மருத்துவ மாணவர்கள் கல்லூரி மாற முடியுமா?
Updated : பிப் 05, 2021 05:30 | Added : பிப் 05, 2021 05:28
புதுடில்லி : 'மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே மற்றொரு கல்லுாரிக்கு மாற அனுமதிக்க முடியும்' என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அரசு அங்கீகாரம் பெறாத மருத்துவக் கல்லுாரியில் படிக்கும் மாணவர்களை அரசு கல்லுாரிகளுக்கு மாற்ற ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் கடந்தாண்டு செப்.ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து இந்திய மருத்துவக் கவுன்சில் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு தன் உத்தரவில் கூறியுள்ளதாவது:
மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கல்லுாரியில் படிக்கும் மாணவர்களை மட்டுமே மற்றொரு மருத்துவக் கல்லுாரிக்கு மாற்றுவதற்கு வாய்ப்பு அளிக்க முடியும். அங்கீகாரம் இல்லாத கல்லூரியில் படித்தவர்களை மாற்றுவதற்கு வாய்ப்பு அளிக்க முடியாது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment