Saturday, December 31, 2016

எல்லாரும் அப்படியல்ல!

By என். முருகன்  |   Published on : 31st December 2016 01:41 AM  |   
தமிழ்நாட்டில்  தலைமைச் செயலர் பதவியில் இருந்த ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனையை நடத்தி கட்டுக்கட்டாக 30 லட்சம் ரூபாய்க்கு புதிய ரூபாய் நோட்டுகளும், 5 கிலோ தங்க நகைகளும் கைப்பற்றியதாக செய்திகள் வெளியாகின. இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.
இவரது மகன், சம்பந்தி மற்றும் சிலரிடம் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகைகள், சொத்துகள் பற்றிய விவரங்கள் ஒருபுறமிருக்க, ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் ஊழல் ஏற்படுத்திய தாக்கம் எப்படிப்பட்டது என்ற விவரம் விவாதத்திற்குரியது. மற்ற மாநிலங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் ஊழல்கள் எந்த அளவிலானது என்பதை நாம் பார்க்க வேண்டிய தருணம் உருவாகியுள்ளது.
பிகார் மாநிலத்தில் கெளதம் கோஸ்வாமி எனும் இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி, பாட்னாவில் ஆட்சியராக இருந்தார். 2004-ஆம் ஆண்டு அங்கே நடந்த பெரு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அந்த வேளையில், சந்தோஷ் ஜா எனும் ஒப்பந்தக்காரருடன் கோஸ்வாமி ஐ.ஏ.எஸ். சேர்ந்துகொண்டு, 18 கோடி ரூபாயை கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் காரணமாக 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட இவர், 2006-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். இவருக்கு ஜாமீன் வழங்க பாட்னா உயர்நீதிமன்றம் ஒப்புக் கொண்டதற்கான காரணம் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதுதான் என்பது பரிதாபமான செய்தி.
2004-ஆம் ஆண்டில் பா.ஜ.க. நடத்திய ஒரு தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த அன்றைய துணை பிரதமர் எல்.கே. அத்வானியை மேடையிலிருந்து பேச்சை நிறுத்திவிட்டு இறங்குமாறு செய்தவர் இந்த கோஸ்வாமி. அதாவது தேர்தல் விதிகளின்படி இரவு 10 மணிக்கு மேல் பொதுக்கூட்டங்கள் நடைபெற முடியாது என்ற விதி மீறப்பட்டதுதான் இதற்குக் காரணம்.
இதுபோன்ற நிகழ்வினால் அந்த ஆண்டு உலகப் புகழ்பெற்ற "டைம்ஸ்' பத்திரிகை, இவரை ஆசியாவின் கதாநாயகர்களில் ஒருவராக தேர்ந்தெடுத்து, "பாட்னாவின் மாவட்ட அதிகாரியாக கோஸ்வாமி மிகப்பெரிய அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை செய்துள்ளார். தினமும் காலை 4.30 மணிக்கு பாட்னா நகரின் விமான நிலையத்திற்கு சென்று ஹெலிகாப்டரில் உணவு, குடிநீர், மருந்துகளை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்படுவதை மேற்பார்வையிட்டார்' என எழுதியது. ஜாமீனில் வெளியே வந்த இந்த 41 வயது ஐ.ஏ.எஸ். அதிகாரி புற்றுநோய் முற்றிய நிலையில் மரணமடைந்தார்!
2010-ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச மாநில அரசின் சிறைத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகார செயலராகப் பணியாற்றிய அரவிந்த் ஜோஷி ஐ.ஏ.எஸ்., அவரது மனைவி டினு ஜோஷி ஐ.ஏ.எஸ். ஆகிய இருவரின் வீட்டில் வருமான வரித் துறை திடீர் சோதனையை மேற்கொண்டது. டினு ஜோஷி ஐ.ஏ.எஸ். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை செயலராகப் பணி செய்து வந்தார்.
இந்த திடீர் சோதனையில் மூன்று கோடி ரூபாய் ரொக்கம், 7 லட்சம் ரூபாய் அந்நிய செலவாணி பணம், 66 லட்சம் ரூபாய் மதிப்பில் தங்க நகைகள், மூன்று கோடி ரூபாய் முதலீட்டு ஆவணங்கள் ஆகியனவும் வேறு பல பண பரிமாற்று பினாமி ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இவை தவிர ஐந்து வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டக சாவிகளும் கைப்பற்றப்பட்டன. இந்த பெட்டிகளைத் திறந்து பார்த்து அவற்றிலுள்ள பொருள்களையும் ஆவணங்களையும் கைப்பற்றினால்தான் முழு சொத்து விவரங்களும் தெரிய வரும் என அறிக்கைகள் வெளியாகின.
டினு ஜோஷி ஐ.ஏ.எஸ்., 2008-ஆம் ஆண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை செயலராக பணியேற்று முதல் ஆண்டிலேயே அந்த துறைக்கு தேவையான பொருள்களை கொள்முதல் செய்ய 100 கோடி ரூபாயை செலவிட்டார்.
ஆனால் அந்த ஆண்டிலேயே மத்தியப் பிரதேசத்தில் மாநிலமெங்கும் உணவு குறைபாட்டினால் 20 குழந்தைகள் அரசு காப்பகங்களில் உயரிழந்தன. இதனால் துறையில் நடந்த ஊழல் வெளிப்பட்டு, உணவுப் பொருள்கள் வாங்காமல் போலியான ஆவணங்களை தயார் செய்து பணம் கையாடல் செய்தது வெளியானது. இவரது கணவர் அரவிந்த் ஜோஷி ஐ.ஏ.எஸ். நிதிநிலை மோசடிக்காக அதே ஆண்டில் மத்தியப் பிரதேசத்தின் நீராதாரத் துறையின் செயலர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தகுந்தது.
இதே 2010-ஆம் ஆண்டில் சத்தீஸ்கர் மாநிலத்தில், விவசாயத் துறை செயலாளராக பணியாற்றிய பி.எல். அகர்வால் எனும் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை செய்து, ரொக்கப் பணம் ரூபாய் 52 லட்சம் மற்றும் 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளையும் கைப்பற்றினார்கள்.
எல்லோருமே அதிர்ந்து போகும் வகையில் 220 பினாமி வங்கி கணக்குப் புத்தகங்களும் இருந்தன. அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை ஆராய்ந்தால் இவர்களது வீட்டில் வேலை செய்யும் ஆண், பெண் ஊழியர்களின் பெயர்கள் இருந்தன. இந்த வங்கி புத்தகங்களில் முதலீடு செய்யப்பட்டிருந்த மொத்த பணத்தின் மதிப்பு ரூபாய் 40 கோடி.
2007-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், உத்தரப் பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற அகண்ட் பிரதாப் சிங் எனும் ஐ.ஏ.எஸ். அதிகாரியை சி.பி.ஐ. போலீஸார் கைது செய்து ஊழல் விசாரணையை தொடங்கினர்.
அப்போது இவருக்கு 84 அசையா சொத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் பினாமியாக பல சொத்துகள் வாங்கப்பட்டன. 84 அசையா சொத்துகளில் 10 பிளாட்கள், மற்ற 74-ம் பங்களாக்கள். தில்லி, நொய்டா, காசியாபாத், கிரேட்டர் நொய்டா, லக்னெள, பஹ்ரைச், நைனிடால் ஆகிய இடங்களில் இந்த சொத்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
லஞ்சமாக கிடைத்த கருப்புப் பணத்தை இதுபோல் அசையா சொத்துகளாக வாங்கினால் அவை விலை ஏற்றம் என்ற லாபத்தை தரும் என இவர் நம்பினார்.
மேலே கூறப்பட்ட ஊழல் ஐ.ஏ.எஸ்.களின் நடவடிக்கைகள் ஒரு சில மாதிரிதான். இதுபோல நூற்றுக்கணக்கானவர்கள் நம் நாட்டில் தொடர்கிறார்கள். இவர்களை மட்டும் முன் நிறுத்தி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என்றாலே அவர்கள் ஊழல்வாதிகள்தான் என்ற தவறான முடிவிற்கு மக்கள் வந்துவிடக் கூடாது.
அன்றும் இன்றும் நல்ல நாணயமான, தரமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உண்டு. ஐ.சி.எஸ். அதிகாரிகள் விட்டுச் சென்ற பணிகளை அவர்களுக்கு இணையாக செய்து, அவர்களைப் போலவே தரமான, ஒழுக்கமான அதிகாரிகளாக நேர்மையுடன் வாழ்ந்தவர்கள் பலர் உண்டு.
தமிழ்நாட்டில் டி. லக்ஷ்மி நாராயணன் எனும் ஐ.ஏ.எஸ். அதிகாரி, தனது இருசக்கர வாகனத்தில் தலைமைச் செயலகத்திற்கு வந்து பணி செய்தார். இவரது சகாக்கள் பலர் தங்களுக்கு கீழே வேலை செய்யும் பல நிர்வாகத் துறைகளின் கார்களை வரவழைத்து, காலையில் தலைமைச் செயலகத்திற்கு வருவதும் மாலையில் வீட்டிற்கு திரும்பிச் செல்வதும் வழக்கம்.
இவரது ஒழுக்கத்தையும் நிர்வாகத் திறனையும் தெரிந்து கொண்டு, தமிழ்நாட்டின் முதல் கவர்னர் ஆட்சியில் தலைமை ஆலோசகராக இருந்த தவே எனும் உயரதிகாரி, இவரை தனது தனிச் செயலராக நியமித்துக் கொண்டு நிர்வாகம் செய்தார்.
அடுத்து நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், "ஊழலை ஒழிப்பேன்' என்ற சபதத்துடன் ஆட்சியைக் கைப்பற்றிய எம்.ஜி.ஆர். தனக்கு தனிச் செயலராக நாணயமான, திறமையான ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்துக் கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் சிலர் சொன்ன தகவலின் அடிப்படையில் இதே லக்ஷ்மி நாராயணனை நியமித்துக் கொண்டார்.
சில மாதங்கள் சென்ற பின், நிலைமை தனக்கு சரி வராததால் அந்த வேலையிலிருந்து வேறு வேலைக்குச் செல்ல விரும்பிய லக்ஷ்மி நாராயணன் விடுப்பில் சென்றுவிட்டார். அவரை மறுபடியும் முதல்வரின் தனிச் செயலர் பணியில் சேரச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசுத் தோட்டத்தில் குடியிருந்த அவரது வீட்டிற்கே சென்று அவரை சந்தித்து முதல்வர் எம்.ஜி.ஆர். வேண்டிக் கொண்டார்.
அவருக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்த பின் அவரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் பதவிக்கு அமர்த்தினார் எம்.ஜி.ஆர். அங்கே அவர் செய்த தலையாய பணியின் பலன்கள் இன்றளவும் தமிழகத்திற்கு நன்மைகளை விளைவிக்கின்றன. நமது மாநிலத் தேர்வாணையத்தின் வேலைகளை வேறு பல மாநிலங்களும் பின்பற்றியுள்ளன.
இவரைப் போலவே பி. சங்கர், ஏ.எஸ். பத்மநாபன் போன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நேர்மையுடனும் தெளிவாகவும் பணி செய்து, ஓய்வு பெற்று சாதாரண அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழிக்கின்றனர்.
இவர்களுக்கு பல பங்களாக்களும், கார்களும் இல்லை. லக்ஷ்மி நாராயணன் புதுச்சேரியில் மகிழ்ச்சியுடன் ஒரு முதியோர் குடியிருப்பில் வாழ்ந்து வருகிறார்.
இவர்களைப் போன்ற நாணயமானவர்களின் வாழ்க்கை முறையை இன்றைய இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பின்பற்றினாலே வருங்கால தமிழகம் மேன்மை பெறும் என்பது திண்ணம்!
கட்டுரையாளர்:
ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).

ஜெயலலிதா தோழி சசிகலா. சசிகலா தோழி யார் தெரியுமா?

வாழ்ந்த வரை எவ்வளவு மர்மங்களோடு ஜெயலலிதா இருந்தாரோ அதில் துளி கூட குறைவில்லாமல் தன்னைப் பற்றிய எந்த விஷயங்களும் வெளிவராமல் பாதுகாத்து வந்திருக்கிறார் சசிகலா. சிறிய உதாரணம் அவரின் குரலை கேட்க இன்று தமிழகமே காத்திருக்கிறது. சசிகலாவை ஜெயலலிதாவின் தோழியாக மட்டுமே பார்த்துப் பழகிய மக்களுக்கு அவரை ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக ஏற்று கொள்ளும் மன நிலைக்கு வரவில்லை எனலாம். அதற்கு முன்பு அவரைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோருக்குமே உள்ளது. கணவரைப் பிரிந்து, குழந்தை இல்லாமல், தன் வாழ்நாளில் வெளிநாடுகளுக்கு கூட செல்லாமல் ஜெயலலிதாவிற்காக 'தியாக வாழ்கை' வாழ்ந்தவர் என முன்னிறுத்துகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். சசிகலாவை பற்றி இதுவரை தெரியாத விஷயங்கள்.



உடையும் நிறமும்

கிராமத்து நடுத்தர பெண்ணின் ரசனையிலேயே சசிகலாவின் உடை தேர்வுகள் இருந்துள்ளன என்பது அவரை நன்றாக கவனித்து வந்தவர்களுக்கு தெரியும். அவரின் உடை நிறங்கள் எல்லாமே 'டல்' கலரில் தான் இருக்கும். மர கலரிலும், தேன் கலரிலுமான புடவைகளை மட்டுமே விரும்பி அணிவாரம். இது குறித்து ஜெயலலிதா கூட பல முறை கூறியும் அந்த நிறங்களில் மேல் அவருக்கு அப்படி ஒரு பிரியம். இதற்காக சவுகார்பேட்டையில் உள்ள துணி கடையில் மொத்தமாக ஆர்டர் செய்து சேலைகள் வரவழைக்கபடுமாம். ஜெயா டிவி, சசிகலா கட்டுப்பாட்டில் வந்த பிறகு ஜெயலலிதா அறிக்கைகளைக் காட்டும் கிராபிக்ஸ் கார்டுகள் கூட 'டல்' கலரிலேயே இருக்குமாறு பார்த்து கொண்டார் சசிகலா. ‘பொது இடங்களில் தனியாக தெரியக் கூடாது என்று தனக்குத் தானே போட்டு கொண்ட வைராக்கியத்தின் அடையாளம் தான், நான் இது போன்ற உடைகளை தேர்வு செய்யக் காரணம்’ என்று சசிகலாவே பலமுறை தனது உறவினர்களிடம் கூறியுள்ளாராம்.


'ஆக்ரோஷ சாமிகள்'

ஜெயலலிதாவை விடவும் தெய்வ பக்தி அதிகம் கொண்டவர் சசிகலா. வைணவ கடவுள்களை அதிகமாக வழிபடும் ஜெயலலிதாவில் இருந்து சசிகலாவின் வழிபட்டு முறை முற்றிலும் மாறுபட்டது. பெண் தெய்வங்களான காளி, துர்க்கை வழிபாடுகளில் அதிக விருப்பம் கொண்டவர் சசிகலா. ஆரம்ப காலங்களில் கல்கி, சாய்பாபா பக்தராகவும் இருந்துள்ளார். பில்லி, சூனியம் போன்றவற்றில் அதிக நம்பிக்கை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சசிகலா குரல்!?

திராவிட இயக்கங்களில் பேச்சும், குரலுமே ஒருவருக்கு முக்கிய தகுதியாக பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சி தலைவருக்கு குரல் மிகவும் முக்கியம். அரசியலில் ஒருவரின் ஆளுமையை நிறுவிப்பதில் குரலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அண்ணாவின் குரலும், கருணாநிதி குரலும் தனித்தன்மை உடையது, எம்.ஜி.ஆருக்கு தொண்டையில் குண்டடிபட்டபிறகு அவர் குரல் மாற, அவரது தொண்டர்கள் பெரும் அதிர்ச்சியை எதிர்கொண்டாலும், அதுவும் அவரது ‘சிக்னேச்சர்’ ஆனது. ஜெயலலிதாவின் கணீர் குரல் எல்லோரையும் கட்டிப் போட்டது, அதன்படி இன்றைக்கு தமிழகமே எதிர்பார்ப்பது சசிகலாவின் குரலைத்தான். எப்படி இருக்கும் அவரின் குரல்!? தஞ்சாவூரில் ஒரு கிராமத்து நடுத்தர குடும்பத்து பெண்ணின் பேச்சு மொழியாக இருக்கும். கொஞ்சம் கட்டை குரலாகவும் இருக்கும் என்கின்றனர். ஆனால் அவர் கார்டனில் இருந்தால் பயத்துடனே பணியாளர்களும் கட்சி நிர்வாகிகளும் இருப்பார்கள். தவறு செய்பவர்களை அவர் திட்டும் போது எதிரே நிற்பவர் நிலை குலைந்து விடுவாராம். குரல் எப்படி இருந்தாலும் அது ஒலிக்குமிடம் அதிகாரமிக்கதாக இருப்பதால் அதற்கு வலிமை அதிகமாகத் தானே இருக்கும்.

உறவும் தோழியும்

சசிகலாவிற்கு ஜெயலலிதாவைத் தவிர தனியாக தோழிகள் என்று யாரும் கிடையாது. குடும்ப உறவுகளில் இளவரசியிடம் நட்புடன் இருப்பது போல் தெரிந்தாலும் அவரை விட சசிகலா மிகவும் நேசித்தது நடராஜனின் தங்கை மாலாவைத் தான். திருமணம் ஆகி அவர் வீட்டுக்கு வரும் போது மாலா சின்னப் பெண்ணாக இருந்ததால் அப்போது அவருக்கு தோழி, உறவு எல்லாமே மாலா தான். பின்னர் அவருக்கு திருமணம் முடித்து சென்னை வந்த பிறகும் இருவரும் நெருங்கிய நட்புடன் தான் இருந்துள்ளனர். அரசு அலுவலகம்
ஒன்றில் நூலகராக உள்ளார் மாலா. ஜெயலலிதா போயஸ் தோட்டத்தை விட்டு சசிகலாவை வெளியேற்றிய போது அவர் முதலில் சென்றது தி.நகரில் உள்ள மாலா வீட்டுக்கு தான். இப்போதும் கஷ்டமான நேரங்களில் மாலாவிடம் பேசுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார் சசிகலா.

கண்டிப்பும் சிக்கனமும்

இரும்புக் கோட்டை, ராணுவக் கட்டுப்பாடு என்றெல்லாம் அதிமுக வர்ணிக்கப்பட ஜெயலலிதா காரணம் எனக் கூறப்பட்டாலும். அதன் பின்னணியில் இருந்தவர் சசிகலாதான் என்று இப்போது கூறிக்கொண்டிருக்கின்றனர் கட்சியினர். கட்சியினர் கொண்டு வரும் பிரச்னைகளை எல்லாம் ஜெயலலிதாவிடம் கூற முடியாது. முழுவதுமாக கேட்பவர் சசிகலாதான். தீர்ப்பு மட்டுமே ஜெயலலிதா வசம். வெறும் வார்த்தைகளில் இருக்கும் கண்டிப்பை 'வேறு' வகையில் மாற்றுவதும் சசிகலாவின் கோபத்தை பொறுத்ததுதான். தனக்கு எதிரானவர்களை, ஜெயலலிதா கூட மன்னித்து விடுவார். ஆனால் சசிகலாவைப் பொறுத்தவரை அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்கிறார்கள். நமது எம்.ஜி.ஆர், ஜெயா டிவி, அதிமுக தலைமை அலுவலகம், போயஸ் கார்டன் போன்றவற்றில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையை குறைத்ததுடன் அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர்களை வேலையை விட்டும் நிறுத்தி சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டதிலும் சசிகலாவின் பங்கு உண்டு. ஜெயலலிதாவிடம் இருந்த தாராளத்தை சசிகலாவிடம் எதிர்பார்க்க முடியாது என்கிறார்கள்.

Friday, December 30, 2016

ஜெயலலிதா பொதுக்குழு... சசிகலா பொதுக்குழு! என்ன இருந்தது... என்ன இல்லை...?

vikatan.com

ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம், ‘தீபாவளி’ திருவிழாபோலக் கொண்டாடப்படும். போயஸ் தோட்டத்தில் இருந்து கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரி மண்டபம் வரை கட்சியினர் வழிநெடுக நின்று வரவேற்பார்கள். முக்கால் மணி நேரத்தில் கடக்க வேண்டிய இந்த 18 கிலோ மீட்டர் தூரத்தை... ஜெயலலிதாவின் கார், கடந்துசெல்ல ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும். தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்தபடியே அவர் செல்வார்.

போயஸ் கார்டன் கேட் திறந்து ஜெயலலிதாவின் கார் வெளியே வரும்போது... அஞ்சுலெட்சுமி என்ற அ.தி.மு.க பெண் தொண்டர் ஒருவரின் குரல் விண்ணைத் தொடும் அளவுக்கு, ‘புரட்சித் தலைவி வாழ்க’ என்று குரல் கொடுப்பார். ஆரத்தி எடுத்து... பூசணிக்காய் உடைத்துத்தான் வழியனுப்புவார். போயஸ் கார்டனில் இருந்து இரட்டை விரலை காட்டிப் புன்னகைத்தவாறு செல்லும் ஜெயலலிதாவின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சிப் பொங்கி இருக்கும். வழிநெடுக நின்று வரவேற்கும் தொண்டர்கள் முகத்திலும் அத்தகையதொரு சந்தோஷம் விளையாடும். ஃப்ளெக்ஸ் பேனர்கள், கொடி தோரணங்கள், வாழை மரங்கள் என வழிநெடுகிலும் கழகத் தொண்டர்கள் கட்டிவைத்துக் கலக்குவார்கள். இந்த உற்சாகப் பயணம், மண்டபத்தை நெருங்கும்போது அங்கு வேறு விதமான வரவேற்பு ஜெயலலிதாவுக்கு காத்து இருக்கும்.



ஸ்ரீவாரி மண்டபம் அருகே... ஒரு கிலோ மீட்ட தூரத்தில் இருந்தே பேண்டு வாத்தியங்கள், சென்னை மேளம் முழங்க வரவேற்பார்கள். குதிரை மீது அமர்ந்த வீரர்களின் வரவேற்பு, பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகாட்டம் எல்லாம் அல்லோலப்படும். ஸ்பெஷல் மேடை அமைத்து ஜெயலலிதா - எம்.ஜி.ஆர் பாடல்கள் ஒலிபரப்ப டான்ஸ் தூள் கிளப்புவார்கள். சில இடங்களில் ஸ்பீக்கர் செட் கட்டி பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருப்பார்கள். மண்டபத்தின் நுழைவாயில் அருகே மகளிர் அணியினர் முளைப்பாரி, பால்குடம் எடுத்து ஜெயலலிதாவுக்கு கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பார்கள். கூட்டம் நடக்கும் மண்டப வாசல் அருகே நின்று மூத்த நிர்வாகிகள், பூங்கொத்து கொடுத்து ஜெயலலிதாவை பவ்யமாக வரவேற்பார்கள்.

அதன் பிறகு, பொதுக்குழு கூடும். ஜெயலலிதாவுக்கு, தொண்டர்கள் அனைவரும் எழுந்து நின்று அடிக்கும் விசில் சத்தங்களும் கைதட்டல்களும் காதை பிளக்கும். நடுநாயகமாக ஜெயலலிதாவுக்கு இருக்கை போடப்பட்டு இருக்கும். அதற்கு இரு பக்கமும் இரண்டு அடி தூரம் விட்டுத்தான் மற்றவர்கள் உட்காரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு இருக்கும். தனது சேரில் ஜெயலலிதா உட்கார்ந்தவுடன்... மகளிர் அணியினர் ஜெயலலிதாவுக்கு ஆளுயர மாலை அணிவிப்பார்கள். அதன் பிறகு பொதுக்குழு நடவடிக்கைகள் தொடங்கும். ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான நூர்ஜகான், தனது வெண்கலக் குரலால் சிறுசிறு முன்னுரையுடன் நிகழ்ச்சிகளை நகர்த்திக் கொண்டிருப்பார். வரவேற்பு, தீர்மானங்கள், முக்கிய நிர்வாகிகள் சிலரின் பேச்சுகள், இறுதியாக ஜெயலலிதாவின் பேச்சோடு கூட்டம் முடியும். கடந்த ஆண்டு நிகழ்வுகளையும் அடுத்த ஆண்டுக்கான திட்டங்களையும் மேற்கோள் காட்டி ஜெயலலிதா பேசுவார். அது, ஜெயலலிதாவின் அரசியல் நகர்வுகளைத் தொண்டர்களுக்கு உணர்த்தும் வகையில் இருக்கும். ஜெயலலிதா தனது பேச்சை முடிக்கும்போது, ‘‘ஊருக்கு பத்திரமாகப் போய்ச்சேர வேண்டும்’’ என்று அறிவுரை சொல்லித்தான் தனது பேச்சை முடிப்பார். ‘‘சைவம், அசைவம் என்று இரண்டு பிரிவுகளிலும் உணவு தயாராக உள்ளது. அனைவரும் சாப்பிட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும்’’ என்றும் கேட்டுக் கொள்வார்.



பொதுக்குழுவில் பரிமாறப்படும் சைவை உணவுகளை ஒவ்வொன்றாகக் கேட்டுச் சாப்பிட்டுவிட்டுத்தான் ஜெயலலிதா வீட்டுக்குப் புறப்படுவார். காரில் ஜெயலலிதா உட்கார்ந்த பிறகு, அங்கு விருப்பப்படும் தொண்டர்களிடமும் கட்சி நிர்வாகிகளிடமும் பூங்கொத்துகளைப் பெற்றுக் கொள்வார். இப்படித்தான் கலகலப்பாக முழு உற்சாகத்துடன் பொதுக்குழு நடந்து முடியும். ஆனால், கடந்த டிசம்பர் 29-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் அழுது வடிந்தது. போயஸ் தோட்டத்தில் இருந்து வானகரம் ஸ்ரீவாரி மண்டபம் வரை கொடி தோரணங்கள் இல்லாமல்... சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. பொதுக்குழு நடப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஜெயலலிதாவைக் பார்ப்பதற்காக காத்து நின்ற தொண்டர்கள் யாரையும் இந்தப் பொதுக்குழுவில் சாலை ஓரங்களில் பார்க்க முடியவில்லை.

‘பொதுக் குழுவுக்கு வாருங்கள்’ என்று கட்சியினருக்கு அனுப்பப்படும் அழைப்பிதழ்கள்கூட இந்த முறை தபால் இலாகா மூலம் அனுப்பாமல் பொதுக்குழு உறுப்பினர்களைச் சென்னைக்கு வரவழைத்து அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மூலம் கொடுத்தார்கள். அழைப்பிதழ்களைக் கொடுத்துவிட்டு அவர்களிடம் ஒப்புதல் கடிதமும் பெறப்பட்டது. மார்கழிப் பனியையும் கண்டுகொள்ளாமல் காலை 7 மணிக்குள் மண்டபத்துக்குள் ஆஜராகிவிட்டார்கள் கழக நிர்வாகிகள். அமைச்சர்கள் அனைவரும் 8 மணிக்கு ஏசி பஸ்களில் அழைத்து வரப்பட்டார்கள். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலை 9 மணிக்கு கடைசி ஆளாக பொதுக்குழுவுக்கு வந்தார். போயஸ் கார்டனில் இருந்து டவேரா காரில்... ஜெயலலிதாவின் பிரதயேக சேர், அவரின் அதிகாரப்பூர்வ போட்டோ ஆகியவை எடுத்து வரப்பட்டு பொதுக்குழு மேடையின் நடுநாயகமாக வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது.

ஜெயலலிதா முன்னிலையில் பொதுக்குழு நடக்கும்போது இரண்டு வரிசைகள் அளவுக்குத்தான் சேர்கள் போடப்பட்டு நிர்வாகிகள் அமரவைக்கப்படுவார்கள். ஆனால், இந்தத் தடவை ஐந்து வரிசைகளில் 45 நிர்வாகிகள் மேடையில் உட்கார வைக்கப்பட்டனர். ஜெயலலிதா மரணத்தையடுத்து அமைச்சராக பதவி ஏற்றபோது கண்ணீர் சிந்தாத ஓ.பன்னீர்செல்வம் கண்ணீரோடுதான் பொதுக்குழுவில் தனது பேச்சைத் தொடங்கினார். அதே பாணியில்தான் தீர்மானங்களை வாசித்த ஒவ்வொரு நிர்வாகியும் கண்ணீர் வடித்தனர். 14 தீர்மானங்களையும் வாசித்து முடித்தபோது பெரும்பாலான பொதுக் குழு உறுப்பினர்கள் மத்தியில் அமைதியே குடிகொண்டிருந்தது. பொதுக் குழு தீர்மானங்களை நிறைவேற்றச் சம்பிரதாயங்கள் முடிந்தவுடன்... ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை ஆகியோர் அந்தத் தீர்மானங்களை எடுத்துக்கொண்டு போயஸ் தோட்டத்துக்குப் பறந்தனர். சசிகலாவைச் சந்தித்து, பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட தகவலையும், தீர்மானங்களையும் கொடுத்தபோது... சசிகலாவும் ஜெயலலிதாவாகவே மாறி இருந்தார். அவரது உடையில், திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. டி.டி.வி.தினகரன், இளவரசி மகன் விவேக் என்று மன்னார்குடி சொந்தங்கள் புடைசூழ ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி பொதுச்செயலாளர் நியமனப் பதவியை 11.30 மணிக்கு நல்ல நேரத்தில் ஏற்றுக் கொண்டார்.



சசிகலாவைச் சந்திக்க சென்ற ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் பொதுக்குழு கூட்டத்துக்கு வரவே இல்லை. அங்கிருந்தபடியே கூட்டத்தை முடிக்கச் சொன்னார். ‘‘சசிகலா, பொதுக் குழு தீர்மானத்தின்படி பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்’’ என்று திண்டுக்கல் சீனிவாசன் அறிவிக்க, பொதுக் குழு முடிந்தது. மதிய சாப்பாடு தயார் நிலையில் இருந்தாலும்... அந்த உணவு அரங்கம் காலியாகவே கிடந்தது.

- எஸ்.முத்துகிருஷ்ணன்

காலன் கவர்ந்த இவர்களை... காலம் நினைவில் வைத்திருக்கும்! #WeMissYou #2016Rewind



இந்த உலகில் தோன்றிய எல்லா உயிரும் ஏதோ ஒரு நாள் அதன் இறப்பை ருசிக்கத்தான் போகிறது. தான் வாழும் காலத்தில் அது ஆற்றும் செயல்களும், உதிர்க்கும் வார்த்தைகளும் உடலால் அது இறந்த பின்பும் முகமாய், குரலாய், சிரிப்பாய்... என ஏதோ ஒரு நிலையில் நினைவுகளாய் மற்றவர்கள் மனதில் வாழ்ந்துக்கொண்டேயிருக்கும். அப்படி, இந்த 2016-ம் ஆண்டு உடலால் மறைந்து வெறும் நினைவுகளாய் நம்மோடு வாழ்ந்துக்கொண்டிருக்கும் தமிழ் திரைப்பிரபலங்கள் பற்றி...



கலாபவன் மணி (45) :

நடிப்பு, இசை, பாடல், பலகுரல் என பண்முகம் கொண்ட கலைஞன். 1971-ம் ஆண்டு கேரளாவிலுள்ள சாலக்குடியில் குன்னிஸேரி வீட்டில் ராமன் மணியாக பிறந்தவர் பின்னர், 'கலாபவன்' எனும் கலைக்குழுவில் பலகுரல் கலைஞனாக பணியாற்றி 'கலாபவன்' மணி ஆனார். சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர் ' வசந்தியும் லக்‌ஷ்மியும் பின்னே ஞானும்' எனும் மலையாள படத்துக்காக தேசிய விருது பெற்றார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிப்படங்களில் நடித்துவந்த கலாபவன் மணி திடீரென இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உயிரிழந்து சினிமாத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.



'வியட்நாம் வீடு' சுந்தரம் (73) :

தமிழ் திரையுலகின் மூத்த கதாசிரியர். 1943-ம் ஆண்டு பிறந்த சுந்தரம் தனது 12-13 வயதிலேயே மெஷின் ஆப்பரேட்டராக பணியாற்றினார். மீத நேரங்களில் 'யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸ்' எனும் நாடகக்குழுவில் சர்வீஸ் பாயாக பணியாற்றிக்கொண்டிருந்த நேரத்தில் தான் நாடகம் , சினிமாத்துறை மீது இவருக்கு ஆர்வம் பிறந்தது. கதைசொல்லலில் தனது திறமையை படிப்படியாக வளர்த்துக்கொண்ட இவர் 'வியட்நாம் வீடு' படத்தில் காதாசிரியராக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றி இவர் பெயருக்கு முன் 'வியட்நாம் வீடு' என்ற அடைமொழியை பரிசாக கொடுத்தது. 1973-ம் ஆண்டு ' கௌரவம்' படத்தை இயக்கினார். பின்னர், 30க்கும் மேற்பட்ட படங்களில் கதாசிரியராக, இயக்குநராக, நடிகராக பணியாற்றியும் பல தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துவந்த இவர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மரணத்தை தழுவினார்.



ஜோதி லெட்சுமி (67) :

எம்.ஜி.ஆர் நடித்த ' பெரிய இடத்துப் பெண்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பலமொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.



நா. முத்துக்குமார் (41) :

காஞ்சிபுரத்து கவிஞர். சென்னை பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இலக்கிய மாணவரான நா.முத்துக்குமார் 'பட்டாம் பூச்சி விற்பவன்' என்ற கவிதை தொகுப்பு மூலம் தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமானவர். அதன் பிறகு பல்வேறு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு தமிழ் இலக்கிய உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார்.'வீரநடை' என்ற திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நா.முத்துக்குமார் காதல் கொண்டேன், சிவாஜி, காக்காமுட்டை, மதராசப்பட்டிணம் என பல வெற்றி படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். தங்கமீன்கள் மற்றும் சைவம் படத்துக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது பெற்று தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்த இவர் திடீரென இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். தனது 41-வது வயதிலேயே நா.முத்துக்குமாருக்கு நிகழ்ந்த மரணம் தமிழ் திரையுலகத்தையும்,அவரது ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.



அண்ணாமலை (50) :

இந்த ஆண்டு தமிழ் சினிமா இழந்த மற்றொரு பாடலாசிரியர். விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர் அண்ணாமலை. ‘சிறு பத்திரிகைக் கவிதைகளின் புதுப் போக்குகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து எம்.பில். பட்டமும் பெற்றார். விகடன் குழுமத்தில் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அண்ணாமலை, ‘கவிஞர் காப்பிராயன்’ என்ற பெயரில் ஜூனியர் விகடனில் எழுதிய கவிதைகள் பிரபலம். 'புது வயல்' எனும் திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான அண்னாமலை ஸ்டூடண்ட் நம்பர் ஒன், வேட்டைக்காரன், வேலாயுதம், ஹரிதாஸ் என 50 படங்களுக்கு மேல் பாடலாசிரியாக பணியாற்றியிருக்கிறார். அதுமட்டுமல்லாது, அரும்பு, தமிழோசை போன்ற இதழ்களில் 100க்கு மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ள அண்ணாமலை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாரடைப்பில் காலமானார்.



எம். பாலமுரளி கிருஷ்ணா (86) :

கர்னாடக இசையுலகில் தனக்கென ஒரு இடம் கொண்டு சாம்ராஜ்ஜியம் நடத்தியவர். சிறந்த இசையமைப்பாளருக்கான, சிறந்த பாடகருக்கான தேசிய விருதுகளைப் பெற்றவர். பல ராக, தாளங்களைப் படைத்தவர். 'ஒரு நாள் போதுமா...', 'சின்ன கண்ணன் அழைக்கிறான்...' என தனது குரலால் நம்மை சொர்க்கத்துக்கு அழைத்துச்சென்றவர். இந்த ஆண்டு நவம்பர் மாதம் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். பாலமுரளி கிருஷ்ணாவின் இழப்பு இசையுலகத்துக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு.



கல்பனா (50) :

குழந்தை நட்சத்திரமாக 1983-ல் நடிக்க ஆரம்பித்தவர், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடத்துள்ளார். கே.பாக்யராஜுடன் இவர் இணைந்து நடித்த 'சின்னவீடு' திரைப்படம் இவருக்கு தமிழில் பெரும் வரவேற்பை பெற்று தந்தது. 'தனிச்சல்ல ஞான்' என்ற மலையாள படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது பெற்றார். பின்னர், பல படங்களில் குனசித்திரவேடங்களில் நடித்து வந்த கல்பனா இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார்.



பஞ்சு அருணாசலம் (75) :

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர். சினிமா ஸ்டுடியோவில் 'செட்' உதவியாளராக வேலை செய்யத் தொடங்கிய பஞ்சு அருணாசலம் அவரது உறவினரான கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராகப் பணியாற்றினார். பல திரைப்படங்களுக்குப் பாடல்களும் எழுதியுள்ளார். அன்னக்கிளி படம் மூலம் இளையராஜாவை அறிமுகப்படுத்தினார். இவர் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய 15 படங்களுக்கு மேல் திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். இவர் கதை - வசனம் எழுதி தயாரித்த ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்துக்கு சிறந்த படத்துக்கான தமிழக அரசின் விருது கிடைத்தது. 'ஆறிலிருந்து அறுபது வரை', 'கல்யாண ராமன்', 'மைக்கேல் மதன காமராஜன்', 'வீரா' என பல வெற்றிப் படங்களை தயாரித்த பஞ்சு அருணாசலம் அவர்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மரணமடைந்தார்.



சோ. ராமசாமி (82) :

வழக்கறிஞராக, நாடக - திரைப்பட நடிகராக, வசனகர்த்தாவாக, பத்திரிகையாளராக என பன்முகத்திறன் படைத்தவர். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடத்திலும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தவர். ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராகவும் நலம் விரும்பியாகவும் இருந்தார். ஜெயலலிதாவின் அரசியல் வியூகங்களுக்கு வழிகாட்டவும் அவற்றைச் செயல்படுத்தவும் முக்கியப் பங்காற்றியவர். இவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார், நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். கிட்டதட்ட 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். அரசியல் நையாண்டி எழுத்துகளால் தனக்கென பத்திரிக்கை உலகில் தனி இடம் வகுத்துக்கொண்ட இவர் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார்.



ஜெ. ஜெயலலிதா (68) :

சினிமா, அரசியல் இரண்டிலும் ஜெயித்து காட்டியவர். தமிழக மக்களின் மனதில் நீங்க இடம்பிடித்தவர். ஜெயலலிதா 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் எம்.ஜி.ஆருடன் மட்டுமே 26 படங்கள். மேலும், சிவாஜி, என்.டி.ஆர், நாகேஸ்வரராவ், தர்மேந்திரா போன்ற போன்ற முன்னனி நடிகர்கள் பலரோடு இணைந்து நடித்துள்ளார். ஜெயலலிதாவின் இறப்பு, தமிழ் சினிமாத்துறைக்கும், அரசியல்துறைக்கும் பேரிழப்பு.


- ப.சூரியராஜ்

2017-ல் வாட்ஸ் ஆப்...?

சைபர் சிம்மன்

தொழில்நுட்ப உலகில் மாற்றம் ஏற்பட்டு வரும் வேகத்தைப் பார்த்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக செல்போன் சார்ந்து நிகழும் மாற்றங்கள் இன்னும் வேகமாக, இன்னும் மலைப்பாக இருக்கின்றன‌. சில ஆண்டுகளுக்கு முன்வரை, செல்போன் என்றால் நோக்கியா என்றிருந்தது. உயர் ரகப் பிரிவில் பிளாக்பெர்ரி ஆதிக்கம் செலுத்தியது. இன்றோ நோக்கியா இருந்த இடம் தெரியவில்லை. பிளாக்பெரி ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்தப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஸ்மார்ட் போன்களுக்கான இயங்குதளம் என்றால் ஆண்ட்ராய்டும், ஐ.ஓ.எஸ்., ஆகியவை மட்டுமே என்றாகியிருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் வாட்ஸ் ஆப் சேவையில் நிகழவிருக்கும் மாற்றங்களைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

முன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் ஆப் வசதியைத் தொடர்ந்து பெற வேண்டும் என்றால், உங்கள் போனை மாற்றிக்கொள்ளுங்கள் எனச் சொல்லும் அளவுக்கு வாட்ஸ் ஆப் செல்வாக்கு மிக்கதாக மாறியிருப்பதும் இந்த மாற்றங்களின் முக்கிய அம்சம்.

பழைய மாடல்களுக்கு ‘குட்பை’

பழைய போன் மாதிரிகள் மற்றும் பழைய இயங்குதளங்களைக் கொண்ட போன்களில் எல்லாம் இந்தச் சேவை 2016-ம் ஆண்டுக்குப் பிறகு செயல்படாது எனும் தகவலை நீங்கள் அறிந்திருக்கலாம். கடந்த பிப்ரவரி மாதம் வாட்ஸ் ஆப் தனது வலைப்பதிவில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன் பிறகு நவம்பர் மாதம் வெளியான‌ ஒரு அறிவிப்பு இதை உறுதி செய்தது.

இதன்படி நோக்கியா, பிளாக்பெர்ரி, விண்டோஸ், ஆண்ட்ராய்டு ஆகியவற்றின் பழைய மாடல்களில் வாட்ஸ் ஆப் சேவை செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ள‌து. ஐ.ஒ.எஸ். இயங்குதளத்தின் பழைய வடிவங்களுக்கும் இது பொருந்தும். எனினும் இந்த முதல் கட்டப் பட்டியலிலிருந்து பிளாக்பெர்ரி மற்றும் நோக்கியா சிம்பயான் போன்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நீட்டிப்பும்கூட 2017 ஜுன் மாதம் வரைதான். அதன் பிறகு வாட்ஸ் ஆப் செயல்படக்கூடிய புதிய போன் அல்லது இயங்குதளத்திற்கு மாறியாக வேண்டும்.

ஆண்ட்ராய்டு 2.2, ஐ.ஓ.எஸ். 6 மற்றும் விண்டோஸ் போன் 7 உள்ளிட்ட பழைய ரகங்களில் இந்த ஆண்டுக்குப் பிறகு வாட்ஸ் ஆப் சேவையைப் பயன்படுத்த இயலாது. வாட்ஸ் ஆப் விஷயத்தில் இப்படிக் காலாவதியாகும் பழைய போன் மாதிரிகளை வைத்திருப்பவர்கள் தங்கள் செல்போன்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஒரு செயலிக்காக போனை மாற்ற வேண்டும் என்பது கொஞ்சம் விநோதமானதுதான். வாட்ஸ் ஆப்பின் செல்வாக்கு அப்படி என்றாலும், இந்த மாற்றத்திற்கான காரணம் அதுவல்ல. வாட்ஸ் ஆப் தொடர்ச்சியாகப் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. ஒரு சேவையாகத் தனது பயன்பாட்டுத்தன்மையைத் தக்க வைத்துக்கொள்ள வாட்ஸ் ஆப்பிற்கு இந்தப் புதுப்பித்தல் அவசியம்.இதன் பக்கவிளைவுதான், பழைய இயங்குதளங்கள் மீது கவனம் செலுத்த முடியாத நிலை.

புதிய வசதிகள் என்ன?

இதற்கு வாட்ஸ் ஆப்பைக் குற்றம் சொல்லவும் முடியாது. ஏனெனில் வாட்ஸ் ஆப் அறிமுகமான காலத்தில், பிளாக்பெர்ரியும் ஐபோனும் நோக்கியா சிம்பயான் போன்களுமே ஸ்மார்ட் போன் பரப்பில் பரவலாகப் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் அதன் பிறகு ஆண்ட்ராய்டு அலை வீசத் தொட‌ங்கி, ஐபோன் ஆதிக்கமும் வலுப்பெற்றது. இந்தப் போக்குகளுக்கு ஈடு கொடுத்து வளர்ச்சி அடைந்த வாட்ஸ் ஆப், முன்னணிச் செயலிகளில் ஒன்றாக இருப்பதோடு, வீடியோ காலிங் உள்ளிட்ட வசதிகளை அறிமுகம் செய்திருக்கிறது. மேலும் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்நிலையில், புதிய வசதிகளுக்கு ஈடு கொடுக்க ஏற்றதாக இல்லாத பழைய இயங்குதளங்களுக்கான ஆதரவை நிறுத்துக்கொள்வது தவிர வேறுவழியில்லை என வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது. நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் உறவு கொள்வதற்கான மேம்பட்ட வழிகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க இது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது. எதற்கும் பழைய போன் வைத்திருப்பவர்கள் வாட்ஸ் ஆப் சேவை செயல்படக்கூடிய போன்களின் பட்டியலைப் பார்த்துக்கொள்வது நல்லது. இந்த முழுப் பட்டியலை இந்த இணைப்பில் காணலாம்: http://bit.ly/2hYKk1m

வரும் காலத்தில் வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்ய இருப்பதாகக் கூறப்படும் புதிய அம்சங்களில் சிலவற்றைப் பார்க்கலாம். செய்திகளைப் பகிர்ந்து கொண்ட பின் திரும்பப் பெறும் வசதி மற்றும் திருத்தம் செய்யும் வசதிகள் அறிமுகம் ஆக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எடிட், டெலிட் செய்யலாம்

இப்போதைக்கு வாட்ஸ்ஆப்பில் ஒரு செய்தியை அனுப்பிவிட்டு, பின்னர் அதை விலக்கிக்கொள்ள நினைத்தால் அதற்கான வழியில்லை. ஆனால், ஜிமெயிலில் இருப்பது போலவே அனுப்பியவுடன், அந்தச் செய்தியைத் திரும்பப் பெற விரும்பினால் அதைச் சாத்தியமாக்கும் வசதி அறிமுகமாக உள்ளது. இதன்படி செய்தியின் மீது கிளிக் செய்தால், அதைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புத் தோன்றும். அதை கிளிக் செய்து அந்தச் செய்தியை அழித்துவிடலாம்.

ஆனால் இதற்குக் கால வரையறை இருக்கிறது. தற்போது சோதனை வடிவில் ஒருசில போன் மாதிரிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தச் சேவை முழு வீச்சில் அறிமுகமாகும்போதுதான் இதன் செயல்பாடு பற்றி தெளிவு கிடைக்கும். இப்போதுள்ள செய்திகளை டெலிட் செய்யும் வசதியில் இருந்து இது மாறுபட்டது. ஏனெனில் செய்திகளை டெலிட் செய்தாலும் அது அனுப்பியவர் போனில் இருந்துதான் மறையும். மற்றவர்கள் போனில் இருந்து நீக்க முடியாது. ஆனால் புதிய சேவையில் இது சாத்தியம்.

இதே போலவே செய்திகளைத் திருத்தும் வசதியும் அறிமுகமாக உள்ளது.

எல்லாம் சரி, அப்படியே வதந்திகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் ஒரு வசதி அறிமுகமானால் நன்றாக இருக்கும் அல்லவா..?

பணமழையில் வருமான வரித்துறை: கணக்கில் வராத பணம் எவ்வளவு தெரியுமா?


புது தில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு வருமான வரித் துறையினர் நடத்திய அதிரடி சோதனைகளில் கணக்கில் காட்டப்படாத ரூ.4,172 கோடி மதிப்பிலான சொத்துகள், ரொக்கம் கண்டறியப்பட்டுள்ளது.

சாதாரண, ஏழை, எளிய மக்கள் வெறும் 2,500க்கு நாள் முழுக்க வரிசையில் நிற்கும் நிலையில் ரூ.105 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது தான் பொது மக்களுக்கு மட்டும் அல்ல வருமான வரித்துறையினருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அறிவித்தது. கருப்பு பண ஒழிப்பில் முக்கிய நடவடிக்கையாக இதனை மத்திய அரசு அறிவித்தது.

இதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித் துறையினரும் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 28-ஆம் தேதி வரை நடைபெற்ற சோதனைகளில் இதுவரை ரூ.4,172 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத சொத்துகள், ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்கம் உள்ளிட்ட நகைகள், ரொக்கத்தின் மதிப்பு மட்டும் ரூ.549 கோடியாகும்.

இதில் புதிதாக வெளியிடபட்டுள்ள ரூ.500, ரூ.2000 நோட்டுகளாக ரூ.105 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் 477 வழக்குகளை சிபிஐ, அமலாக்கத் துறைக்கு வருமான வரித் துறையினர் பரிந்துரைத்துள்ளனர்.

மோடி சொன்ன அந்த நாள் வந்துவிட்டது: இதுவரை நடந்தது என்ன?


புது தில்லி: நவம்பர் 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்த அன்றைய தினம், கையில் வெறும் 500 ரூபாய் வைத்திருந்தவர்கள் முதல், ரூ.500 கோடி வைத்திருந்தவர்கள் வரை அனைவருமே கலக்கம் அடைந்தனர்.

டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் பணத்தை மாற்றிக் கொள்ளலாம். 50 நாட்களில் நிலைமை சரியாகிவிடும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார்.

பிரதமர் மோடி கொடுத்த காலக்கெடு இன்றோடு முடிகிறது. ஆம், மோடி சொன்ன அந்த நாள் வந்து விட்டது. இதுவரை எந்த அரசும் எந்த அதிரடி நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்த மக்கள், மோடியின் நடவடிக்கைக்கு மனதளவில் நிச்சயம் ஆதரவு அளித்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

வங்கியில் கால்கடுக்க நிற்கும்போது வேதனை தெரிவித்தாலும், நிச்சயம் இந்த நடவடிக்கையால் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் என்று நம்பினார்கள். அதனால்தான், பெரிய அளவில் இதுவரை எந்த அசம்பாவிதங்களும், வன்முறைகளும் அரங்கேறவில்லை.

அன்றைய தினம் முதல் இதுவரை மோடியின் நடவடிக்கையால் நடந்தது என்னவென்று பார்க்கலாம்.

•நவம்பர் 10ம் தேதி முதல் அம்மாத இறுதி வரை சுமார் 1.77 லட்சம் பேர், தாங்கள் வங்கிகளில் வாங்கிய ரூ.25 லட்சம் வரையிலான கடன் தொகைகளை பழைய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து அடைத்துள்ளனர். இதன் மூலம் பெறப்பட்ட மொத்த கடன் தொகை ரூ.50 ஆயிரம் கோடி.

• பழைய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு அதிகளவிலான வருமான வரித் தொகை செலுத்தப்பட்டுள்ளது.

•வங்கிகளில் அதிகளவில் பணத்தை டெபாசிட் செய்த சுமார் 5 ஆயிரம் பேருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

• நவம்பர் 8ம் தேதி முதல் நாடு முழுவதும் 983 அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

• நவம்பர் 8ம் தேதிக்குப் பிறகு வருமான வரித்துறையினரால் ரூ.4,172 கோடி மதிப்புள்ள சொத்து மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

•பல பெரும் புள்ளிகளின் வீடு மற்றும் அலுவலகங்கள் வருமான வரித்துறையினரின் சோதனைக்கு  உட்படுத்தப்பட்டுள்ளது.

• சரியாக சொல்ல வேண்டும் என்றால், தேன் கூடு போன்ற கருப்புப் பணப் பதுக்கல், மோடியின் இந்த நடவடிக்கையின் மூலம் கல்லெறியப்பட்டு கலைக்கப்பட்டிருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

நிலைமை சரியாக இன்னும் 50 நாட்கள் ஆகும் என்ற காலக்கெடு வேண்டுமென்றால் சற்று நீட்டிக்கப்படலாம். ஆனால், உண்மையில் நடந்திருப்பவை அனைத்தும் நல்லவையே.. இனி நடக்கப்போவதும் நல்லவையாகவே இருக்கும் என்று நம்புவோம். சாமானியனின் இந்த நம்பிக்கைதான் இந்த நடவடிக்கையின் உண்மையான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

அனைத்துக்கும் பின்னால் நடராஜன் : பொதுக்குழுவுக்கு முன்பும்... பின்பும்...!


முடியாது... நடக்காது’ என்று யூகிக்கப்பட்ட அனைத்தையும் யூகங்கள் ஆக்கி... பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார், சசிகலா. அச்சு பிசகாமல் திட்டமிட்டபடி அனைத்தையும் நடத்தி முடித்து இருக்கிறார்கள் கழகக் கண்மணிகள். கட்சியின் நிர்வாகிகள் வேண்டுமானால், ஆதரவாக இருக்கலாம்; ஆனால், தொண்டர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லிவந்த நிலையில்... வீட்டில் இருந்த சசிகலாவைத் தேடி பொதுச் செயலாளர் பதவி நியமனம் செய்யப்பட... அவருக்குப் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்கிற கேள்விதான் டெல்லி முதல் தி.மு.க வரை தொங்கித்தொங்கி நிற்கிறது.

டெல்லியின் அச்சுறுத்தல்கள்!



முதலில் இருந்தே சசிகலாவை எதிர்த்துவரும் பி.ஜே.பி-யினர்... அவரை, கட்சியைவிட்டு வெளியேறுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். சசிகலாவிடம் பேச... நிர்மலா சீதாராமன் அனுப்பிவைக்கப்பட்டார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து நவம்பர் 8-ம் தேதிக்குப் பிறகு 7 முறை தமிழகம் வந்திருந்தார் அவர். அதில், பலமுறை சசிகலாவை நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். சசிகலாவை வழிக்குக் கொண்டுவரும் பொறுப்பை நிர்மலா சரியாகச் செய்தாலும், கட்சியைவிட்டு வெளியேறுவதற்கு மட்டும் தொடர்ந்து பிடி கொடுக்காமல் இருந்துள்ளார். இதற்குப் பிறகு வெங்கய்ய நாயுடுவைக் களம் இறக்கியது பி.ஜே.பி. கடந்த 4-ம் தேதி ஜெயலலிதா உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவே... அசுரவேகத்தில் களம் இறங்கியது பி.ஜே.பி. சசிகலாவை, கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்படுவதற்கு பி.ஜே.பி கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. அதனால், எம்.எல்.ஏ-க்கள் அனைவரையும் வரவழைத்து... அப்போலோ மருத்துவமனையில், தனக்கு ஆதரவாகக் கையெழுத்துகளை சசிகலா வாங்கிய விஷயம் தெரிந்தது. அந்த ஃபைலை எல்லாம் கிழித்துப் போட்டுவிட்டு அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு நேரில் வந்த வெங்கய்ய நாயுடு... அவர், தயார் செய்துகொண்டு வந்திருந்த ஃபைலில்... எம்.எல்.ஏ-க்கள் அனைவரையும் கையெழுத்துப் போடவைத்து கவர்னர் மாளிகைக்கு அழைத்துச்சென்றார். அத்துடன் அன்று இரவே அவர்களைப் பதவி ஏற்கவைத்தது வரை எல்லாமே வெங்கய்ய நாயுடு உத்தரவின் கீழ்தான் நடந்தது.

ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்த தமிழகம் வந்த பிரதமர் மோடி, ஆளுநர் மற்றும் தமிழக பி.ஜே.பி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டுச் சென்றார். அதன்படி, தமிழகத்தில் ஆளுநர் அனுமதி இல்லாமல் எந்த ஃபைலும் நகரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

போயஸ் கார்டன் இல்லத்தில் நடராஜனும், சசிகலாவும் அமைச்சர்களை சந்தித்துப் பேசிய மறுநாளே... சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் அதிரடிச் சோதனையை நடத்தினர். இது, சசிகலா தரப்புக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்பட்டது. டெல்லி சென்றுவந்த பிறகு... ஓ.பி.எஸ்., கார்டன் சென்று சசிகலாவை சந்திக்கவில்லை. அதைத் தொடர்ந்தே ராம மோகன ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. இது, எல்லாம் சசிகலாவுக்கு டெல்லி கொடுத்த அழுத்தங்கள்.

பதுங்கிப் பாய்ந்த சசிகலா!

மத்திய அரசுடன் சுமுகமாகப் போகவே சசிகலா விரும்பினார். அதற்காகச் சில விஷயங்களையும்... அவர், மத்திய அரசுக்கு செய்துகொடுத்தார். ‘‘தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டம், தேசிய அளவிலான தகுதி நுழைவுத் தேர்வு திட்டம் (நீட்), அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர வழிவகுக்கும் 4 அடுக்கு வரிமுறையான மத்திய விற்பனை வரி முறை (ஜி.எஸ்.டி.) உள்ளிட்ட திட்டங்களை ஆதரிக்காது’’ என்று ஜெயலலிதா கூறிவந்த நிலையில், அந்தத் திட்டங்களுக்கு எல்லாம் அ.தி.மு.க ஆதரித்துக் கையெழுத்துப் போடவைத்தது; ஜெயலலிதா எதிர்த்த பறக்கும் சாலை திட்டத்துக்கு அனுமதி வழங்கியது; ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்ததற்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதியது என்று பல்வேறு சமாதான முயற்சிகளை எடுத்தாலும் எதற்கும் மசியவில்லை, மத்திய அரசு.

அதற்காகச் சும்மாவும் இருக்கவில்லை சசிகலா. ஒருபக்கம், சமாதான முயற்சி செய்துகொண்டு இருந்தாலும்... மறுபக்கம், தனக்கான வேலைகளைச் செய்துகொண்டு இருந்தார் ஜெயலலிதா. அடக்கம் செய்த மறுநாள், ‘துக்ளக்’ ஆசிரியர் சோ மரணத்துக்கு அஞ்சலி செலுத்த சசிகலா சென்றபோது, அவர்தான் கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்படுவார் என்று மறைமுகமாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, போயஸ் கார்டன் வீட்டில் தினமும் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காலையில், கட்சிக்காரர்களைச் சந்திப்பதும்... மதியத்துக்கு மேல், அமைச்சர்களைச் சந்திப்பதும் என்று பரபரப்புக் காட்டினார். இதற்கிடையில் சசிகலா பொதுச் செயலாளராக வந்தால்... கட்சிக்குள் செங்கோட்டையன், மதுசூதனன், முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் போன்றவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுபோல், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை வளைக்க தி.மு.க ஒருபக்கம் முயற்சி செய்யும் என்ற பேச்சும் பரவலாக இருந்தது. ஆனால், இந்தச் சந்தேகங்கள் அத்தனையும் மன்னார்குடி குடும்பத்தின் வியூகத்தில் காலியாகின. போயஸ் கார்டன் வீட்டு வாசலில் சசிகலாவுக்கு முன், செங்கோட்டையனும் மதுசூதனனும் கைகட்டி நின்றார்கள். ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் தலைமையை எதிர்த்த சைதை துரைசாமி, “சின்ன அம்மாவால்தான் அ.தி.மு.க-வைக் காப்பாற்ற முடியும். எனவே, அவர்தான் பொதுச்செயலாளர் பதவிக்கு வரவேண்டும்” என்று பேட்டி கொடுத்தார். தமிழகத்தின் அரசியல் சூழலை கொஞ்சமும் உள்வாங்கிக் கொள்ளாத பி.ஜே.பி., புறவாசல் வழியாக அ.தி.மு.க அரசாங்கத்தையும் கட்சியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று நினைத்து, காய்களை நகர்த்தியது. ஆனால், சசிகலா அசைந்து கொடுக்கவில்லை. ரெய்டுகள் சென்னை முழுவதும் பறந்தன. சேகர் ரெட்டி தொடங்கி, தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீட்டுக்குள் நுழைந்த வருமானவரித் துறை, மத்திய தொழில் பாதுகாப்புப் படையுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள்ளும் நுழைந்தது. ஆனால், அப்போதும் சசிகலா அசராமல் இருந்தார்.

அத்துடன் 29-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு என்று அறிவிக்கவைத்து... அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரையும் கார்டனுக்கு வரவழைத்து... தன்னை, பொதுச்செயலாளர் பதவிக்கு நியமனம் செய்யும்படி கேட்க வைத்தார். தொடர்ந்து மீடியா அதிபர்களைச் சந்தித்து அவர்கள் ஆதரவு தனக்குத்தான் என உணர்த்தினார். உச்சபட்சமாக பச்சமுத்து கைதுக்குப் பிறகு, கோபத்தில் இருந்த அவரது மகன்களே வந்து சசிகலாவைச் சந்தித்து ஆதரவு தெரிவிக்கும் அளவுக்கு இறங்கி வந்திருந்தனர். ‘சசிகலா தரப்பினர் - துணைவேந்தர்கள் சந்திப்பு’ என நீண்டுகொண்டு இருந்த இந்தக் கதைக்கு... ஓ.பி.எஸ்., டெல்லி சென்ற அன்று... அமைச்சர் உதயகுமார், ‘‘சசிகலா, முதலமைச்சராக... பன்னீர்செல்வம் வழிவிட வேண்டும்’’ என பேட்டி கொடுக்கும் அளவுக்குக் கட்சியினர் சசிகலாவுக்கு விசுவாசத்தைக் காட்ட ஆரம்பித்தனர்.

அனைத்துக்கும் பின்னால் நடராஜன்!

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது... காங்கிரஸ்காரர்களுக்குக்கூடத் தெரியாமல் ராகுலை அப்போலோவில் இறக்கிய நாளில் இருந்து ஆரம்பித்தது நடராஜனின் ஆபரேஷன். டெல்லியின் அத்தனை நெருக்குதல்களுக்கும் புதுப்புது வியூகங்கள் மூலம் அணை கட்டினார் நடராஜன். தொல்.திருமாவளவன் முதல் ஸ்டாலின் வரை அப்போலோ வாசலுக்கு வரவழைத்தார். ஒவ்வொரு முறை மத்திய அரசு நெருக்கும்போதெல்லாம் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளைவைத்து அதைத் திசை திருப்பினார். ஜெயலலிதா, மறைவுக்குப் பின்பு அவரின் பெசன்ட் நகர் இல்லம் அடுத்த போயஸ் கார்டனாகியது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டு இருந்த கட்சி நிர்வாகிகள், வேதா இல்லம் நோக்கித் திரும்பினர். எல்லோருக்கும் பின்னணியில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. எதிர்த்த செங்கோட்டையன்கூட இறங்கிவந்தார். இதையடுத்து கட்சி நடவடிக்கைகளைக் கண்காணிக்கக் குடும்ப உறுப்பினர்களைத் தேர்வு செய்தார். அதன்படி கட்சி நிர்வாகிகளைப் பார்த்துக்கொள்ள டி.டி.வி.தினகரனையும், அலுவலக வேலைகளைக் கவனித்துக்கொள்ள வெங்கடேசையும் நியமித்தார் நடராஜன். இவர்கள் ஏற்படுத்திய பாதையில் எந்த மாற்றமும் இல்லாமல் நடந்து முடிந்திருக்கிறது பொதுக் குழு.

பொதுக்குழுவுக்குப் பிறகு...!





நேற்று காலை முதலே பரபரப்புடன் இயங்கிவந்தது போயஸ் கார்டன். முன்பே திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்வு முடித்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டதுபோல் இருந்தது கார்டன் நிகழ்வுகள். காலை 9 மணிக்கு முன்பே நடராஜன் உட்பட குடும்ப உறவுகள் அனைவரும் போயஸ் கார்டன் இல்லத்தில் ஆஜர் ஆகிவிட்டனர். பொதுக் குழு நடந்துகொண்டு இருக்கும்போதே பூச்செண்டுகளும்... மாலைகளும்... கோயில் பிரசாதங்களும் வேதா இல்ல வாசலுக்கு வரத் தொடங்கிவிட்டன. சரியாக 9.45 மணிக்கு வந்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் நேராக பொதுக்குழு தீர்மானத்தைக் கொடுத்துத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டனர். இதன்பிறகு அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். இன்று, போயஸ் கார்டன் நடவடிக்கைகள் எல்லாமே வழக்கத்தைவிட மாறியுள்ளதாகக் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். போயஸ் கார்டன் முகப்பிலே தடுப்புகள் போட்டு யாரையும் காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணிக்கு ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கு என்னென்ன வழிமுறைகள் உண்டோ... அதேபோல இன்று சசிகலாவைச் சந்திக்க வந்தவர்களுக்கும் பின்பற்றப்பட்டது. ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கு முன்பு எப்படிப் பேசவேண்டும், எப்படி நிற்க வேண்டும் என்று எல்லாம் இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுப்பது உண்டு. அதேபோன்று, இன்று சந்திக்க வந்தவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. இளவரசி மகன் விவேக் மட்டும், போவதும் வருவதுமாக இருந்தார். மற்றபடி உறவுகள் யாரும் வீட்டைவிட்டு வெளியில் வரவில்லை.

சேகர் ரெட்டி, ராம மோகன ராவ், மத்திய அரசு, சொத்துக் குவிப்பு வழக்கு எனப் பல பிரச்னைகளை இப்போதைக்கு மறந்தாலும்... இது, எல்லாம் அடுத்து தாக்க உள்ள அஸ்திரங்கள் என்று சசிகலா தரப்பினருக்குத் தெரியும். நீதிபதி வைத்தியநாதன் வேறு, ‘ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது’ என்று கூறியிருக்கிறார். வரும் காலங்களில் சசிகலா கடக்க வேண்டிய தூரங்கள் மிக அதிகம்தான்.

நான் இதனால்தான் அ.தி.மு.க-விலிருந்து விலகினேன்!” ஆனந்த ராஜ் அடுக்கும் காரணங்கள்


சசிகலாவுக்கு எதிராக அ.தி.மு.க-வில் ஒலித்த குரல்களில் நடிகர் ஆனந்த ராஜ் உடையதும் ஒன்று. இவர் 12 ஆண்டுகளாக அ.தி.மு.க தலைமைக் கழக பேச்சாளராக இருந்தார். அ.தி.மு.க பொதுக் குழு கூட்டம் தொடங்குவதற்கு முதல்நாள், அதாவது நேற்று அவர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களுக்கும், தொண்டர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலாவை அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்தபோதே ஆனந்த ராஜை சந்தித்துப் பேசினோம். அப்போது, "கழகத்தில் நடக்கும் குழப்பங்களுக்கு என்ன காரணம்? சசிகலா பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்று கழகத்திலும் சிலர் நினைக்கிறார்களே?" என்று கேட்டதற்கு, “கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்கள் எந்த முடிவு எடுத்தாலும், அதை கட்சியின் தொண்டனாக ஏற்று பணியாற்றுவேன்" என அவர் தெரிவித்திருந்தார். மேலும், "பொதுக் குழுவுக்கு அழைப்பு வரும் என்று நினைக்கிறீர்களா? ஒருவேளை அழைப்பு வரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டோம். அதற்கு, “அழைப்பு வரவில்லை என்றால் அப்போது முடிவெடுப்போம்” என்று பதில் அளித்திருந்தார்.

இந்த நிலையில், ஆனந்த ராஜூக்கு பொதுக்குழுவில் பங்கேற்க அழைப்பு வரவில்லை. இதையடுத்து அவர் அ.தி.மு.க-வில் இருந்து திடீரென்று விலகியுள்ளார். எதற்காக இந்த முடிவுக்கு வந்தார் என்பது குறித்து ஆனந்த ராஜை தொடர்பு கொண்டு கேட்டோம்.

"அ.தி.மு.க-வில் இருந்து விலக பொதுக்குழுவில் கலந்து கொள்ள அழைப்பு வராததுதான் காரணமா?"

"ஆம். மக்கள், பொதுக் குழுவில் ஏன் கலந்துக் கொள்ளவில்லை? என்று என்னை கேட்டால், நான் கட்சியின் உறுப்பினரோ, தொண்டரோ இனி இல்லை. அதனால், நான் ஏன் கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும்? என்று நான் பதிலுக்கு கேட்கலாம். அம்மாவை இழந்த ரணமே இன்னும் என்னை விட்டு விலகவில்லை. இந்த நிலையில் புதிய மாற்றங்களை ஏற்றுக் கொள்வது கடினமாக இருக்கிறது. இந்த முடிவை நான் எடுத்ததன் மூலம் பெரிய பாரத்தை இறக்கி வைத்ததாக உணர்கிறேன்".

"அழைப்பு ஏன் வரவில்லை என்ற காரணத்தை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பவில்லையா?"

"இல்லை. அழைப்பு அனுப்பப்படவில்லை என்று ஆனபிறகு, காரணத்தை தெரிந்து என்ன செய்யப் போகிறோம்? மக்களுக்கும், தொண்டர்களுக்கும் தெரியும். கட்சியில் இப்போது எந்த முடிவும் இவ்வளவு சீக்கிரம் எடுக்க வேண்டாம் என்பதுதான் இப்போதும் நான் சொல்லும் கருத்து. சிறிதுகாலம் கழித்து, எந்த மாற்றத்தை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்".



"செங்கோட்டையன் மற்றும் பொன்னையன் பேசியது பற்றி வருத்தம் தெரிவித்தீர்களே?"

"ஆம். இதுநாள்வரை, அம்மா வழிகாட்டுதலில் இருந்து வந்தவர்கள், அவரைப் பற்றி தவறாகப் பேசியது வருத்தம் அளிக்கிறது. அம்மா யாருடனும் ஒப்பிடப்பட முடியாதவர். அவருக்கு யாரும் ஈடாக முடியாது. அவரால், கட்சியில் சேர்க்கப்பட்டவன் நான். அம்மாவின் தொண்டர்களால் ராசியான நடிகர் என்று நான் அழைக்கப்பட்டவன். கட்சியில் இருந்தவரை நான் விசுவாசம் நிறைந்த தொண்டனாக மட்டுமே இருந்து வந்தேன்".

"பொதுக்குழுவுக்கு அழைப்பு வந்திருந்தால் கலந்து கொண்டிருப்பீர்களா?"

"நிச்சயம் கலந்து கொண்டிருப்பேன். கலந்து கொண்டு என்னுடைய கருத்தையும் பதிவு செய்திருப்பேன். நான் உண்மையான விசுவாசியாக இருந்திருக்கிறேன். இது, என்னுடைய தனிப்பட்ட கருத்து. மற்றவர்கள் பொய் சொல்லச் சொல்கிறார்கள் என்பதற்காக, பொய் சொல்ல மாட்டேன். எனக்கு மனதில் தோன்றும் கருத்தை வெளிப்படையாக கூறுவேன். எடுக்கப்படும் முடிவு, கட்சிக்கு நல்லது செய்யுமா? என்பதை ஆலோசிக்கும்படி சொல்லியிருப்பேன்".

"சசிகலாவை ஆதரிப்போருக்கு உங்களோட கருத்து என்ன?"

"ஒருவருக்காக. மற்றவரை தாழ்த்திப் பேசுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. இப்படிப் பேசுவதற்கு, அவர்களுக்கு என்ன விலை என்று போகப் போக தெரியும். எதிர்காலத்தில் அவர்களுக்கு தரப்படும் பதவிகள், அவற்றுக்கு பதில் சொல்லும் என நம்புகிறேன். கட்சியின் பொதுச் செயலாளராக யார் வந்தாலும் எனது வாழ்த்துகள்".

5 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா சசிகலாவை பொதுக்குழுவில் திட்டிய தினம் இன்று! #December30


சசிகலாவை கட்சியைவிட்டு நீக்கப்பட்டபிறகு நடந்த 2011 பொதுக்குழுவில் சசிகலா குடும்பத்தினரை ஜெயலலிதா திட்டிய தினம் இன்று!

2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி ஜெயலலிதாவிடம் இருந்து அதிரடியாக அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில் சசிகலா மற்றும் அவரது உறவுகளை கட்சியில் இருந்து கட்டம் கட்டினார். ‘வி.கே.சசிகலா, எம்.நடராஜன், திவாகர், டி.டி.வி. தினகரன், வி.பாஸ்கரன், வி.என். சுதாகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ், எம்.ராமச்சந்திரன், ராவணன், அடையாறு மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், டி.வி.மகாதேவன், தங்கமணி, கலியபெருமாள், எம்.பழனிவேல், தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி, சந்தான லட்சுமி சுந்தரவதனம், சுந்தரவதனம், வைஜெயந்தி மாலா ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். அவர்களுடன் உடன்பிறப்புகள் யாரும் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது’ என சொல்லியிருந்தார் ஜெயலலிதா.

இந்த அறிவிப்பு வந்த 11-வது நாள் அதாவது 2011 டிசம்பர் 30-ம் தேதிதான் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூடியது. அந்த பொதுக்குழுவில் சசிகலா நீக்கம் பற்றிய பேச்சுகள் பரபரப்பை கிளப்பின. அதில் பேசிய ஜெயலலிதா ‘‘துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது’’ என்றார். அப்போது ஜெயலலிதா என்ன பேசினார். அந்த பேச்சு அப்படியே ரிப்பீட்டு!

‘‘அரசியல்வாதிகளில் பலவிதம் உண்டு. கட்சிக்காரர்களிலும் பலவிதம் உண்டு. இவர்களில் சிலர் தவறு செய்கின்றனர். அதனால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியை விட்டு நீக்கப்படுகின்றனர். அப்படி நீக்கப்படும் ஒரு சிலர், இருப்பதை வைத்துக்கொண்டு அமைதியாக இருப்போம் என்ற முடிவுடன் அரசியலிலிருந்து ஒதுங்கிவிடுவர். ஒரு சிலர் வேறு கட்சியில் சேர்ந்துவிடலாம் என முடிவு எடுப்பர். தங்களது அரசியல் வாழ்க்கையைத் தொடர்வதற்காக இன்னொரு கட்சியில் சேர்வதில் நாம் தவறு காண முடியாது. ஆனால், இன்னும் சிலரோ கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களை விடாப்பிடியாகத் தொடர்பு கொண்டு, ‘நாங்கள் மீண்டும் கட்சியில் இணைந்துவிடுவோம். எனவே எங்களைப் பகைத்துக்கொண்டால் நாங்கள் மீண்டும் கட்சியில் இணையும்போது உங்களைப் பழிவாங்கிவிடுவோம’ என்று மிரட்டுபவர்களாக இருப்பார்கள். இவ்வாறு கட்சித் தலைமையின் முடிவின்மீது சந்தேகம் ஏற்படுத்தும் விதத்தில் செயல்படும் துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது. அத்தகையவர்களின் பேச்சை நம்பி, அதன்படி செயல்படுகின்ற கட்சியினருக்கும் மன்னிப்பே கிடையாது’’ என முழுங்கினார் ஜெயலலிதா

இதெல்லாம் மூன்று மாதங்கள்தான் ‘‘அக்காவுக்குத் துரோகம் செய்த உறவுகளின் தொடர்புகளைத் துண்டித்து விட்டேன். அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை’ என சொன்ன சசிகலாவை திரும்ப சேர்த்துக் கொண்டார். ஆனால் அவர் உறவுகளை சேர்த்துக் கொள்ளவில்லை. அவர்கள் மீதான நடவடிகை தொடரும் என சொல்லியிருந்தார் ஜெயலலிதா. ‘‘அரசியல் ஆசை இல்லை’’ என்று சொன்ன சசிகலாதான் இப்போது பொதுச் செயலாளர். ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்கள்தான் சசிகலாவை சுற்றி இப்போது நின்று கொண்டிருக்கிறார்கள்.

ஜெயலலிதா மரணத்திற்கு 'இந்த' மருந்துகள்தான் காரணமா?! -அப்போலோ மெயிலும் 5 சந்தேகங்களும்



vikatan.com

"ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை என்ன என்பது உள்ளிட்ட விஷயங்களுக்குள் போக நாங்கள் விரும்பவில்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்வதற்காக அடிப்படை உரிமையை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. ஜெயலலிதா எப்படி இறந்தார் என்ற விவரம் பொதுமக்களுக்குத் தெரியவேண்டும். அவருடைய மரணத்தில் மர்மம் உள்ளது என யார் வேண்டுமானாலும் சந்தேகப்படலாம். ஜெயலலிதா சாவில் மர்மங்கள் உள்ளன என்று பொதுமக்கள் சந்தேகப்படுகின்றனர். பத்திரிகைகளில் பலவிதமான செய்திகள் வந்தன. ஜெயலலிதா நடந்தார் என்று சிலர் பேட்டி கொடுத்தனர். ஜெயலலிதா டி.வி. பார்க்கிறார் என்று மற்றொரு நாள் மற்றொருவர் பேட்டி கொடுக்கிறார். அடுத்த சில நாட்களில் ஜெயலலிதா வீடு திரும்புவார் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியது. எம்.ஜி.ஆர். வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற போது, அது தொடர்பான வீடியோ, புகைப்படம் பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டன. ஏன் அப்படி ஒரு நிலை ஜெயலலிதா விஷயத்தில் இல்லை? சாதாரண ஒரு குடிமகன் என்ற முறையில், ஜெயலலிதாவின் சாவில் எனக்கும் பல சந்தேகங்கள் உள்ளன" -அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக சசிகலாவைத் தேர்வு செய்த நிர்வாகிகள், அவரிடம் தீர்மானத்தின் நகலைக் கொடுத்த தருணங்களில்தான், இப்படியொரு ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் உயர் நீதிமன்ற நீதியரசர் வைத்தியநாதன். ஒட்டுமொத்த அ.தி.மு.க தொண்டர்களின் மனநிலையாகவும் இந்த வார்த்தைகள் வெளிப்பட்டன.

"முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து, நீதியரசர் எழுப்பிய சந்தேகங்களின் அடிப்படையிலேயே நாங்களும் கேள்வி எழுப்புகிறோம். தொலைக்காட்சி விவாதத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் பேசும்போது, ' அம்மா மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை' என்கின்றனர். மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு நேற்று பேசும்போது, ' மருத்துவர்கள் சொல்கின்ற தகவல்கள், தவறாக இருப்பதற்கு வாய்ப்பில்லை' என்கிறார். அரசியல்ரீதியாக, முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை அணுக நாங்கள் விரும்பவில்லை. நீதிமன்றம் சொல்வதைப் போலவே, மருத்துவரீதியாக இந்த விவகாரத்தை அணுகுகிறோம். நாங்கள் முன்வைக்கும் ஐந்து கேள்விகளுக்கு அப்போலோ மருத்துவமனை விளக்கம் தருமா?" என ஆதங்கத்தோடு பேசினார் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் புகழேந்தி. அவர் எழுப்பும் கேள்விகள் இதோ...!

1. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்படும்முன், சில நாட்களாக காய்ச்சலால் அவதியுற்ற நிலையில், சுயநினைவு இழந்த நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா? ஆம் எனில், சுயநினைவு இழக்கக் காரணங்கள் யாவை? சிகிச்சைக்காக அவரை அனுமதித்ததில் காலதாமதம் ஏற்பட்டதா?

2. முதல்வரின் உறுப்புக்கள் நன்றாகச் செயல்பட்டநிலையில், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கும்போது இதயத் துடிப்பு முடக்கம் (cardiac arrest) வருவதற்கான காரணங்கள் யாவை? அது திடீரென ஏற்பட்டதா அல்லது மெல்ல ஏற்பட்டதா? இதைக் கண்டறிந்தபின், உடனடி சிகிச்சை அளிக்க காலதாமதம் ஏற்பட்டதா?

3. அப்படி நின்ற இதயத் துடிப்பைச் சீராக்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது? 30 முதல் 40 நிமிடங்கள் ஆனது என பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. அப்படியெனில், மூளைச் சாவைத் தடுக்க முடியாது. முதல்வருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டது உண்மையா? மருத்துவரீதியாக மூளைச்சாவைத் தடுக்கவே எக்மோவைப் பயன்படுத்துவார்கள்.



4. முதலமைச்சரைக் காப்பாற்ற முடியாமல் போனதற்கு மறைமுக காரணிகள் (underlying conditions) இருந்ததாக, அப்போலோ மருத்துவமனையின் அறிக்கையில் வெளியானது. அவை என்ன என்பது விளக்கப்படவில்லையே ஏன்? உதாரணம். முதல்வருக்கு இருந்த சர்க்கரை நோய் பாதிப்பு.

5. இவை எல்லாவற்றையும்விட, குறிப்பிட வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. மனஅழுத்தத்தைக் குறைப்பதற்காக புரோப்பிடன் (prophiaden) 75 மில்லி கிராம் மருந்தை ஜெயலலிதா எடுத்ததாகச் சொல்கிறார்கள். இந்த மருந்தை அவர் எடுத்துக் கொண்டாரா? சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட, பயோகிளிட்டசோன் (pioglitazone), ரொசிகிளிப்டஜொன் (rosiglipazone) போன்ற மாத்திரைகள் அவருக்குக் கொடுக்கப்பட்டதா? புரோப்பிடனும் பயோகிளிட்டசோனும் இருதயத் துடிப்பை பாதிக்கும் என மருத்துவ ஆய்வுகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில், 'ஜெயலலிதாவுக்கு சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தத் தவறான மாத்திரைகள் கொடுக்கப்பட்டன' என செய்தி வெளியிட்டுள்ளது. புரோப்பிடன் கொடுத்தாலே இருதயத் துடிப்பில் மாற்றம் ஏற்படும். 'அப்போலோ மருத்துவமனையின் இ-மெயில்களில் இந்தத் தகவல் கசிந்துள்ளது' என அந்தத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது - என விவரித்த மருத்துவர் புகழேந்தி,

"டிசம்பர் 3-ம் தேதி இரவில் அவருக்கு செயற்கை சுவாசம் துளி அளவும் கொடுக்கப்படவில்லை. அதற்கு முந்தைய அப்போலோ அறிக்கையில், ' செயற்கை சுவாசம் அளிக்கப்படவில்லை' எனத் தெரிவித்திருந்தது. இதில் எந்த உண்மையும் இல்லை. டிசம்பர் 4-ம் தேதி இறப்பு ஏற்பட்டிருக்குமா என்ற சந்தேகமும் எங்களுக்கு எழுகிறது. ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளக் கூடிய அனைத்து உரிமைகளும் பொதுமக்களுக்கு இருக்கிறது. அதைத் தெளிவுபடுத்தாமல் கடந்து செல்வதில் இருந்தே சந்தேகங்கள் வலுக்கின்றன. அரசியல்ரீதியாக அணுகாமல், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் பற்றி வெளி உலகுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை அரசு நிர்வாகத்துக்கும் அப்போலோ மருத்துவமனைக்கும் இருக்கிறது" என்றார் நிதானமாக.

Clear NEXT for title of Doctor, MCI recommends Exit Tests for Medical Students


The Medical students will need to clear National Exit Test (NEXT) in order to be recognized as Doctor. According to the Indian Medical Council (Amendment) Bill 2016, unveiled by the Union health ministry, the medical aspirants will need to clear the National Exit Test (NEXT). The National Exit Test exam is being conducted to create a level-playing field in medical education and is increasingly privatized. The National Exit Test is being made to ensure the quality of teachers. The aspirants will need to clear the substitute three tests, which includes NEET for postgraduate admissions, recruitment for central health services and the foreign graduate medical examination.

The National Exit Test will be an outcome-based test. As per the latest changes aspirants are required to note that the results of how students from individual colleges have performed in NEXT will be made public. The college has stated that over 90% students cleared the test, which will automatically act as an indicator. According to a report, Dr P Shingare, who heads the state’s department of medical education and research, The Next exam will get about a standardization. ALSO READ: No NEET in Odia Language, Freethought Party of India urges CM to refrain from lobbying

Earlier with suggestions from the Medical Council of India (MCI) and the parliamentary standing committee on health and family welfare, the Centre was planning an exit examination for MBBS students passing out of government and private medical colleges. The MCI had recommended to the ministry in July 2015 that there should be an exit examination for MBBS students to ensure quality. This move is aimed to bring clear the disparities.

NEXT: Licence to practise MBBS

DECCAN CHRONICLE. | TEENA THACKER
NEW DELHI: Soon, medical graduates will have to clear a National level “exit test” (NEXT) to practise medicine in India. The uniform National Exit Test (NEXT) as proposed by the government will be the first ever, four-in-one test that will be conducted for MBBS graduates, foreign medical graduates, postgraduate aspirants, and the Union Public Service Commission-CMS (combined medical services) aspirants so as to become eligible to practise medicine in the country.

Serving four purposes, the exam therefore will substitute the existing All India Postgraduate Entrance Test conducted annually, the UPSC-CMS exam which is conducted to recruit medical graduates into a variety of central government organisations and the foreign graduate medical exam, mandatory for foreign medical graduates to practise in India.


Union health ministry officials believe that the move will standardise the medical education in India. It gains significance as earlier the parliamentary standing committee in its report had said there was an urgent need to introduce a common exit test for doctors, which would go a long way in standardising the passing out medical graduates and certify the competencies which are expected to be generated out of them.

Once introduced, the exam will also reduce the burden of multiple exams for medical aspirants in the country.

Medical Council invites suggestions
“The idea is to do away with multiple exams held for those wanting to practise medicine in India. This is set to reduce the burden on medical students,” said a senior official in the ministry. To introduce the new exam from next academic session, the Union health ministry has proposed amendments to the IMC (Amendment) Bill 2016 and has put it on their website, inviting suggestions by January 6, 2017.

The exit exam proposed from the 2017-18 academic session will also make it mandatory for the graduates to attain minimum prescribed percentiles to practise medicine.

Thursday, December 29, 2016

புதிய வேலைச் சந்தை: புத்தாண்டில் வேலைக்குப் போகலாமா!

ம. சுசித்ரா

இந்த ஆண்டு இந்தியா கண்ட அரசியல் பொருளாதார மாற்றங்களால் 2017-ம் ஆண்டு எப்படி இருக்கப் போகிறது என்கிற ஆவலும் பதற்றமும் அதிகரித்துள்ளது. பண மதிப்பு நீக்க விவகாரமும் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது. அதிலும் இந்தியாவில் 80 கோடிக்கும் அதிகமானோர் வேலைக்குச் செல்லும் வயது வரம்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்திய வேலைச் சந்தை எத்தகைய மாற்றங்களைச் சந்திக்கவிருக்கிறது என்பதை அலச வேண்டிய நேரம் இது!

பெண்களுக்கு முதல் இடம்

‘இந்தியாவின் வேலைவாய்ப்பு எதிர்காலம்’ தொடர்பாகக் கிட்டத்தட்ட 2000 நிறுவனத் தலைவர்களிடம் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, சுற்றுலா, சுகாதாரம், உள்கட்டமைப்பு, உற்பத்தி ஆகிய துறைகள் 2017-ல் அதிகப்படி யான வேலை வாய்ப்பை அளிக்கப் போகின்றன எனத் தெரியவந்துள்ளது. தொழில்முனைவோருக்கும் பிரகாசமான வாய்ப்புகள் காத்திருப்பதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. அதிலும் 70 சதவீத நிறுவனங்கள் பெண்களை நியமிக்க உள்ளன. அமைப்புசாராத் தொழில்களில் மட்டுமல்லாமல் பெரிய நிறுவனங்களிலும் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிக்கவிருக்கிறது. வழக்கம்போல டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வாய்ப்புகள் கொழிக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

வங்கி இல்லாமலா!

அதேநேரத்தில் இந்த ஆய்வைத் தாண்டி சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துவது, நிதித் தொழில்நுட்பம் (fin-tech), டிஜிட்டல் கட்டணம் செலுத்துதல் (digital payments), வங்கி உள்ளிட்ட துறைகளில் நிச்சயமாக வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதே. ஆனால், பண மதிப்பு நீக்கத்தால் மிகக் குறைவான சம்பள உயர்வைத்தான் எதிர்பார்க்க முடியும். சம்பளத்தில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் பதவி உயர்வு கிடைப்பதிலும் பின்னடைவு ஏற்படலாம்.

நம்பிக்கை இழக்க வேண்டாம்

மறுபக்கம் அமெரிக்காவில் வேலை செய்யக் கனவு காணும் இந்திய இளைஞர்களுக்கு டிரம்ப் என்ன சொல்லப் போகிறார் என்பதும் கேள்விக்குறியே. அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதையும், வெளிநாட்டினருக்குத் தற்காலிகமாக ஊழியர் அனுமதி விசாவான ஹெச்-1பி வழங்குவதையும் தன்னுடைய அதிபர் தேர்தலுக்கான பரப்புரையிலேயே வன்மையாகக் கண்டித்தார் டிரம்ப். இதன் தாக்கம், வேலை தேடி அமெரிக்கா செல்பவர்களுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்களிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

ஆனாலும் இந்தியாவில் உள்ள மனிதவளம், தொழில் திறமை நிறைந்த ஊழியர்கள் இங்கே அதிகமாக இருப்பது, குறைந்த சம்பளத்தில் அதிகத் திறமைசாலிகள் கிடைப்பதால் உலகப் பெரு நிறுவனங்கள் இந்தியச் சந்தையை விட்டு வெளியேற மாட்டார்கள். எப்படி இருந்தாலும் தொழில்நுட்பமயமாதலை நோக்கி அரசே நகர்வதால் எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தகவல்தொழில்நுட்பத்தில் தங்களைத் தகவமைத்துக்கொள்வது அவசியம். இத்தகைய பின்னணியில் புதிதாக வேலைக்குச் செல்ல முயற்சிப்பவர்கள் தங்களை எப்படித் தயார்படுத்திக் கொள்வது?

மின்னஞ்சல் எழுதுதல்

ஒரு நிறுவனத்துக்குள் அடி எடுத்து வைப்பதற்கு முன்பாக நாம் யார் என்பதைச் சொல்வது நம்முடைய விண்ணப்பக் கடிதம். இன்று பல நிறுவனங்கள் மின்னஞ்சல் மூலமாகத்தான் தங்களுடைய ஊழியர்களோடும் வேலைக்கு நியமிக்க இருப்பவர்களோடும் தொடர்புகொள்கின்றன. அவ்வாறு நாம் மின்னஞ்சல் எழுதும்போது ‘chat lingo’ எனப்படும் அரட்டை மொழியில் இல்லாமல் வேலைக்கு ஏற்றபடி நேர்த்தியாக எழுத வேண்டும். இல்லையேல் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர் பொறுப்பற்றவர் என்கிற எண்ணம்தான் வேலை வழங்குபவர்களுக்கு ஏற்படும். தெளிவான மொழிநடையில் இலக்கணப் பிழைகள் இல்லாமல் சுருக்கமாக மின்னஞ்சலை எழுதப் பழகுவது அவசியம்.

எம்.எஸ். எக்ஸல் பயன்படுத்துதல்

கணினியை அதிகம் பயன்படுத்துபவர்கள்கூட வெறும் தகவல்களைச் சேமிக்கவும் அட்டவணைகளை வரையவும்தான் எம்.எஸ். எக்ஸலை (MS Excel) பயன்படுத்துவதாக நினைக்கிறார்கள். ஆனால், விரைவில் இந்தப் புரோகிராமிங் முறை அலுவலக வேலைகள் பலவற்றுக்கு இன்றியமையாத ஒன்றாக ஆகிவிடும் எனப் பணிவாழ்க்கை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பட்ஜெட் தாக்கல், நிகழ்ச்சிகளைத் திட்டமிடுதல், சிறிய புராஜெக்ட்களுக்குக் கணிதத் தீர்வுகள் காணுதல் இப்படி வேலை தொடர்பான பல விஷயங்களுக்கு எக்ஸல் பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் அதைப் பயன்படுத்தப் பயிற்சி எடுப்பது நல்லது.

பவர்பாய்ண்ட் பயன்படுத்தலாமே!

ஒரு புதிய திட்டத்தை அனைவரையும் கவரும் விதமாகச் சிறப்பாகச் சமர்ப்பிக்கப் பவர்பாய்ண்ட் பிரசெண்ட்டேஷன் (PowerPoint Presentation) கைகொடுக்கும். கல்லூரி நாட்களிலேயே இதைப் பயன்படுத்தப் பழகுவது நல்லது.

இணையத்தைத் துழாவுதல்

இன்று பெரும்பாலான தகவல்கள் இணையம் மூலமாகவே சேகரிக்கப்படுகின்றன. தேடுபொறியில் எந்த வார்த்தையைத் தட்டச்சு செய்தாலும் கோடிக்கணக்கான தகவல்கள் வந்து குவியும். ஆனால் அவற்றில் எவையெல்லாம் நம்பத் தகுந்தவை, எந்தெந்த வலைத்தளங்களில் சரியான தரவுகள் கிடைக்கும் என்பதைக் கண்டறிய முக்கியச் சொற்களை (keywords) கண்டுப்பிடிக்கப் பயிற்சி அவசியம்.

பணிவாழ்க்கைத் தொடர்பாற்றல்

எல்லாவற்றுக்கும் மேலாக தொடர்பாற்றல் இன்றியமையாதது. நேர்முகத் தேர்வின்போதும் அதன் பிறகு மற்ற பணிச் சூழல் சந்திப்புகளின் போதும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சூழலுக்கு ஏற்பப் பேசவும் நடந்துகொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும். எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் துணிச்சலையும் மாற்றத்துக்கேற்பத் தகவமைத்துக் கொள்வதற்கான தயார்நிலையும் இருந்தால் என்னாளும் வெற்றி நமதே.

ரிசர்வேஷன் சார்ட் தயாரித்த பின் ரயில் டிக்கெட் புக் செய்தால் 10% தள்ளுபடி


டெல்லி: ரயில்களில் பயணம் செய்யும் போது, ரிசர்வேஷன் சார்ட் தயாரித்த பின் டிக்கெட் புக் செய்தால் 10% தள்ளுபடி அளிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல், ரயில் டிக்கெட் புக் செய்தால் சிறப்பு சலுகை அளிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதாவது ரயில் டிக்கெட் புக் செய்யும் போது, இடம் இருந்தால் உடனடியாக டிக்கெட் கிடைத்துவிடும். இல்லையெனில் அவர்கள் வெயிட்டிங் லிஸ்டில் இருக்க நேரிடும். இதற்கான ரிசர்வேஷன் சார்ட், ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும்.

இந்நிலையில் ரிசர்வேஷன் சார்ட் தயாரித்த பிறகும், சில இருக்கைகள் காலியாக இருக்கக்கூடும். எனவே சார்ட் தயாரித்த பிறகு, காலியான இருக்கைகளுக்கு ரிசர்வேஷன் செய்தால் அவர்களுக்கு 10% தள்ளுபடி அளிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் ஷதாப்தி, துரந்தோ, ராஜ்தானி ரயில்களில் சோதனை செய்து பார்த்துள்ளது. இந்த பரிசோதனை முயற்சி அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளது.

மேலும் அனைத்து ரயில்களிலும் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல், ஆறு மாதங்களுக்கு பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 10 % தள்ளுபடி, சார்ட் தயாரிக்கும் முன்பு, குறிப்பிட்ட வகுப்பு பெட்டியில் கடைசியாக விற்கப்பட்ட டிக்கெட் கட்டணத்தில் இருந்து அளிக்கப்படும்.

Aadhaar

மிரட்டுவது யார்!
கொலை செய்து விடுவதாக
மிரட்டுவது யார்: ராவ் பரபரப்பு பேட்டி

சசிகலாவை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியில் அமரவைக்க, அவரது சொந்தங்கள் மும்முரம் காட்டி வருவதால், தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது.

இந்தச் சூழலில், ஜெ., ஆட்சிக்காலத்தில், தலைமை செயலராக நியமிக்கப்பட்டு, சமீப நாட்கள் வரை, அந்தப் பதவியில் தொடர்ந்த ராமமோகன ராவின் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது, ஒட்டு மொத்த நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது.

வருமான வரித்துறை சோதனையால் அதிர்ச்சி அடைந்த ராவ், அந்த சோதனையை ஒரு சதித்திட்டம் என்றும், தன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், பரபரப்பாக பேட்டி அளித்திருந்தார். 

இதுதொடர்பாக, 'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

பத்திரிகையாளர்களை செவ்வாய்கிழமை சந்தித்தபோது, உங்களுக்கு டிரான்ஸ்பர் உத்தரவு வழங்கக் கூட, தமிழக அரசுக்கு துணிச்சல் இல்லை என்கிறீர்களே; ஏன் இந்த ஆவேசம்?

அந்த வார்த்தையை நான் சொல்லி இருக்க கூடாது.ஆறு நாட்கள் நான் பட்ட மன வேதனை, இதய வலி... அதனால் ஏற்பட்ட ஆவேசத்தில் 

பேசிவிட்டேன். அரசுக்கு, 'கட்ஸ்' இருக்கிறதா என, இரண்டு முறை கூறியதை வாபஸ் பெறுகிறேன்.

வருமான வரித்துறையினரிடம், உங்கள் வங்கி, 'லாக்கர்' விபரங்களை தந்திருக்கிறீர்களா?

எனக்கும், என் மனைவிக்கும் எந்த வங்கியிலும் லாக்கர் கிடையாது. என் பெயரில் அசையும், அசையா சொத்துக்கள் இல்லை. நிரந்தர வைப்புநிதி எதுவும் இல்லை. சொந்தமாக காரும் இல்லை. 

கடந்த, 10 ஆண்டு களாக, என் பெயரிலோ, மனைவி பெயரிலோ, எந்த சொத்துக்களும் வாங்கப் பட வில்லை. என் சொத்து விபரத்தை அரசுக்கு தெரிவித்துள்ளேன். அதை, ஐ.ஏ.எஸ்., இணைய தளத்தில் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளேன்.

உங்களை காத்திருப்போர் பட்டியலில், அரசு வைத்துள்ளது தவறு என்கிறீர்களா?

அதை தவறு என்று சொல்லவில்லை; அதை செய் வதற்கு அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், அதற்கான உத்தரவு எனக்கு தரப்படவில்லை என்பதே, என் ஆதங்கம்.

நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது, 'இப்போதும் நான் தான் தலைமை செயலர்' என்று கூறியதற்கு என்ன காரணம்?

அது, எனக்கு ஏற்பட்ட இதய வலியில் கூறிய வார்த்தை. எனவே, அந்த வார்த்தையையும் நான் திரும்பப் பெறுகிறேன். இப்போதைய தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் மிகச்சிறந்த அதிகாரி. அவர் மீது எனக்கு மரியாதை உண்டு.

உங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொல் கிறீர்களே; யாரால் ஆபத்து? யாரும் உங்களை மிரட்டுகிறார்களா?

என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது உண்மை தான்.ஆனால்,யாரால் ஆபத்து என, வெளிபடையாக

சொல்ல மாட்டேன். அதற்காக நான் பயந்தாங்கொள்ளி இல்லை.

உங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் வர என்ன காரணம்?

நான் தலைமைச் செயலராக இருப்பது பலருக்கு இடைஞ்சல்.

உங்களை அச்சுறுத்துவது அரசியல்வாதிகளா; அதிகாரிகளா?

அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தான். மருத்துவமனையில், ஜெயலலிதா அனுமதிக் கப்பட்ட நாளில் இருந்தே, தலைமை செயலர் பதவியில் என்னை நீடிக்க விட மாட்டார்கள் என, நினைத்தேன்; அது, நடந்தே விட்டது.

உங்கள் மகன் என்ன, 'பிசினஸ்' செய்கிறார்?

அவர், பெரிய நிறுவனங்களுக்கு தொழிலாளர் களை அனுப்பி வைக்கும் மனித வள மேம் பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறார். அது தவிர, எங்களின் பூர்வீக தொழில்களான நிலக் கரி உட்பட, சரக்குகளை கொண்டு செல்வது, துறை முகங்களில் சரக்குகளை கையாளுதல் என, சில தொழில்களை செய்து வருகிறார். அதற்கு, அவரின் மாமனார் குடும்பம் உறு துணையாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

ஜெ., மரணத்தில் நீதிபதிக்கு சந்தேகம்

சென்னை: முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு சந்தேகம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றியும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.
சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், செப்., 22ம் தேதி அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, டிச., 5ம் தேதி இரவு,11:30 மணிக்கு மரணமடைந்தார். அவர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இன்று காலை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி வைத்தியநாதன் தன் சொந்த கருத்தாக கூறியதாவது: முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது. ‛அவர் குணமடைந்து வருகிறார்; உணவு சாப்பிடுகிறார்; நடைபயிற்சி மேற்கொள்கிறார்' என, செய்திகள் வெளியாகின. ஆனால், திடீரென அவர் மரணம் அடைந்தது எப்படி? அவரை பார்க்க அவரது உறவினர்களை ஏன் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து முழுமையான தகவல்களை ஏன் வெளியிடவில்லை. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி வைத்தியநாதன் கூறினார்.

61% people check their phones within 5 minutes of waking up’


For many smartphone owners, checking their phones is among the first and last things they do every day, with 61 per cent respondents saying they look at their devices within 5 minutes of waking up, according to a report released on Wednesday.
According to the Deloitte Global Mobile Consumer Survey, 2016, the number swells to 88 per cent when considering people who take less than 30 minutes after waking up to check their phones.
Around 96 per cent of the respondents take about less than an hour to peep into their handsets each morning.
Interestingly, 74 per cent respondents check their mobile phones about 15 minutes before going to sleep. “This study reveals that smartphone usage has increased considerably. It has been identified as a disruptor in many common daily activities. This (the numbers) says a lot about the way mobile phone usage has intruded in consumers’ personal space and life,” Neeraj Jain, Partner at Deloitte Touche Tohmatsu India, said.
The study, covering 53,000 people, includes over 2,000 respondents from India.
The report found social networks and instant messaging were the two things consumers check on their smartphones first thing in the morning.
These are followed by personal emails and text messages.
Respondents from India said they also use their devices to check bank balances (54 per cent), pay utility bills (54 per cent) and services bills (53 per cent). This is followed by transferring money within the country (38 per cent) and abroad (31 per cent).
However, when it comes to using phones for making in-store payments, fear about security and lack of understanding of potential benefits emerged as key barriers.

Holiday calling: Daily direct flights to Bangkok now

Holiday calling: Daily direct flights to Bangkok now Arvind.Chauhan@timesofindia.com 05.01.2025 Lucknow : To cater to the increasing rush fo...