வழக்கமான ரயில்களாக மாறும் சிறப்பு ரயில்கள்
Added : நவ 14, 2021 02:20
மதுரை:கொரோனா தொற்று எதிரொலியாக சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டவை தற்போது எக்ஸ்பிரஸ் ரயில்களாக வழக்கமான கட்டணத்துடன் இயக்கப்படவுள்ளன.
ரயில்களுக்கு ஐந்து இலக்க எண்கள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி சிறப்பு ரயில் எண்களின் முதல் இலக்கம் பூஜ்ஜியத்தில் துவங்கும். பல ரயில்களுக்கு முதல் இலக்கம் மட்டும் மாறும். அந்த ரயில்களுக்கு முதல் இலக்கமான பூஜ்ஜியத்திற்கு பதில் ஒன்று அல்லது இரண்டு எண் மட்டும் மாற்றப்படுகிறது.
சில ரயில்களுக்கு ஐந்து இலக்கங்களும் மாற்றப்படுகின்றன. சென்னை மதுரை வாரம் இருமுறை சேவை வழங்கும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் எண் 22623/22624 எனவும், கன்னியாகுமரி - டில்லி நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் எண் 12642/12641 எனவும், மதுரை - டில்லி நிஜாமுதீன் சம்பர்க்கிராந்தி எக்ஸ்பிரஸ் 12652/12651 எனவும், சென்னை நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ் 12667/12668 எனவும்,
சென்னை சென்ட்ரல் மதுரை வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் 20601/20602 எனவும், திருநெல்வேலி பிலாஸ்பூர் ரயில்கள் 22619/22620 எனவும், திருநெல்வேலி- மும்பை தாதர் வாராந்திர எக்ஸ்பிரஸ் 22630/22629 எனவும், மதுரை பிகானீர் வாராந்திர எக்ஸ்பிரஸ் 22631/22632 எனவும், சென்னை ராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ் 22662/22661 எனவும் மாற்றப்படுகிறது.
No comments:
Post a Comment