Friday, February 5, 2021

மருத்துவக் கல்லுாரி வகுப்புகள் துவக்க விழா

மருத்துவக் கல்லுாரி வகுப்புகள் துவக்க விழா

Added : பிப் 05, 2021 04:30

புதுச்சேரி; புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்புகளை கல்வி நிறுவன தலைவர் தனசேகரன் துவக்கி வைத்தார்.புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது. டீன் (அகாடமி) கார்த்திகேயன் வரவேற்றார். மணக்குள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் தனசேகரன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து பேசுகையில், தங்கள் பிள்ளைகளின் படிப்பை கவனமுடனும், ஆர்வத்துடனும் பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் ஆராய்ச்சி திறனை வளர்த்து கொள்ள வேண்டும், என்றார்.துணைத் தலைவர் சுகுமாறன் எம்.எல்.ஏ., செயலாளர் நாராயணசாமி, துணை இயக்குனர் காக்னே சிறப்புரையாற்றினர். மருத்துவ கல்லுாரி டீன்கள் பாலசந்தர், டாங்கரே, மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் கிரிஜா, மணக்குள விநாயகர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் மலர்கண் உட்பட பலர் பங்கேற்றனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024