Saturday, February 6, 2021

'அரசு ரூ.2 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும்': அண்ணாமலை பல்கலை., ஊழியர் சங்கத் தலைவர் பேட்டி

'அரசு ரூ.2 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும்': அண்ணாமலை பல்கலை., ஊழியர் சங்கத் தலைவர் பேட்டி

Added : பிப் 06, 2021 00:36

சிதம்பரம்:'சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தமிழக அரசு 2,000 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்' என பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

நிருபர்களிடம்அவர் கூறியதாவது:சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மற்றும் பல் மருத்துவக் கல்லுாரி, ராணி மெய்யம்மை செவிலியர் கல்லுாரி ஆகியவற்றை தமிழக அரசு கையகப்படுத்தியுள்ளது.இதனால், அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தமிழக அரசு 2,000 கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

பல்கலைக்கழகத்தை அரசு ஏற்றதால் பெரும் சொத்து அரசு வசம் சென்றுள்ளது. இங்கு பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் பண பாதுகாப்பு வழங்க வேண்டும். தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.ஆசிரியர் அல்லாத 1,400 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.

பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி சிக்கலை முழுமையாகக் களைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2012ம் ஆண்டில் இருந்து ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவக் கல்லுாரிக்கு 'ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லுாரி' என பெயர் சூட்ட வேண்டும். இவ்வாறு மனோகரன் கூறினார்.

பொதுச் செயலாளர் பழனிவேல், பொருளாளர் தவச்செல்வன், இணைச் செயலாளர் புண்ணியமூர்த்தி, இணை பொருளாளர் இளஞ்செழியன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024