Tuesday, January 19, 2021

எம்.பி.பி.எஸ்., வகுப்புகள் நாளை துவக்கம்

எம்.பி.பி.எஸ்., வகுப்புகள் நாளை துவக்கம்

Added : ஜன 18, 2021 23:39

சென்னை : முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான, எம்.பி.பி.எஸ்., - - பி.டி.எஸ்., வகுப்புகள் நாளை துவங்குகின்றன.அனைத்து மாணவர்களுக்கும், கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளின் முதல்வருக்கு, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மருத்துவ மாணவர்களுக்கான அறிமுக வகுப்பு, வரும், 20ல் துவங்க வேண்டும். முறையாக வகுப்புகள், பிப்., 2ல் துவங்கலாம். மாணவர்களுக்கு கொரோனா கண்டறியும், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை மற்றும் இதர மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டும்.ஆள் மாறாட்டத்தை தடுக்க, அனைத்து மாணவர்களின் கல்வி, ஜாதி சான்று உள்ளிட்ட ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும். மாணவர்களின் பெருவிரல் ரேகை, விழித்திரையை பதிவு செய்ய வேண்டும்.

மாணவர்களின் சமீபத்திய புகைப்படத்தை பெற வேண்டும். அனைத்தையும் கண்காணிப்பு கேமரா வாயிலாக பதிவு செய்ய வேண்டும். பின், அனைத்து ஆவணங்களையும், மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. கட்டுப்பாடு என்ன? மாணவர்கள், ஜீன்ஸ் பேன்ட், டி- - சர்ட், ஸ்லீவ்லெஸ் போன்ற மேலாடைகளை அணியக்கூடாது; பேன்ட், சட்டை அணிந்து, 'டக் இன்' செய்தும், ஷூ அணிந்தும் வர வேண்டும் மாணவியர் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற ஆடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும்; லெக்கின்ஸ் ஆடையை அணிந்து வரக்கூடாது வகுப்பறையில் மொபைல் போன் உபயோகிக்க கூடாது ராகிங்கை தடுக்க பேராசிரியர்கள் கொண்ட குழுவை அமைத்து, ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024