Sunday, November 14, 2021

டாக்டர் சுதா சேஷய்யனுக்கு பிரிட்டனின் கவுரவ பட்டம்

டாக்டர் சுதா சேஷய்யனுக்கு பிரிட்டனின் கவுரவ பட்டம்

Added : நவ 13, 2021 20:05

சென்னை:தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் சுதா சேஷய்யனுக்கு, பிரிட்டனின், 'ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் ஆப் எடின்பரோ' சார்பில் கவுரவ பட்டம் வழங்கப்பட்டது.

உலகிலேயே அறுவை சிகிச்சை மருத்துவ கல்லுாரிகளில் தொன்மையானதாகவும், முதன்மையானதாகவும், ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் கருதப்படுகிறது. 500 ஆண்டுகள் பழமையான அக்கல்லுாரி, 'பெலோஷிப் ஆப் ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ்' என்ற எப்.ஆர்.சி.எஸ்., பட்டத்தை, தகுதியானவர்களுக்கு வழங்குகிறது.

இதில், மருத்துவ துறையில் ஆற்றிவரும் பணிகள், ஆராய்ச்சி நடவடிக்கைகள், புதிய பங்களிப்புகள் மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில், 'பெலோஷில் அட் ஹொமினேம்' என்ற கவுரவ பட்டத்தை, ராயல் கல்லுாரியே விருப்பப்பட்டு தகுதியானவர்களுக்கு அளிக்கும்.அந்த வகையில், இம்முறை கவுரவ பட்டத்துக்கு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யனின் பெயர் முன்மொழியப்பட்டது.

இதை ராயல் கல்லுாரியின் எப்.ஆர்.சி.எஸ்., தேர்வு குழுவின் கவுன்சில் உறுப்பினர்கள் ஒருமனதாக ஏற்றனர்.இதற்கு முன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தராக இருந்த கேப்டன் ராஜாவுக்கு இந்த கவுவரம் கிடைத்தது. அதன்பின், தற்போது சுதா சேஷய்யனுக்கு அப்பட்டம் கிடைத்துள்ளது.

இந்த கவுரவ பட்டம், பிரிட்டனில் அவருக்கு அளிக்கப்பட்டது. பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்திராக பங்கேற்று, சுதாசேஷய்யன் தலைமை உரையாற்றினார். இந்தியாவில் இருந்து எந்த பெண்ணுக்கும் கிடைக்காத, இந்த கவுரவம் சுதா சேஷய்யனுக்கு கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024