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட, காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகள் முழுதும், நான்கு நாட்கள், ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024