Monday, January 4, 2021

மாயமான மறதி முதியவர் 'பேஸ்புக்' பதிவால் மீட்பு


மாயமான மறதி முதியவர் 'பேஸ்புக்' பதிவால் மீட்பு

Added : ஜன 04, 2021 00:18

தஞ்சாவூர்: ஞாபக மறதியால், காணாமல் போன, 87 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியரை, 'பேஸ்புக்' பதிவால், குடும்பத்தினர் மீட்டனர்.

தஞ்சாவூர், ஸ்ரீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் சுவாமிநாதன், 87; மனைவி வசந்த லட்சுமி. இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். இரு மகன்கள் திருமணமாகி, பெங்களூரில் வசித்து வருகின்றனர்.சுவாமிநாதனும், வசந்த லட்சுமியும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி சாலை ஸ்ரீநகரில் உள்ள, தங்களது சம்பந்தி கோபாலகிருஷ்ணன் வீட்டில் தங்கியுள்ளனர்.ஞாபக மறதி நோயால் அவதிப்பட்டு வரும் சுவாமிநாதன், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, வெளியே சென்றவர், வீட்டுக்கு வரும் வழியை மறந்து, வழிதவறி சென்று விட்டார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

சுவாமிநாதனின் உறவினர் அரவிந்தன், சுவாமிநாதன் போட்டோவுடன், மொபைல் எண்ணை குறிப்பிட்டு, இரவு, 9:00 மணிக்கு, 'பேஸ்புக்'கில் பதிவிட்டார். அதை பார்த்த சிலர், சுவாமிநாதனை ரொட்டி பாளையம் பகுதியில் மீட்டு, தகவல் தெரிவித்தனர். இரவு, 10:30 மணிக்கு, அவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர். சுவாமிநாதன் மருமகள் ஸ்ரீவித்யா கூறுகையில், ''பேஸ்புக்கை பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்தும் நிலையில், இதுபோன்ற நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்த முடியும் என்பதற்கு, என் மாமனாரின் மீட்பு சம்பவம் உதாரணம்,'' என்றார்.

No comments:

Post a Comment

IIM-I partners with 2 foreign varsities for dual degree

IIM-I partners with 2 foreign varsities for dual degree  TIMES NEWS NETWORK 19.09.2024  Indore : Indian Institute of Management, Indore, (II...