Tuesday, February 9, 2021

'தாம்பரம் - திண்டிவனம் சாலை நிலை என்ன?'

'தாம்பரம் - திண்டிவனம் சாலை நிலை என்ன?'

Added : பிப் 09, 2021 00:08

சென்னை : சென்னையை அடுத்த தாம்பரம் முதல் திண்டிவனம் வரையிலான சாலை நிலை குறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜ் தாக்கல் செய்த மனுவில், 'தாம்பரம் - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனுார், ஆத்துார் சுங்க சாவடிகளின் ஒப்பந்த காலம் முடிந்து விட்டது. 'அதனால், சுங்க கட்டணம் வசூலிக்கக் கூடாது. சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.இந்த சாலையின் தற்போதைய நிலை குறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை அளிக்க, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.விசாரணையை, ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024