பெருந்துறை மருத்துவ கல்லுாரி கட்டணத்தை குறைக்குது அரசு?
Added : பிப் 08, 2021 23:41
சென்னை : சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரியை தொடர்ந்து, ஈரோடு, பெருந்துறை மருத்துவ கல்லுாரி கட்டணத்தையும், அரசு கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும் என, சுகாதாரத்துறை செயலரிடம், மாணவர்கள் மனு அளித்துள்ளனர்.
தமிழக போக்குவரத்து துறை நடத்தி வந்த, பெருந்துறை ஐ.ஆர்.டி., மருத்துவ கல்லுாரியை, தமிழக சுகாதாரத்துறை ஏற்றுள்ளது. ஆனால், மருத்துவ கட்டணம், பழைய நிலையிலேயே வசூலிக்கப்படுகிறது. கோரிக்கைசுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் வந்த பின், அரசு மருத்துவ கல்லுாரிகளில் வசூலிப்பது போல, கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துஉள்ளது.இந்நிலையில், கடலுார் மாவட்டம், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரியை, தமிழக அரசு ஏற்றது.
அங்கு, மாணவர்கள் நடத்தி வந்த தொடர் போராட்டத்தை அடுத்து, அங்கு அரசு மருத்துவ கல்லுாரிகளுக்கான கட்டணம் வசூலிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதன்படி, எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு, 13 ஆயிரத்து, 610 ரூபாய்; பி.டி.எஸ்., படிப்பிற்கு, 11 ஆயிரத்து, 610 ரூபாய்; பட்ட மேற்படிப்புக்கு, 30 ஆயிரம் ரூபாய்; டிப்ளமா படிப்பிற்கு, 20 ஆயிரம் ரூபாய் கட்டணம். பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு, 5,000 ரூபாய் கட்டணம்.
நம்பிக்கை : இதபோல, அரசு ஏற்றுள்ள, ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஐ.ஆர்.டி., மருத்துவ கல்லுாரியில், கல்வி கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என, தமிழக மருத்துவ மாணவர்கள் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனை சந்தித்து, மாணவர்கள் நேற்று மனு அளித்தனர். ஐந்து நாட்களில், கல்வி கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என, செயலர் நம்பிக்கை தெரிவித்ததாக, மாணவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment