பயிற்சி டாக்டருக்கு 8 மணி நேர பணி அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு
Added : பிப் 08, 2021 23:50
சென்னை : பயிற்சி டாக்டர்களுக்கு எட்டு மணி நேர பணி நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரிய வழக்கில், மருத்துவக் கல்வி இயக்குனரகம், புதிய அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர் தற்கொலை முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு எட்டு மணி நேர பணி நிர்ணயித்து, 2015ல், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை அமல்படுத்தக்கோரி, உயர் நீதிமன்றத்தில், டாக்டர் ரவீந்திரநாத், 2019 நவம்பரில், மனு தாக்கல் செய்திருந்தார்.மனுவில், 'பணிச்சுமையால், மதுரை மருத்துவ கல்லுாரியில், முதுநிலை மாணவர் உதயராஜ் தற்கொலை செய்து கொண்டார். எனவே, பணி நேரம் நிர்ணயித்து அரசு பிறப்பித்த உத்தரவை, அமல்படுத்த வேண்டும்' என, கூறப்பட்டது.
இவ்வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் தங்கசிவன் ஆஜரானார்.தள்ளிவைப்புஇவ்வழக்கு ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் இருப்பதால், மருத்துவ கல்லுாரி இயக்குனர் புதிதாக அறிக்கை தாக்கல் செய்ய, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. விசாரணையை, ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.
No comments:
Post a Comment