'கொரோனா வைரஸ் பரவும் திறன் 10 நாள் மட்டுமே'
Updated : அக் 03, 2020 05:19 | Added : அக் 03, 2020 05:18
கோவை: 'கொரோனா வைரஸின் பரவும் திறன் ஒருவரது உடலில் 10 நாட்களுக்கு மட்டுமே இருக்கும்' என்று அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் மனித உடலில் எவ்வளவு நாட்கள் இருக்கும் என்பது பற்றி அமெரிக்காவின் அட்லாண்டா நகரை சேர்ந்த முன்னணி மருத்துவ அமைப்பு ஆய்வு நடத்தி முடிவை தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை செயலர் டாக்டர் ரவிக்குமார் கூறியதாவது: கொரோனா வைரஸ் மனித உடலில் 90 நாட்கள் வரை இருக்கும் என்பது தவறான புரிதல். இந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவும் திறனுடன் 10 நாட்கள் மட்டுமே மனித உடலில் இருக்கும். கடும் நோய் பாதிக்கப்பட்டவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களது உடலில் பரவும் திறனுடன் இந்த வைரஸ் அதிகபட்சம் 20 நாட்கள் வரை இருக்க வாய்ப்புள்ளது.
அதற்கு மேல் மனித உடலில் வைரஸ் சிதறல்கள் இருந்தாலும் அவை செயலற்றதாகவே இருக்கும்.இந்த காலகட்டத்தில் நோய் பரிசோதனை செய்தால் 'பாசிட்டிவ்' என்று கூட முடிவு வரலாம். அதில் பயப்பட எதுவுமில்லை. மருத்துவர் அறிவுரைப்படி 14 நாட்கள் மட்டும் தனிமையில் இருந்தாலே வைரஸ் மற்றவர்களுக்கு பரவாமல் தடுத்து விட முடியும். இவ்வாறு டாக்டர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment