Sunday, April 18, 2021

சென்னைக்கு வாரமிருமுறை நவீன எல்.எச்.பி., பெட்டிகளுடன் அதிவிரைவு சிறப்பு ரயில்


சென்னைக்கு வாரமிருமுறை நவீன எல்.எச்.பி., பெட்டிகளுடன் அதிவிரைவு சிறப்பு ரயில்

Added : ஏப் 18, 2021 00:48

மதுரை:மதுரையிலிருந்து சென்னை எழும்பூருக்கு வாரமிருமுறை அதிவிரைவு சிறப்பு ரயில் நவீன எல்.எச்.பி., பெட்டிகளுடன் (கூடுதல் வசதிகள் இருக்கும் ) இயக்கப்படுகிறது.

மறு அறிவிப்பு வரும் வரை வியாழன், சனி இரவு 8:50 மணிக்கு மதுரையில் புறப்படும் இந்த சிறப்பு ரயில் (06158) மறுநாள் அதிகாலை 6:55 மணிக்கு சென்னை எழும்பூர் செல்லும். மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இன்று (ஏப்., 18) முதல் வெள்ளி,ஞாயிறு இரவு 10:05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:10 மணிக்கு மதுரை வரும்.

இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு ஸ்டேஷன்களில் நின்று செல்லும். நேற்றிரவு மதுரையிலிருந்து இந்த சிறப்பு ரயில் சென்னை சென்றது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024