Saturday, April 4, 2020

கொரோனா நிவாரணத்தொகை ரூ.1000 நாளை வீடு வீடாக வினியோகம்

பதிவு: ஏப்ரல் 04, 2020 16:04 IST

தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண உதவித் தொகை 1000 ரூபாய் நாளை வீடு வீடாக சென்று வழங்குவதுடன், நிவாரணப் பொருட்கள் பெறுவதற்கான தேதி குறிப்பிடப்பட்ட டோக்கன்களும் நேரில் வழங்கப்பட உள்ளது.

ஆயிரம் ரூபாய்

சென்னை:

தமிழகம் முழுவதும் 2 கோடியே 10 ஆயிரம் ரேசன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கப்பணம் மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் மட்டுமே அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நிவாரணத் தொகை ரூ.1000 மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான பொருட்கள் வழங்கும் பணி கடந்த 2-ந்தேதி ரேசன் கடைகளில் தொடங்கப்பட்டது. இதனை பெற ரேசன் கடைகளில் பொதுமக்கள் குவியத் தொடங்கினர்.

இதன் காரணமாக நிவாரணத்தொகை ரூ.1000-த்தை வீடு, வீடாக சென்று வினியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ரூ.1000 ரொக்கப்பணம் மற்றும் பொருட்களை ரேசன் கடைகளில் வினியோகம் செய்யும் நடைமுறை இன்றுடன் நிறுத்தப்படுகிறது.

ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு மட்டும் நிவாரண உதவித் தொகையும், பொருட்களும் ரேசன் கடைகளில் இன்று வழங்கப்பட்டது. இந்த பணி முடிந்ததும் இன்றைய தினமே வீடு வீடாக சென்று பொருட்களுக்கான டோக்கன் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) ரேசன் கடைகள் இயங்காது. நாளை வீடு வீடாக சென்று அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கான தேதி குறிப்பிடப்பட்ட டோக்கன்களை அளிப்பதுடன் நிவாரண உதவித் தொகைநேரில் வழங்கப்பட உள்ளது. நாளையே நிவாரண உதவித்தொகை முழுவதும் வழங்கி முடிக்கப்பட உள்ளது.

ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு வருகிற 6-ந்தேதி ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். விடுபட்டவர்களுக்கு விற்பனை இணைய எந்திரத்தின் மூலமாக நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும்.

வருகிற 7-ந்தேதி முதல் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே வழங்க வேண்டும். 7-ந்தேதி முதல் நிவாரண உதவித்தொகையான ரூ.1000 ரேசன் கடைகளில் வழங்கப்படாது. டோக்கன் வழங்கப்படும்போதே ரேசன் கார்டுதாரர்களுக்கு டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் பொருட்கள் மட்டுமே வழங்கப்படும். வீடுகளுக்கு சென்று நிவாரண நிதி, டோக்கன்களை வினியோகம் செய்யும் நபர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களான முகக்கவசங்கள், கையுறை, கிருமி நாசினி ஆகியவை போதுமான அளவு வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024