Saturday, February 6, 2021

ஜெ., பெயரில் புதிய பல்கலை விழுப்புரத்தில் அமைகிறது

ஜெ., பெயரில் புதிய பல்கலை விழுப்புரத்தில் அமைகிறது

Added : பிப் 05, 2021 22:03

சென்னை:வேலுார் திருவள்ளுவர்பல்கலை, இரண்டாக பிரிக்கப்பட்டு, விழுப்புரத்தில், ஜெயலலிதா பெயரில், புதிய பல்கலை துவக்கப்படுகிறது. இதற்கான சட்ட மசோதா, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

உயர் கல்வித்துறை தாக்கல் செய்த மசோதா:வேலுார் திருவள்ளுவர்பல்கலையை, இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக வைத்து, புதிய பல்கலை நிறுவப்படுகிறது.'டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலை' என்ற பெயரில், இது செயல்படும்.

திருவள்ளுவர் பல்கலையுடன் இணைந்து செயல்படும் கல்லுாரிகளில், விழுப்புரம், கடலுார் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கல்லுாரிகள், இனி, இந்த பல்கலையின் கட்டுப்பாட்டில் செயல்படும். கடலுார் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலை பல்கலை மட்டும், திருவள்ளுவர் பல்கலையுடன் இணையாமல் தனியாக செயல்படும்.

இந்த மூன்று மாவட்டங்களிலும், வேறு ஏதாவது பல்கலையுடன், கல்லுாரிகள் இணைந்து இருந்தால், அவை ஜெயலலிதா பல்கலையுடன் இணைக்கப்படும்.விழுப்புரம் நகராட்சியின் எல்லை அல்லது அதைச் சுற்றி, 25 கி.மீ., சுற்றளவில், பல்கலை வளாகம் செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஏற்கனவே, சென்னையில் உள்ள மீன்வள பல்கலையும், ஜெயலலிதா பெயரில் செயல்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024