Saturday, February 6, 2021

குழந்தையின் கன்னத்தை தொடுவது குற்றமா?

குழந்தையின் கன்னத்தை தொடுவது குற்றமா?

Added : பிப் 05, 2021 21:16

புதுடில்லி:'பாலியல் நோக்கங்கள் இன்றி, குழந்தையின் கன்னத்தை தொடுவது, குற்றச் செயலாக கருதப்படாது' என தீர்ப்பளித்து, குற்றஞ்சாட்டப்பட்ட நபரை விடுதலை செய்து, மும்பை, 'போக்சோ' நீதிமன்றம் உத்தரவிட்டது.

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள ஒரு வீட்டில், 2017ல் நடந்த சம்பவம் இது.

அதிர்ச்சி

அந்த வீட்டில் பழுதான குளிர்சாதன பெட்டியை சரிபார்க்கச் சென்ற, 28 வயதான நபர், அங்கிருந்த, 5 வயது பெண் குழந்தையின் கன்னத்தை வருடி உள்ளார்.

இதைப் பார்த்த, அக்குழந்தையின் தாய், அந்த நபரை, வந்த வேலையை மட்டும் பார்க்கும்படி கூறிவிட்டு, குழந்தையுடன் சமையல் அறைக்குச் சென்றார். சமையல் அறைக்குள் நுழைந்த அந்த நபர், குழந்தையின் தாயை, கட்டி அணைத்துள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த பெண், அவரை வேகமாக தள்ளிவிட்டு, கூச்சலிட்டார். உடனடியாக வீட்டில் இருந்து வெளியேறும்படி, அவரை எச்சரித்துள்ளார். ஆனால் அவர், வெளியே செல்லாமல், அங்கிருந்த குழந்தையின் கன்னத்தை மீண்டும் வருடினார்.

இதையடுத்து, அந்த பெண் உடனடியாக போலீசிடம் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குற்றஞ்சாட்டப்பட்ட நபரை, கைது செய்தனர். எனினும், அவருக்கு ஜாமின் கிடைத்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த, 'போக்சோ' நீதிமன்றம், முதலில், தாயிடம் தவறாக நடந்துகொண்ட வழக்கில், அந்த நபருக்கு, ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

சர்ச்சை

இந்நிலையில், குழந்தையிடம் தவறாக நடந்த வழக்கில், நீதிமன்றம் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பளித்தது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது:பாலியல் நோக்கங்கள் இன்றி, குழந்தையின் கன்னத்தை தொடுவது என்பது, குற்றச்செயலாக கருதப்படாது. எனவே, குற்றஞ்சாட்டப்பட்ட நபர், இந்த வழக்கில் இருந்து, விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024