Monday, May 4, 2020

சமூக இடைவெளி: மதுரையில் குடை பிடித்து நின்ற மக்கள்


சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் மதுரையில் நியாயவிலைக் கடைகளுக்கு வந்த மக்கள் குடை பிடித்து நின்றனர்.

கரோனா தீநுண்மி தொற்று பரவலைக் கடைபிடிக்க பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது வலியுறுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் கேரளத்தில் குடை பிடித்தவாறு நின்று சமூக இடைவெளியைப் பின்பற்றிய புகைப்படம் ஊடகங்களில் வெளியானது.

பொது இடங்களுக்கு வரும்போது இதே நடைமுறையைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதார்ர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.


இதையடுத்து கடைகள் முன்பு இடைவெளிவிட்டு வரிசையில் நிற்கும் வகையில் அடையாளக் குறியீடு வரையப்பட்டிருந்தது. மதுரை மாவட்டம் அரும்பனூர் உள்ளிட்ட சில பகுதிகளில் ரேஷன் கடைக்கு வந்த மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையிலும் கோடை வெயிலின் உக்கிரத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் குடை பிடித்து வரிசையில் நின்றனர்.

Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024