Saturday, February 6, 2021

ஆன்லைன் வழியே ஆர்.டி.ஐ., மனு இணையதள சேவை துவக்கம் தாமதம்

ஆன்லைன் வழியே ஆர்.டி.ஐ., மனு இணையதள சேவை துவக்கம் தாமதம்

Added : பிப் 06, 2021 00:43 

சென்னை:'தகவல் அறியும் உரிமை சட்ட மனுக்களை, ஆன்லைன் முறையில் பதிவு செய்வதற்கான, புதிய இணையதள வசதியை, முதல்வர் விரைவில் துவக்கி வைக்க வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

அரசு நிர்வாகத்தில், கோப்புகள் தொடர்பான விஷயங்களை மக்கள் அறிந்து கொள்ள, ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமை சட்டம், 2005ல் இயற்றப்பட்டது.இதன்படி, மத்திய அரசு துறைகளுக்கான மனுக்களை, ஆன்லைன் முறையில் பதிவு செய்யும் வசதி, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. அதனால், மாநில அரசு துறைகள் தொடர்பான மனுக்களுக்கும், ஆன்லைன் வசதி கோரப்பட்டது.

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம், இதற்காக புதிய இணையதளத்தை உருவாக்கி உள்ளது. சோதனை முறையில், ஆர்வலர்கள் இதில் மனுக்களை பதிவு செய்தனர். தபால் வாயிலாக அனுப்புவதை காட்டிலும், இதில் மனு செய்வதும், கட்டணம் செலுத்துவதும் எளிதாக இருப்பதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வசதி நான்கு மாதங்களுக்கு மேலாக, சோதனை முறையிலேயே உள்ளது. இதை முழுமையான பயன்பாட்டுக்கு அனுமதிக்க, துவக்க விழா நடத்துவது தாமதமாகி வருகிறது. பொதுமக்கள் அலைச்சல் இன்றி, ஆன்லைன் முறையில், ஆர்.டி.ஐ., மனுக்களை பதிவு செய்ய வசதியாக, முதல்வர் இந்த திட்டத்தை விரைவில் துவக்கி வைக்க வேண்டும் என, தகவல் ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024