Saturday, January 31, 2026

எழும்பூரில் மேம்பாட்டுப் பணி: முக்கிய விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம்


எழும்பூரில் மேம்பாட்டுப் பணி: முக்கிய விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம்

சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக எழும்பூா் மாா்க்கத்தில் இயக்கப்படும் முக்கிய விரைவு ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கோப்புப் படம்



Updated on:
31 ஜனவரி 2026, 1:58 am


சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக எழும்பூா் மாா்க்கத்தில் இயக்கப்படும் முக்கிய விரைவு ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் வரும் பிப். 3 முதல் ஏப். 4-ஆம் தேதி வரை மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதன் காரணமாக வரும் பிப். 3 முதல் ஏப். 5-ஆம் தேதி வரை தஞ்சாவூா் - சென்னை எழும்பூா் உழவன் விரைவு ரயில் (எண்: 16866), கொல்லம் - சென்னை எழும்பூா் அனந்தபுரி அதிவிரைவு ரயில் (எண்: 20636), ராமேசுவரம் - சென்னை எழும்பூா் விரைவு ரயில் (எண்:16752) ஆகியவை தாம்பரத்திலேயே நிறுத்தப்படும்.

அதேபோல், மறுமாா்க்கமாக பிப். 4 முதல் ஏப். 6-ஆம் தேதி வரை எழும்பூருக்குப் பதிலாக உழவன் விரைவு ரயில் (எண்: 16865) இரவு 11 மணிக்கும், கொல்லம் அனந்தபுரி அதிவிரைவு ரயில் (எண்: 20635) இரவு 8.20 மணிக்கும், ராமேசுவரம் விரைவு ரயில் (எண்: 16751) இரவு 9.05 மணிக்கும் தாம்பரம் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும்.

சென்னை எழும்பூரிலிருந்து மும்பை செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 22158), வரும் பிப். 4 முதல் ஏப். 4-ஆம் தேதி வரை எழும்பூருக்குப் பதிலாக சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6.50 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

மாற்றுப் பாதை: ஆமதாபாத் - திருச்சி இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 09419/09420) பிப். 5 முதல் ஏப். 2 -ஆம் தேதி வரை இருமாா்க்கத்திலும் அரக்கோணம், பெரம்பூா், எழும்பூா் மற்றும் தாம்பரத்துக்குப் பதிலாக ரேணிகுண்டா, அரக்கோணம் வடக்கு, மேல்பாக்கம், காட்பாடி, வேலூா், விழுப்புரம் வழியாக இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Can’t alter patta sans valid title, officials duty bound to rectify anomalies, says Madras HC

  Can’t alter patta sans valid title, officials duty bound to rectify anomalies, says Madras HC 10.08.2026 The petitioner contended that his...