Monday, January 4, 2021

கொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு? பதிவு செய்வது எப்படி?


கொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு? பதிவு செய்வது எப்படி?

புதுடில்லி: கொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு போடப்படும், அதற்கான நடைமுறைகள், பதிவு செய்வது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.கொரோனாவுக்கு எதிரான சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்த கோவாக்சின் தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்தி கொள்ள, இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு(டிசிஜிஐ) ஒப்புதல் வழங்கியுள்ளது. அஸ்ட்ரா ஜெனிகா மற்றும் ஆக்ஸ்போர்டு உருவாக்கிய தடுப்பூசியை 70.42 சதவீதம் பலனளிக்கிறது. பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்குகிறது என டிசிஜிஐ ஜெனரல் சோமானி தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும், கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடந்த மறுநாளில் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்த தடுப்பூசி முதலில் யாருக்கு போடப்படும், அதற்கான நடைமுறைகள் வெளியாகியுள்ளது. அதன்படி,முதலில் யாருக்கு கிடைக்கும் 1. சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி , முதல்கட்டமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த சுகாதார பணியாளர்கள், முன்கள சுகாதார பணியாளர்கள், நர்சுகள், கண்காணிப்பாளர்கள், மருத்துவ அதிகாரிகள், மருந்து அலுவலர்கள், உதவியாளர்கள் மற்றும் மாணவர்கள் என பல உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக, அரசு மற்றும் தனியார் சுகாதார பணியாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கோவின் டிஜிட்டல் வழித்தடத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.2. முன்கள மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் கொரோனா தடுப்பில் பணியாற்றிய, மாநில மற்றும் மத்திய போலீசில் பணியாற்றும் போலீசார், ஆயுதப்படைகள், பேரிடர் மேலாண்மை மற்றும் சிவில் அதிகாரிகள், சிறைத்துறை அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் வருவாய்துறை ஊழியர்களுக்கு இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வழங்கப்படும்.3. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பிரிவில் இரண்டு உட்பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில் 50 -60 வயதில், இரண்டாவது பிரிவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இடம்பெற்றவர்கள்.

இவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக அவர்களின் விவரம், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.4. பாதிப்பு அதிகம் உள்ள பகுதி மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில், கொரோனா தொற்று அதிகம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் போடப்படும்5. மற்றவர்களுக்கு எப்போது மேற்கண்டவர்களுக்கு த டுப்பூசி போட்டு முடிந்த பிறகு, மற்றவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். நோய் தொற்று மற்றும் தடுப்பூசியின் இருப்பை பொருத்து மற்றவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.பதிவு செய்வது எப்படி?

* கோவின் இணையதளத்தில் தாமாக பதிவு செய்ய வேண்டும்.* அரசு அளித்த அடையாள அட்டை அல்லது ஆதார் எட்டை நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும். இது பயோமெட்ரிக், ஓடிபி மூலம் உறுதி செய்யப்படும்.* பதிவு செய்ததும், தடுப்பூசி போடுவதற்கான நேரம் மற்றும் தேதி தெரிவிக்கப்படும்.* தடுப்பூசி போடும் இடத்தில் பதிவு செய்ய முடியாது. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே தடுப்பூசி போட அனுமதிக்கப்படுவார்கள்.* கோவின் அமைப்பை, நிர்வாகம் செய்ய வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பு. அவர்கள் தான், பயனாளர்கள்களுக்கான இடம், நேரம் ஒதுக்குவார்கள்.

இதனை கண்காணிக்கும் வகையில் மென்பொருளில் உருவாக்கப்பட்டுள்ளது.தடுப்பூசி எங்கு போடப்படும் முன்னுரிமை அளிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம்:* அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ அதிகாரி அல்லது டாக்டர் முன்னிலையில் தடுப்பூசி போடப்படும்.* பள்ளிகள், சமுதாய கூடங்களில் தடுப்பூசி போடப்படும்* ரிமோட், எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் சர்வதேச எல்லைகளில் தடுப்பூசி போட சிறப்பு மொபைல் குழுக்கள் அமைக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபட வேண்டும்.தடுப்பூசி போடப்படும் இடங்களில், 3 அறைகள் அமைக்கப்பட்டிருக்கும்.காத்திருப்பாளர் அறை- தடுப்பூசிக்காக பதிவு செய்த பின்னர் வருபவர்கள் முதலில் இங்கு தங்க வைக்கப்பட்டிருப்பார்கள்.தடுப்பூசி அறை: இங்கு தான் தடுப்பூசி போடப்படும்கண்காணிப்பு அறை: தடுப்பூசி போட்டவர்கள் 30 நிமிடம் இங்கு தங்க வைக்கப்பட்டிருப்பார்கள்யார் தடுப்பூசி போடுவார்கள் தடுப்பூசி நடவடிக்கைக்காக 5 பேர் குழு அமைக்கப்படும்1. முதல் அதிகாரி: தடுப்பூசிக்காக பதிவு செய்ததை ஆய்வு செய்வார்கள்.2. இரண்டாவது அதிகாரி: உறுதி செய்வார்.3. மூன்றாவது அதிகாரி: தடுப்பூசிக்கான பொறுப்பு அதிகாரி இவர் தான். பயிற்சி பெற்ற அதிகாரி தடுப்பூசி போடுவார்.4. நான்கு மற்றும் 5வது அதிகாரி: இவர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதுடன், தடுப்பூசி போட்டு கொண்டவர்களை 30 நிமிடம் கண்காணிப்பார்கள்.

Dailyhunt

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dinamalar

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024