Wednesday, September 6, 2017

அக்யூட் டிராமா..! - அனிதா தற்கொலைக்கு உளவியல் விளக்கம்

VIKATAN

"என் அம்மா நோயுற்றுத் தவித்தபோது சரியான மருத்துவம் கிடைக்கவில்லை. அதனால், சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். என் கிராமத்தில் போதிய மருத்துவ வசதி இருந்திருந்தால் என் அம்மாவைக் காப்பாற்றி இருக்கலாம். இனி எங்கள் கிராமத்தில் எந்தப் பிள்ளையும் மருத்துவ வசதி கிடைக்காமல் அம்மாவை இழக்கக்கூடாது. அதற்காகவே, நான் மருத்துவம் படிக்கப்போகிறேன்...' ஏன் நீங்கள் மருத்துவத்தைத் தேர்வு செய்தீர்கள் என்று கேட்ட நிருபருக்கு அனிதா சொன்ன பதில் இது.



எந்தப் பின்புலமும் இல்லாத அடித்தட்டுக் குடும்பத்தில் பிறந்தவர் அனிதா. சிறுவயதிலேயே அம்மா இறந்துவிட்டார். அம்மாவின் மரணம் தான், அனிதாவின் மனதில் மருத்துவக் கனவை விதைத்தது.

அப்பாவும், 4 சகோதரர்களும் அனிதாவை மருத்துவராக்குவதற்காக உழைத்துத் தேய்ந்தார்கள். அனிதா, எந்தச் சூழலிலும் தன் இலக்கில் இருந்து திசை திரும்பவில்லை. ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் குவித்தார். மெடிக்கல் கட் ஆப் 196.75.

இரவு பகல் பார்க்காத படிப்பு, கவனச்சிதறல் இல்லாத உழைப்பால் தான் இலக்கு வைத்த மருத்துவப் படிப்பை எட்டிப்பிடிக்கும் விளிம்பில் நின்றபோதுதான் 'நீட்' தடையாக வந்து மறித்தது.

அனிதா மட்டுமல்ல... அவரது குடும்பமே நிலைகுலைந்தது. வாழ்நாள் உழைப்பைக் கொட்டி மகளை மருத்துவராக்கிப் பார்க்க நினைத்த அனிதாவின் தந்தை சண்முகமும், சகோதரர்களும் செய்வதறியாது திகைத்து நின்றார்கள்.

குழப்பம் நீக்கி, மாணவர்கள் பக்கம் நிற்க வேண்டிய தமிழக அரசு, தன்னைத் தற்காத்துக் கொள்ளவே போராடிக் கொண்டிருந்தது. ஒரு பக்கம், நீட் தேர்வுக்கு விலக்கு பெற்று விடுவோம் என்று மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்துக்கொண்டு, மறுபக்கம். மத்திய அரசுக்கு அதற்கான அழுத்தத்தைத் தர எந்த முயற்சியும் எடுக்காமல் சமரசம் செய்துகொண்டு விட்டார்கள். மத்திய அமைச்சர்கள் தமிழகம் வரும்போது, நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றுத்தருவோம் என்று பேசுவதும், டெல்லி சென்றபிறகு, மற்ற மாநிலங்களுக்கு ஒரு சட்டம், தமிழகத்துக்கு ஒரு சட்டமெல்லாம் உருவாக்க முடியாது என்று வேறு முகம் காட்டினார்கள்.

கடந்த ஆறுமாத காலமாக மாணவர்களை உச்சபட்சமான குழப்பத்திலேயே வைத்திருந்த மத்திய, மாநில அரசுகள், இறுதியில் கைவிரித்து விட்டார்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்தபோது, 'மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை ஒத்தி வையுங்கள்' என்று உச்ச நீதிமன்றத்திடம் சொல்லி, தீர்ப்பை நிறுத்திய மத்திய அரசு, 'நீட் தேர்வு கட்டாயம் என்று கோர்ட் சொல்லிவிட்டது, எங்களால் ஒன்றும் செய்ய முடியாது' என்று கை விரித்துவிட்டது.



கண்டிப்பாக விலக்கு கிடைத்துவிடும் என்று நம்பிக்கையோடு இருந்த அனிதாவுக்கு, அதற்கு வாய்ப்பில்லை என்று தெரியவந்தபோது வேறு வாய்ப்பிருக்கவில்லை. லட்சங்களில் கொட்டிக்கொடுத்து, தனிப்பயிற்சி எடுக்கவும் சாத்தியமிருக்கவில்லை.

இருந்தும் தேர்வு எழுதினார். தேர்ச்சி பெறும் அளவுக்கு மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, மொத்தமுள்ள மருத்துவ இடங்களில் தமிழக மாணவர்களுக்கு 85 சதவிகிதம், சிபிஎஸ்சி மாணவர்களுக்கு 15 சதவிகிதம் என்று அரசாணை போட்டது தமிழக அரசு. அந்த ஆணை வெளிவந்தபோதே, வலுவற்ற இந்த ஆணை நீதிமன்றத்தில் நிற்கப்போவதில்லை என்று கல்வியாளர்கள் சொன்னார்கள். அதுதான் நடந்தது.

இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார் வழக்கறிஞர் நளினி சிதம்பரம். இந்த வழக்கில் எதிர்வாதியாக அனிதா தன்னை இணைத்துக்கொண்டார். ஆனால், நீதிமன்றத்தின் காதுகளில் அனிதாவின் அவலக்குரல் விழவில்லை. 'தமிழக அரசின் உத்தரவால், சிபிஎஸ்சி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றார் நளினி சிதம்பரம்.

அத்தனை கதவுகளும் மூடப்பட்டப் பின்னர், அனிதா மிகுந்த குழப்பத்துக்கும், மன அழுத்தத்துக்கும் ஆளாகியிருந்தார். ஒரு கட்டத்தில், 'இனி தான் கண்ட கனவு பழிக்கப்போவதில்லை... தன் தந்தையும், சகோதரர்களும் உழைத்த உழைப்பு வீணாகிவிட்டது என்பதைப் புரிந்துகொண்ட அனிதா தற்கொலை முடிவை எடுத்துவிட்டார்.

வறுமை, ஏற்றத்தாழ்வுகள், சிறு வயதிலேயே தாயை இழந்த சோகம் என எல்லாத் தடைகளையும் விடாமுயற்சியால் உடைத்தெறிந்து ப்ளஸ் டூ-வில் 1176 மதிப்பெண்கள் வரை பெற்று முன்மாதிரியாக உயர்ந்து நின்ற அனிதாவைத் தற்கொலை நோக்கித் தள்ளியது எது?



தமிழகத்தில் கடந்தாண்டு 8 லட்சம் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுதினார்கள். அதில் அறிவியல் பிரிவை எடுத்துப் படித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம். அதில் 1 லட்சம் மாணவர்கள் மருத்துவப் படிப்பை இலக்கு வைத்துப் படித்திருப்பார்கள். அவர்களின் முழுக்கவனமும் பிளஸ் டூ-வில் அதிக மதிப்பெண் பெறுவதாக மட்டுமே இருந்திருக்கும். ஏராளமான மாணவர்கள் 1000-த்துக்கு மேல் மதிப்பெண் பெற்றிருப்பார்கள். தமிழக அரசின் உண்மை முகம் அறிந்து, முன்கூட்டியே நீட் தேர்வுக்குத் தயாரான கொஞ்சம் மாணவர்கள் மட்டுமே முட்டிமோதி எம்பிபிஎஸ் சீட்டைப் பெற்றிருக்கிறார்கள். தமிழக அரசின் வார்த்தைகளை நம்பி நீட் தேர்வுக்குத் தயாராகாத எல்லா மாணவர்களுமே செய்வதறியாது நிற்கிறார்கள். அவர்களை எப்படி மீட்கப்போகிறோம்?

"எந்தப் பிரச்னைக்கும் தற்கொலை தீர்வில்லை என்று சில 'நடுநிலை வாதிகளும், 'சமூகப் போராளிகளும்' இப்போது பேசுகிறார்கள். நீட் தேர்வுக்கு சமூக நீதிக்கு எதிரானது; அனிதா போன்று அடித்தட்டில் இருந்து தடையுடைத்து மேலெழுந்து வரும் மாணவர்களுக்கு விரோதமானது; பணத்தைக் கொட்டி தனிப்பயிற்சிக்குச் செல்ல முடியாத ஏழைக்குடும்பத்துப் பிள்ளைகளுக்கு விரோதமானது என்று தொடக்கத்தில் இருந்தே சமூக ஆர்வலர்கள் எதிர்த்து வருகிறார்கள். ஆனால், மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. மாநில அரசும் பிரச்னையின் உண்மையான மையத்தைப் புரிந்துகொள்ளவில்லை. அதற்கு விலையாகத்தான் அனிதா என்ற மகளை அள்ளிக் கொடுத்திருக்கிறோம். அனிதா தமிழகத்தின் மகள். அவர் தற்கொலையை தமிழகத்தில், உரிய தகுதிகள் இருந்தும் நீட் தேர்வால் தகுதியிழந்து நிற்கும் பல ஆயிரம் மாணவர்களின் மனநிலையை உணர்த்தும் பிம்பமாகப் பார்க்க வேண்டும். இது சமூகத்தின் மிகப்பெரிய தோல்வி. அனிதாவின் மரணத்துக்கு இந்த அரசுகள் மட்டும் காரணம் அல்ல. சிறிதும் உணர்வின்றி வாழும் நீங்களும் நானும் கூட காரணம்தான்.

மாணவர்கள் இந்தச் சூழலை எதிர்கொள்ள வேண்டும். அவர்களுக்கு இந்த சமூகம் துணை நிற்க வேண்டும்..." என்கிறார் மருத்துவர் புகழேந்தி.

" அனிதாவின் தற்கொலை என்னை மிகவும் பாதித்திருக்கிறது. மனம் நொறுங்கும் அளவுக்கு ஓர் மோசமான சம்பவம் நடக்கும்போது தற்கொலையைத் தீர்வாக நினைப்பது சராசரியான ஒரு மனிதச் செயல்பாடு. அதைக் கடந்து நிற்கப் பழக வேண்டும்." என்கிறார் மனநல மருத்துவர் ஷாலினி.

"அனிதா மருத்துவப் படிப்பைக் கனவாகக் கொண்டிருந்தார். அது வாய்க்காது என்றபோது பெரும் ஏமாற்றம் அவரைச் சூழ்ந்து விட்டது. இதுபோன்ற ஏமாற்றங்கள் மனதளவில் மிகக் கொடூரமான காயங்களை உண்டாக்கிவிடும். இந்த நிலைக்கு 'அக்யூட் டிராமா' (acute trauma) என்று பெயர். ' இனி நமக்கு எதிர்காலமே இல்லை' என்று எண்ணத் தோன்றும்.

இந்த நிலை உருவானபிறகு, மனம் நிலையிழந்து வாழ்க்கையையே முடித்துக்கொள்ளலாம் என்ற அளவுக்கு யோசிப்பார்கள். இதுதான் அனிதா விஷயத்திலும் நடந்திருக்கிறது. அனிதாவுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. இனி என்ன செய்தாலும் அவரின் இழப்புக்கு ஈடாக இருக்காது.

இனியொரு சம்பவம் நிகழாமல் இருக்க, மத்திய மாநில அரசுகள் எவ்வித தயக்கமும் நிபந்தனையும் இன்றி நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும். சுகாதாரத்தில் பிற மாநிலங்களை விட தமிழகம் மிகச் சிறப்பாக முன்னேறியிருக்கிறது. அதற்கு இங்கிருந்த தலைவர்களே காரணம். தமிழக மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டுதான் இந்த கல்வி நிறுவனங்களை அவர்கள் உருவாக்கினார்கள். அந்த வாய்ப்பை, உரிமையை மத்திய அரசு பறிப்பது மிகப்பெரும் அநீதி.." என்கிறார் ஷாலினி.



மத்திய மாநில அரசுகள் அனிதாவின் மரணத்துக்குப் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்!
நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை - வேலூர் சி.எம்.சி நிர்வாகம் தகவல்!
கா.முரளி

நீட் தேர்வு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி (சி.எம்.சி), மருத்துவ மாணவர் சேர்க்கையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக சமூக வலைதளத்தில் படுவேகமாகச் செய்திகள் பரவி வருகின்றன. இது தவறான தகவல் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.



இது குறித்து சி.எம்.சி கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் துரை ஜேஸ்பரிடம் பேசினோம்."தவறான தகவல் இது. நீட் தேர்வில், தேர்வான மாணவர்களை மட்டுமே நாங்கள் அட்மிசனுக்கு அழைக்க உள்ளோம். நீட் தேர்வில் தேர்வான 300 மாணவர்களை நாங்கள் நடத்தும் மூன்று நாள் கலந்தாய்வுக்கு அழைப்போம், அதில் அந்த மாணவர்கள் கிராமப்புறத்தில் பணியாற்றக்கூடிய தன்மையையும், லீடர்ஷிப் தகுதியையும் மருத்துவராகக்கூடிய இயல்பும் உள்ளதா என எங்கள் கல்லூரி தேர்வுசெய்யும். அதில் தேர்வான மாணவர்களுக்கு மட்டுமே எம்.பி.பி.எஸ் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்கு சீட் தருவோம். இந்த முறையைத்தான் நாங்கள் இதுநாள் வரை கடைப்பிடித்தோம். ஆனால், தற்போது தனியார் கல்லூரிகள் தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்த மருத்துவக் கவுன்சில் தடை செய்துள்ளது.

இதற்கு எதிராகவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதற்கான விவாதங்கள் முடிந்து அக்டோபர் 11-ம் தேதி தீர்ப்பு வருகிறது. அதன்பிறகே நாங்கள் 99 எம்.பி.பி.எஸ் மற்றும் 61 சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையை நடத்தவுள்ளோம். நீட் தேர்வை எதிர்த்து, நாங்கள் அட்மிசனை நிறுத்தி வைத்திருப்பதாக வரும் தகவல்கள் முற்றிலும் தவறானது. நீட் தேர்வில் தேர்வான மாணவர்களை மட்டுமே நாங்கள் கலந்தாய்வுக்கு அழைப்போம். 1918-ம் ஆண்டு தொடங்கியது எங்கள் கல்லூரி, இந்தியாவிலேயே முதல் தனியார் மருத்துவக்கல்லூரி. அடுத்த ஆண்டு 100 வது ஆண்டு விழா கொண்டாட உள்ளோம்" என்றார்.

புளூவேல் விளையாடிய இளைஞரின் திகிலூட்டும் அனுபவம்: இது கேமோ, ஆப்-போ அல்ல!


By DIN  |   Published on : 06th September 2017 05:48 PM  |   
student
புளூவேல் விளையாட்டிலிருந்து மீட்கப்பட்ட இளைஞருடன் காவல்துறை அதிகாரி.

காரைக்கால்: விபரீத விளையாட்டான புளூவேல் விளையாடிய காரைக்காலைச் சேர்ந்த இளைஞர், தனக்கு நேரிட்ட திகிலூட்டும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு, யாரும் இந்த விளையாட்டை விளையாட வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
காரைக்கால் பகுதியில் புளூவேல் விளையாட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சென்னையில் பணியாற்றும் அலெக்சாண்டர், விடுமுறையில் ஊருக்குச் சென்ற போது இந்த ப்ளூவேல் விளையாட்டை விளையாடத் தொடங்கியுள்ளார். ஆனால் விளையாட்டின் காரணமாக அவர் விடுமுறை முடிந்தும் சென்னை திரும்பவில்லை.
இதுகுறித்து, புளூவேல் கேம் விளையாடிய அலெக்ஸ்சாண்டர் கூறியதாவது, இது டவுன்லோடு செய்யும் ஆப்-போ அல்லது டவுன்லோடு செய்து ஆடும் விளையாட்டோ அல்ல. வெறும் லிங்க் மட்டுமே இருக்கும். வாட்ஸ் அப்பில் (கட்செவி அஞ்சல் ) லிங்க் கிடைத்தவுடன் இந்த விளையாட்டை எப்படியாவது விளையாட வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது. இருப்பினும் இது உயிர் சம்பந்தப்பட்ட விளையாட்டு என்பது போகப்போகத்தான் தெரிந்தது.
 
குறிப்பாக, முதலில் நமது பெயர், இமெயில், பாஸ்வேர்டு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அட்மின்கள் பெற்றுக்கொள்கிறார்கள். அதன் பிறகு போட்டோ அனுப்ப வேண்டும். பின்னர் நள்ளிரவில் பேய் படம் பார்க்க வேண்டும். அனைத்துமே நள்ளிரவு 2 மணிக்கு மேல்தான். பயமே இந்த கேமில் இருக்கக்கூடாது என்பதுதான் நோக்கம் என்று அட்மின்கள் கூறுகிறார்கள்.
பின்னர் சுடுகாடு அல்லது கடல் பகுதி, ஏரி போன்ற இடங்களுக்கு நள்ளிரவில் தனியாக சென்று செல்ஃபி எடுத்து குரூப் அட்மின்களுக்கு அனுப்ப வேண்டும். 5-ஆவதாக கையில் கத்தி அல்லது பிளேடால் புளூவேல் திமிங்கலம், மீன் போன்றவைகளை வரைய வேண்டும். நான் 5-ஆவது நிலையை நோக்கி போகும்போதுதான், காவல் துறையினர் என்னை மீட்டனர். 
தினமும் பயங்கர காட்சிகள் நிறைந்த சினிமாவை பார்த்துக் கொண்டிருந்தேன். பயத்தைப் போக்குவதே இந்த விளையாட்டின் நோக்கம் என்றாலும் மனதளவில் பாதிக்கப்பட்டேன்.
இந்த விளையாட்டால் நான் என் குடும்பத்தாரிடம் பேசுவதையே நிறுத்திவிட்டேன். எப்போதும் என் அறைக்குள்ளேயே இருப்பேன். இது எனக்கு மிக மோசமான மன அழுத்தத்தை தந்தது. இந்த விளையாட்டில் இருந்து வெளியே வர விரும்பினேன். ஆனால் என்னால் செய்ய முடியவில்லை.
இனி இதுபோன்ற விளையாட்டில் ஈடுபட மாட்டேன். இது இக்கட்டான விஷயங்களை சவாலாக எடுத்து செய்தாலும் கூட, மனதளவில் பெரிய பாதிப்பு ஏற்படுத்துகிறது. யாரும் இதுபோன்ற ஆபத்தான விளையாட்டை விளையாட வேண்டாம் என்று கூறினார்.
பின்னணி: 
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் செல்லிடப்பேசியில் ஆன்லைன் மூலம் புளூவேல் விளையாடும் கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை கண்காணிக்கும்படி காவல்துறை டிஜிபி சுனில்குமார் கவுதம் சைபர் கிரைம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், காரைக்கால் பகுதி நிரவி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெரோம்ஜேம்ஸ்பாண்டுக்கு செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர், தனது மூத்த சகோதரர் புளூவேல் கேம் விளையாடுவதுபோல் தெரிகிறது. நள்ளிரவில் வெளியே புறப்பட்டுச் சென்றுவிடுகிறார். அவரது நடவடிக்கை சரியில்லை. நாங்கள் ஏதாவது கேட்டால் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, நிரவி போலீஸார் சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கு சென்று, அங்கிருந்த அலெக்ஸ்சாண்டர் (23) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவரது செல்லிடப் பேசியை பரிசோதித்தபோது, அவர் புளூவேல் விளையாட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. 
இதையடுத்து, அலெக்ஸாண்டரை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று, புளூவேல் விளையாட்டால் ஏற்படும் விபரீதம் குறித்து அறிவுரை அளித்தனர்.
பின்னர், மண்டல காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

காராகிரக நெரிசல்!

By ஆசிரியர்  |   Published on : 06th September 2017 02:16 AM 
நாகரிக சமுதாயத்தில் சிறைச்சாலை என்பது தண்டிக்கப்பட்டவர்களை அடைத்து வைக்கப்படும் இடம் என்பதாக அல்லாமல், தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் மனம் திருந்தவும் தண்டனைக்குப் பிறகு அவர்கள் மற்றவர்களைப்போல வாழவும் வழிகோலுகிற சீர்திருத்தக்கூடமாக இருக்க வேண்டும். கடந்த அரைநூற்றாண்டு காலமாக உலகளாவிய அளவில் சிறைச்சாலைகளின் வசதிகள் மேம்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளைக் கையாளும் முறையிலும் மாற்றங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. 
இந்தியாவைப் பொருத்தவரை ஒருசில சிறைச்சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு அல்லது புதிதாகக் கட்டப்பட்டு வசதிகள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன என்றாலும்கூட, சிறைக்காவலர்களின் அணுகுமுறையிலும், சிறையில் அடைக்கப்பட்டவர்கள் நடத்தப்படும் விதத்திலும் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. தவறிழைத்து தண்டிக்கப்பட்டவர்கள், தண்டனைக்காலம் முடிந்து வெளியேவரும்போது புதிய மனிதர்களாக வெளிவருவது இல்லை என்பது ஒரு புறம், தவறிழைக்காத விசாரணைக் கைதிகள்கூட சிறைக்குச் சென்று வெளியே வரும்போது தவறான வழிக்குத் திரும்புபவர்களாக மாறிவிடுகின்றனர் என்பது இன்னொருபுறம். இதுதான் இன்றைய இந்தியச் சிறைச்சாலைகளின் நிலைமை. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கும் ஒவ்வொருவரும் முதலில் வெளியிடும் அறிக்கை, நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பேன் என்பதுதான். ஆனால், அந்த வழக்குகளின் எண்ணிக்கை குறைவது இல்லை. அதனால் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. 
விசாரணைக் கைதி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்தால் சாட்சியங்கள் கலைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர். இவர்களில் பலரும் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்படவும் வாய்ப்புண்டு. அப்படியிருந்தும் தேவையில்லாமல் பலர் நீண்ட நாட்கள் சிறைக்கொட்டடியில் அடைத்து வைக்கப்படுகின்றனர்.
2015-இல் இந்திய சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்ட விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை 2.82 லட்சம். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 30 வயதுக்கும் குறைவான அதிகம் படிப்பறிவில்லாத இளைஞர்கள். ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்பே, தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேல் சிறையில் கழித்திருக்கும் விசாரணைக் கைதிகள் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று இந்திய குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 2014-இல் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கீழமை நீதிமன்றங்களுக்குக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்தும்கூட, இதுவரை இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது வேதனைக்குரியது. 
விசாரணைக் கைதிகள் அளவுக்கு அதிகமாக இருப்பதால் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன. கைதிகளின் உடல் நலமும், சிறைச்சாலையின் சுகாதார ஏற்பாடுகளும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சிறைச்சாலைகளின் பாதுகாப்பும்கூட இதனால் கேள்விக்குறியாகி இருக்கிறது. ஆட்டுக்கொட்டடியில் அடைத்து வைத்திருப்பதுபோலக் கைதிகள் அடைத்து வைக்கப்படுவது அவர்களது மனநிலையைக் கடுமையாக பாதித்து, நிரபராதிகள் குற்றவாளிகளாகவும், குற்றவாளிகள் கடும் குற்றவாளிகளாகவும் மாறிவிடும் போக்குக்கு வழிகோலுகிறது. சிறைச்சாலைத் தற்கொலைகளுக்கும், வன்முறைகளுக்கும் இது ஒரு முக்கிய காரணம்.
கடந்த மாதம் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, இந்தியாவின் சிறைச்சாலைகள் சிலவற்றில் 200%-க்கும் அதிகமான கைதிகள் இருப்பதாக மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் குறிப்பிட்டிருந்தார். 'மாதிரி சிறைச்சாலை 2014 கையேட்டின்படி, ஒவ்வொரு சிறைக்கைதிக்கும் குறைந்தது 8.92 சதுர மீட்டர் அளவிலான இடம் தரப்பட வேண்டும். ஆனால், எவ்வளவு இடம் வழங்கப்படுகிறது என்பது குறித்த புள்ளிவிவரம் இல்லை' என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்தியாவில் 1,401 சிறைச்சாலைகள் இருக்கின்றன. சிறைச்சாலை மாநில பட்டியலில் இருந்தாலும் அதனை மேம்படுத்த 2002-இல் மத்திய அரசு ரூ.1,800 கோடி ஒதுக்கியது. அந்தத் திட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தின் புழல் சிறைச்சாலை உள்பட 125 புதிய சிறைச்சாலைகள் கட்டப்பட்டன. ஏனைய சிறைச்சாலைகளில் 1,579 அறைகள் அதிகரிக்கப்பட்டன. இத்தனைக்குப் பிறகும்கூட சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன என்றால், அதற்குக் காரணம் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கைதான். 
இந்திய சிறைச்சாலை புள்ளிவிவரம் 2015-இன்படி, இந்தியாவிலுள்ள 1,401 சிறைச்சாலைகளில் இருக்கும் 4,19,623 கைதிகளில் 67 சதவீதம் பேர் அதாவது, 2,82,076 பேர் விசாரணைக் கைதிகள். இவர்களில் பலரும் இரண்டு வருடங்களுக்கும் அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள்.
முன்பே கூறியதுபோல, சிறைச்சாலை என்பது குற்றவாளிகள் மனம் திருந்தி புதிய மனிதர்களாக வெளியில் வருவதற்காக ஏற்படுத்தப்பட்டவையாக இல்லை. விசாரணைக் கைதிகளும் சிறு குற்றம் புரிந்தவர்களும் சிறைச்சாலையிலிருந்து கடும் குற்றவாளிகளாக வெளியேறும் அவலம் தடுக்கப்பட வேண்டுமானால், சிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கடி குறைக்கப்பட வேண்டும். தேவையில்லாமல் குற்றவாளிகள் விசாரணைக் கைதிகளாக தொடர்வது தவிர்க்கப்பட வேண்டும். அனைவருக்கும் சட்ட உதவியும், விரைந்த தீர்ப்பும் மட்டுமே இதற்குத் தீர்வாக இருக்கும்.
 
    வாழ்ந்திருக்க வேண்டும் அனிதா: வைரமுத்து இரங்கல்

    Published : 02 Sep 2017 15:01 IST

    BHARATHI PARASURAMAN_50119




    உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காத நிலையில் தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்வீட்டில், 'அடி பாவி மகளே' என்று நெஞ்சு பதறுகிறது. அனிதாவின் தற்கொலையும் சமூக நீதியின் கொலையும் ஒரே தருணத்தில் நிகழ்ந்திருக்கின்றன.

    ஒட்டுமொத்த நிகழ்காலமும் இந்தத் தற்கொலைக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

    மொத்தம் மரணம் மூன்று வகை. இயல்பான மரணம் – அது மனிதன் மீது இயற்கை காட்டும் எதிர்ப்பு; இன்னொன்று கொலை – அது மனிதன் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு; மூன்றாவது தற்கொலை – அது சமூகத்தின் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு.

    அநீதிக்கு எதிரான போர்க்களத்தில் இப்போது ஒரு போராளியை இழந்து நிற்கிறோம். ஆழ்ந்த அனுதாபங்களை யாருக்குச் சொல்வது? தமிழ்ச் சமூகத்துத் தங்கங்களே தற்கொலைக்குக் காட்டும் தைரியத்தை, வாழ்வதற்கு ஏன் காட்டக்கூடாது?

    தற்கொலை தீர்வல்ல; வாழ்வுதான் தீர்வு.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    வேளாங்கண்ணி திருவிழா: எழும்பூர்-நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்

    Published : 06 Sep 2017 09:22 IST

    சென்னை

    வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு எழும்பூர்-நாகப்பட்டினம் இடையே வரும் 8-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

    இதன்படி, இந்த சிறப்பு ரயில் (06097) எழும்பூரில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும். இதேபோல், வேளாங்கண்ணி-பன்வேல் இடையே சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06099) 9-ம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயில் வேளாங்கண்ணியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7.55 மணிக்கு பன்வேல் சென்றடையும்.

    கன்னியாகுமரி-சந்திரகச்சி இடையே சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06905) 7-ம் தேதி (நாளை) இரவு 11 மணிக்கு கன்னியா குமரியில் இருந்து புறப்பட்டு 9-ம் தேதி இரவு 9.15 மணிக்கு சந்திரகச்சி சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    எம்.பில்., பிஎச்.டி மாணவர்கள் காப்பியடித்து ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தால் படிப்பு பதிவு ரத்து: யுஜிசி விரைவில் புதிய விதிமுறை

    Published : 06 Sep 2017 09:38 IST


    ஜெ.கு.லிஸ்பன் குமார்

    சென்னை




    எம்.பில்., பிஎச்.டி மாணவர்கள் காப்பியடித்து ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தால் படிப்பின் பதிவை ரத்து செய்யும் வகையில் புதிய விதிமுறைகளைக் கொண்டுவர பல்கலைக்கழக மானியக்குழு முடிவுசெய்துள்ளது.

    ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிப்பதை ஒழுங்குபடுத்தும் வகையில் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) புதிய விதிமுறைகளைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. காப்பியடிக்கப்படும் அளவுக்கு ஏற்ப தண்டனைகளை விதிக்கவும், அப்பட்டமாக காப்பியடித்திருந்தால் சம்பந்தப்பட்ட மாணவர்களை டிஸ்மிஸ் செய்யும் வகையில் வரைவு விதிமுறைகளை உருவாக்கியுள்ளது.

    அதன்படி, ஒவ்வொரு கல்வி நிறுவனமும் மாணவர்கள் சமர்ப்பிக்கும் ஆய்வுக்கட்டுரைகள் அவை காப்பியடிக்கப்பட்டதா என்பதை கண்டுபிடிக்கும் வகையில் உரிய மென்பொருள் சாதனம் வைத்திருக்க வேண்டும். ஆய்வுகட்டுரையானது சொந்தமாக உருவாக்கப்பட்டது என்றும் மற்றவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்டதல்ல என்றும் மாணவர்களிடமிருந்து உறுதிமொழி பெறப்பட வேண்டும்.

    ஆய்வுக்கட்டுரைகளை ஆய்வுசெய்ய ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் கல்வி ஒழுங்கீன நடவடிக்கைக்குழுவும் அதற்கு மேலாக, காப்பியடித்தல் ஒழுங்கு நடவடிக்கை ஆணையம் என்ற ஓர் அமைப்பையும் ஏற்படுத்த வேண்டும். ஏற்கெனவே வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளின் பாதிப்பு 10 முதல் 40 சதவீதம் இருந்தால் சம்பந்தப்பட்ட பகுதிக்கு மதிப்பெண் அளிக்கக் கூடாது.

    அந்த பகுதிக்குரிய திருத்தப்பட்ட கட்டுரையை சமர்ப்பிக்க ஓராண்டு அவகாசம் அளிக்க வேண்டும். பாதிப்பு 40 முதல் 60 சதவீதம் வரை இருப்பின் அதற்கு ஒரு மதிப்பெண் கூட அளிக்கக்கூடாது. புதிய ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க ஓராண்டு அவகாசம் அளிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஒன்றரை ஆண்டை தாண்டக்கூடாது. பாதிப்பு 60 சதவீதத்துக்கு மேல் இருந்தால் ஆய்வுக்கட்டுரைக்கு மதிப்பெண் வழங்காததுடன் படிப்புக்கான பதிவு ரத்து செய்துவிட வேண்டும்.

    காப்பியடித்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பதை தடுக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பான வரைவு விதிமுறைகள் குறித்த கருத்துகளை செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் தெரியப்படுத்துமாறு யுஜிசி செயலர் பி.கே.தாகூர் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    ஆன்லைனில் வெளியிடலாம்

    வழக்கமாக, ஒப்புதல் பெறப்பட்ட எம்பில் ஆய்வுக்கட்டுரையானது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் இடம்பெறும். அதே நேரத்தில் பிஎச்.டி. ஆய்வுக்கட்டுரை, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் இடம்பெறுவதோடு யுஜிசி-க்கும் அனுப்பப்படும். இந்த ஆய்வுக்கட்டுரைகள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் ஆன்லைனில் வெளியிடலாம் என கல்வியாளர்கள் யோசனை தெரிவித்தனர்.
    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்துக்கு தடை கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

    Published : 06 Sep 2017 11:16 IST


    கி.மகாராஜன்

    மதுரை




    தமிழகத்தில் செப். 7 முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரிய மனு தொடர்பாக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மதுரையைச் சேர்ந்த டி.சேகரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு:

    தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் கூட்டு செயல் குழு மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 7.9.2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர் என அறிவித்துள்ளது. அன்று அரசு பள்ளிகள், அரசு கல்லூரிகள் இயங்காது என்றும், இந்த வேலை நிறுத்தத்தில் 12 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவித்துள்ளனர். மேலும் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த வேலை நிறுத்தப் போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களையும் நிறுத்தி அரசு பள்ளிகள், கல்லூரிகள் சமூகமாக செயல்பட தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு தலைமைச் செயலர், உள்துறை செயலருக்கு 24.8.2017-ல் மனு அனுப்பினேன். என் மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் இடையூறு ஏற்படும்.

    அரசு ஊழியர்களுக்கு அரசு ஏற்கெனவே போதுமான அளவு ஊதியம் வழங்கி வருகிறது. அரசின் மொத்த வருவாயையும் சம்பளம் வழங்குவதற்கு மட்டும் பயன்படுத்த முடியாது. மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவும் தேவைப்படுகிறது. கூடுதல் ஊதியம் பெறுவதற்காக வேலை நிறுத்தம் என்ற மிரட்டல் ஆயுதத்தை கையில் எடுப்பது தவறு.

    கோரிக்கைகளை நிறைவேற்ற பல்வேறு வழிகள் உள்ளன. அரசிடம் மனு அளிக்கலாம். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடலாம். இதை செய்யாமல் பொதுமக்களையும், அரசு நிர்வாகத்தையும் ஸ்தம்பிக்க செய்யும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டப்படி தவறு. வேலை நிறுத்தம் அடிப்படை உரிமை அல்ல. மேலும் வேலை நிறுத்தம் செய்வது அரசு ஊழியர்களின் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது.

    வேலை நிறுத்தத்தை அனுமதித்தால் அரசு பள்ளிகளில் 10, 11, 12 பயிலும் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும். பொதுமக்களும் பாதிக்கப்படுவர். அரசு அலுவலங்களில் பணிகள் பாதிக்கப்படும். எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 7.9.2017 முதல் மேற்கொள்ள உள்ள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று (புதன்கிழமை) காலை விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக அரசிடம் தகவல் பெற்று நீதிமன்றத்துக்கு தெரிவிக்க அரசு வழக்கறிஞரை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
    உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் கட்டாயத்தில் தமிழக அரசு: நீட் விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி பேட்டி

    Published : 06 Sep 2017 11:59 IST

    சென்னை



    உச்ச நீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் நீட் நுழைவுத்தேர்வை அமல்படுத்தும் கட்டாயத்திற்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

    கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    தமிழக அரசு பெரும்பான்மையுடன் உள்ளது. இந்த ஆட்சி பதவி விலக வேண்டும் என்று நாங்கள் எப்போது பதவி ஏற்றோமோ அப்போது முதல் ஸ்டாலின் கூறி வருகிறார். அதிமுகவுக்கு சபாநாயகருடன் சேர்த்து 135 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதிமுக அறுதி பெரும்பான்மையோடு உள்ளது.

    அனைவரும் அதிமுக ஆட்சிக்கு ஆதரவை அளித்து வருகின்றனர். நேற்றைய கூட்டத்துக்கு பல்வேறு காரணங்களினால் சிலர் வரவில்லை.

    தமிழகத்தில் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணமும். அதற்காகத்தான் போராடினோம், டெல்லிச்சென்று முயற்சி எடுத்தோம். ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் நீட்டை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தமிழக அரசு தள்ளப்பட்டு விட்டதை அனைவரும் அறிவீர்கள்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
    6 வகையான விதிமீறலில் ஈடுபட்டால் மட்டுமே அசல் ஓட்டுநர் உரிம சோதனை: காவல்துறை விளக்கம்

    Published : 06 Sep 2017 14:30 IST

    சென்னை



    6 விதிமுறை மீறலில் ஈடுபட்டால் மட்டுமே அசல் ஓட்டுநர் உரிமம் கேட்கப்படும் என சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

    அசல் வாகன ஓட்டுநர் வாகன உரிமம் புதன்கிழமை முதல் கேட்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது, இது பற்றிய விவரம் வருமாறு:

    வாகன ஓட்டிகள் தங்களது அசல் வாகன ஓட்டுநர் உரிமத்தைக் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் காவல்துறையினரோ அல்லது போக்குவரத்துத் துறை அதிகாரிகளோ கேட்கும்போது அதைக் காட்ட வேண்டும் என தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது.

    அசல் வாகன ஓட்டுநர் உரிம கட்டாயத்துக்கான தடையை நீட்டிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டதைத் தொடர்ந்து, வாகன ஓட்டிகள் இன்று முதல் அசல் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    வாகன ஓட்டிகள் அசல் உரிமத்தை கையில் வைத்திருந்தால் தொலைந்துவிடும் வாய்ப்பும், பாதுகாப்பு இல்லாதா சூழ்நிலையும் இருப்பதாக சுட்டிக்காட்டினர். ஆனால் வாகன ஓட்டிகள் அனைவரிடமும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கேட்பதோ, இதற்காக தனி சோதனையோ நடத்தப்போவதில்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    6 விதிமுறை மீறல்களில் ஈடுபடுபவர்களிடம் மட்டுமே அசல் வாகன ஓட்டுநர் உரிமத்தை கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் குழு தெரிவித்துள்ளது.

    அத்தகைய 6 விதிமீறல்களில் ஈடுபட்டு போலீஸாரிடம் சிக்குபவர்களிடம் மட்டுமே அசல் ஓட்டுநர் உரிமம் கேட்கப்பட உள்ளதால் வாகன ஓட்டிகள் பயமின்றி பயணிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

    6 விதிமீறல்கள் என்னென்ன என்பது குறித்த உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்:

    1. மொபைல் போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல்

    2. அதி வேகமாக வாகனம் ஓட்டுதல்

    3. மதுபோதையில் வாகனம் ஓட்டுதல்

    4. வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவு பாரம் ஏற்றுதல்

    5. போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் செல்லுதல்

    6. சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றுதல்

    மேற்கூறிய 6 விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். அசல் ஓட்டுநர் உரிமத்தை சோதனை செய்வதற்காக தனியாக வாகன சோதனை நடைபெறப் போவதில்லை. வழக்கமான சோதனையே நடைபெறும்.

    இந்தச் சோதனை மூலம் பறிமுதல் செய்யப்படும் வாகன ஓட்டுநர் உரிமம், மோட்டார் வாகனச் சட்டப்படி வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் குறைந்தது 3 மாதங்களாவது தற்காலிக நீக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் கட்டணத்தை குறைக்க வேண்டும்: அன்புமணி
    Published : 06 Sep 2017 15:19 IST

    சென்னை





    அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல்மருத்துவக் கல்லூரி ஆகியவற்றிலும் வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை தமிழக அரசே நேரடியாக நடத்த வேண்டும்; கல்விக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அக்கல்லூரிகளின் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அரசு, அதற்கு மாறாக மாணவர்கள் போராட்டத்தை அடுக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது.

    அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிர்வாக சீர்கேடுகளில் சிக்கி சீரழிந்து கொண்டிருந்த நேரத்தில் அப்பல்கலைக்கழகத்தை அரசே கையகப்படுத்தி நடத்த வேண்டும் என்ற யோசனையை முதன்முதலில் முன்வைத்தது பாமகதான். அதன்படியே அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், அதனுடன் இணைந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவையும் அரசுடைமை ஆக்கப்பட்டன. ஆனால், அதன் பயன்கள் இன்று வரை மக்களுக்கும், மாணவர்களுக்கும் கிடைக்கவில்லை. இந்நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை நியாயமானதாகும்.

    தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளை நிர்வகிப்பதற்காகவே தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்துடன் இணைப்பதுதான் முறையாகும். ஆனால், தமிழக அரசோ அதை செய்யாமல் அந்த இரு கல்லூரிகளையும் அண்ணாமலைப் பல்கலையின் அங்கமாகவே நிர்வகித்து வருகிறது. இந்த இரு கல்லூரிகளும் தனியாரின் கட்டுப்பாட்டில் இருந்த போது அவற்றில் மருத்துவப் படிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அண்ணாமலை பல்கலை அரசுடைமையாக்கப்பட்ட பிறகும் அதே கட்டணத்தை தமிழக அரசு வசூலிப்பது ஏற்க முடியாததாகும்.

    தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் நீட் தேர்வின் அடிப்படையில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆனால், இளநிலை மருத்துவப் படிப்புக்கு ஆண்டுக் கட்டணமாக அரசு கல்லூரிகளில் 13,600 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ரூ 5 லட்சத்து 54 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், இளநிலை பல் மருத்துவம், முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பு, முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்பு ஆகியவற்றுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் முறையே ரூ.11,600, ரூ. 42,025, ரூ.31,325 மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இப்படிப்புகளுக்கு முறையே ரூ.3.40 லட்சம், ரூ.9.80 லட்சம், ரூ.8.00 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    தமிழகத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.4 லட்சத்துக்கும் குறைவாகவே கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், அதைவிட அதிகமாக கட்டணம் வசூலிப்பது அரசே நடத்தும் கட்டணக் கொள்ளையாக அமையாதா?

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசு நிதியில் தான் இயங்குகிறது. மாணவர் சேர்க்கை மற்றும் கல்வித் தகுதியில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும், அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவ்வாறு இருக்கும் போது, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மட்டும் மிக அதிகமாக கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் சரியாகும்? இந்த நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒன்பதாவது நாளாக போராட்டம் நீடிக்கும் நிலையில், மாணவர்களை அழைத்துப் பேசி பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண்பது தான் சரியான அணுகுமுறை.

    மாறாக, மருத்துவம் மற்றும் பல்மருத்துவக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம், விடுதிகளையும் மூடி மாணவர்களை கட்டாயமாக வெளியேற்றியிருக்கிறது. அதுமட்டுமின்றி, போராட்டத்தைக் கைவிடவில்லை என்றால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டல் விடுத்திருக்கிறது.

    மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அன்பும், பேச்சும் தான் சிறந்த ஆயுதங்கள் ஆகும். மாறாக, அடக்குமுறையை ஏவ நினைத்தால் அது எரியும் தீயில் ஊற்றப்பட்ட பெட்ரோலாக போராட்டத்தை மேலும் பரவச்செய்து விடும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

    அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்து, அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல்மருத்துவக் கல்லூரி ஆகியவற்றிலும் வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
    நில அபகரிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து- உயர் நீதிமன்றம்

    Published : 06 Sep 2017 17:31 IST

    சென்னை



    அரசு நிலத்தை அபகரித்த வழக்கிலிருந்து திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    2002-ம் ஆண்டு பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணையின்போது, 1996-2001 -ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் 1998ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி, அரசுக்கு சொந்தமாக சைதாப்பேட்டையில் இருந்த 3600 சதுர அடி நிலத்தை மோசடி செய்து தனது மாமியார் சரஸ்வதி பெயரில் பதிவு செய்து வீடு கட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. 2007ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த சென்னை மூன்றாவது அமர்வு நீதிமன்றம் வழக்கிலிருந்து பொன்முடியை விடுவித்தது. நீதிமன்ற உத்தரவில் சொத்துக் குவிப்பு வழக்கில் இந்த சொத்தும் அடங்கி இருப்பதால் ஒரு குற்றத்திற்காக இரு வேறு விசாரணைகள் நடத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், அரசு நில அபகரிப்பு வழக்கிலிருந்து பொன்முடி விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து இன்று உத்தரவிட்டார்.

    அவரது தீர்ப்பில், சொத்துக் குவிப்பு வழக்கும், அரசு நில அபகரிப்பு வழக்கும் ஒரே மாதிரியானவையாக இல்லாதபோது, சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவித்ததற்காக நில அபகரிப்பு வழக்கிலும் விடுவித்தது செல்லாது என குறிப்பிட்டுள்ளார்.

    எனவே பொன்முடி தன் மீதான அரசு நில அபகரிப்பு வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
    நீட் தேர்வு சர்ச்சையால் மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கையை நிறுத்தியது வேலூர் சிஎம்சி

    Published : 06 Sep 2017 10:54 IST




    நீட் தேர்வு சர்ச்சையால் 2017 - 2018 ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை வேலூர் சிஎம்சி (கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ்) நிறுத்திவைத்துள்ளது. சிறுபான்மை கல்வி நிறுவனமான சிஎம்சி சார்பில் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை (நீட் தேர்வை) நடத்தி அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இந்நிலையில், தேசிய நுழைவுத்தேர்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என ஏற்கெனவே சிஎம்சி உச்ச நீதிமன்றம்வரை வலியுறுத்திவந்தது.

    இந்நிலையில் நீட் தேர்வு சர்ச்சையால் 2017 - 2018 ஆண்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்திவைத்துள்ளது.

    இதன் காரணமாக ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடப்பாண்டில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் மொத்தமுள்ள 100 இடங்களில் ஓரிடமும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் சிறப்பு மருத்துவப் படிப்பில் உள்ள 62 இடங்களில் ஓரிடமும் மட்டுமே நிரப்பப்படுவதாக சிஎம்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சிஎம்சி இயக்குநர் சுனில் சாண்டி கூறியதாவது:

    நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதால் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த ஆண்டு சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் ஒரே ஒரு மாணவர் மட்டும் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப்படுவார். அவர், போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரரின் வாரிசு. மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் அவருக்கு இந்த இடம் ஒதுக்கப்படுகிறது. அதேபோல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பில் இதயநோய் நிபுணத்துவம் பிரிவில் ஒருவருக்கு இடம் வழங்கப்படுகிறது. அது உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வழங்கப்படுகிறது.

    மருத்துவ முதுகலை படிப்பிற்கான சேர்க்கை வழக்கமான நடைமுறையை பின்பற்றியே மேற்கொள்ளப்பட்டது. ஏனெனில், அரசு உத்தரவு வருவதற்கு முன்னதாகவே சிஎம்சியில் மருத்துவ முதுகலை படிப்பிற்கான சேர்க்கை நடந்து முடிந்துவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிஎம்சி கோரிக்கை என்ன?

    சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் மொத்தமுள்ள 100 எம்பிபிஎஸ் இடங்களில் 85 இடங்கள் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்டுகிறது. 15 இடங்கள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. சிஎம்சி மருத்துவக் கல்லூரி சார்பில் தனியாக நுழைத்தேர்வும் நடத்தப்படுகிறது. அத்தேர்வில் மாணவர்களின் தலைமைப் பண்பு, குழுவாக செயல்படும் திறன், கிராமப்புறங்களில் பணியாற்றும் மனப்பாங்கு ஆகியன சோதிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடு பிரிவில் சேர்க்கப்படும் மாணவர்கள் கிறிஸ்துவ மிஷன் மருத்துவமனைகளில் இரண்டாண்டுகள் சேவை புரிவது கட்டாயம். இத்தகைய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயேன் மருத்துவ இடம் அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அதேவேளையில் மருத்துவக் கல்வி கட்டணமாக வெறும் ரூ.3000 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

    எனவே சேவை அடிப்படையில் சமூகத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய சிறுபான்மையினருக்காக நடத்தப்படும் தங்கள் மருத்துவக் கல்லூரியில் தாங்களே நுழைவுத் தேர்வு நடத்த அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என நிர்வாகம் கூறுகிறது.

    இருப்பினும், நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கள் மருத்துவக் கல்லூரி விதிகளின்படி தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கையை நடத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம் என்பதே அவர்களது தற்போதையை நிலைப்பாடாக உள்ளது.

    உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் மற்ற இடங்களை நிரப்பாமல் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட இரண்டு சிறப்பு இடங்களை மட்டும் நிரப்புவதாக சிஎம்சி தெரிவித்துள்ளது.
    தமிழகத்தில் 'நீட்' போராட்டத்துக்கு தடை கோரும் மனு: உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

    Published : 06 Sep 2017 11:23 IST

    சென்னை




    மாணவி அனிதா மரணத்தை அடுத்து நீட்டுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் வலுத்து வருகிறது இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

    நீட் மருத்துவ நுழைவுத்தேர்வை அமல்படுத்துவதில் தமிழகத்துக்கு விதிவிலக்கு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதில் இந்த ஆண்டு விதிவிலக்கு கட்டாயம் உண்டு என்று நம்பிய நிலையில் திடீரென நீட் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு விதிவிலக்கு இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

    நீட் நுழைவுத்தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற அரியலூர் மாணவி அனிதாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் மாணவி அனிதா திடீரென தற்கொலை செய்துக்கொண்டார். இதற்கு நீதி கேட்டும் நீட் நுழைவுத்தேர்வை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.

    இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த ஜி.எஸ்.மணி என்ற வழக்கறிஞர் அனிதாவின் மரணத்தை அடுத்து, நீட் உத்தரவுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. நீட் விவகாரத்தில் உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது இது. உத்தரவை மீறுவதாகும்.

    அனிதாவின் மரணத்தை அடுத்து நடக்கும் இத்தகைய போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன. இதில் உடனடியாக உச்ச நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவசர வழக்காக இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

    இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு எடுப்பதற்கு அப்படி என்ன தேவை வந்தது, உடனடியாக வழக்கை விசாரிக்கும் அளவுக்கு என்ன நடந்து விட்டது என்று கூறி அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.

    இந்த வழக்கு பின்னர் ஒரு நாளில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
    சந்தேகம் சரியா 50: நகம் கடிக்கும் பழக்கம் நோயின் அறிகுறியா?

    Published : 26 Aug 2017 11:09 IST

    டாக்டர் கு. கணேசன்





    எனக்குச் சில மாதங்களாக நகம் கடிக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. இது ஒரு நோயின் அறிகுறி என ஒரு ஆங்கில மருத்துவப் பத்திரிகையில் படித்தேன். அதற்கு மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற வேண்டும் என்றும் அதில் பரிந்துரை செய்திருந்தனர். அது சரியா?

    நீங்கள் படித்த தகவல் முற்றிலும் சரி.

    தலைமுடியைக் கோதுவதுபோல், மூக்கைச் சொறிவதுபோல், ஒரு முறை, இருமுறை என எப்போதாவது நகம் கடித்தால், அது நோயின் அறிகுறி இல்லை. ஆனால், நகம் கடிப்பது என்பது விடமுடியாத பழக்கமாகிவிட்டது என்றாலோ, தங்களை அறியாமலேயே நகத்தைக் கடித்துத் துப்பிக்கொண்டிருக்கிறார்கள் என்றாலோ, என்னதான் முயன்றாலும் நகம் கடிக்காமல் இருக்க முடியவில்லை எனும் நிலைக்கு வந்துவிட்டாலோ, அது ஓர் உளவியல் பிரச்சினையின் வடிகாலாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

    ஏதாவது ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டால், அதை வெளியேற்றுவதற்கு மூளை பல வழிகளைத் தேடும். அதில் ஒன்று நகம் கடித்தல். இது ஓர் அனிச்சைச் செயல். மனதில் புதைந்திருக்கும் பிரச்சினையின் தன்மையைப் பொறுத்து, ஆழ்மனதின் கட்டளைப்படி விரல்கள் தானாகச் செயல்படுவதால், நகம் கடிப்பதைக் கட்டுப்படுத்துவது சற்று சிரமமாகத்தான் இருக்கும். இம்மாதிரி நிலைமையில் உள்ளவர்களுக்கு உளவியல் சிகிச்சைகளும் ஆலோசனைகளும் தேவைப்படும்.

    ஏன் வருகிறது?

    பெரும்பாலானோருக்கு நகம் கடிக்கும் பழக்கம் ஏற்படுவதற்கு உடல் அலுப்பே காரணமாக இருக்கும். எதையும் செய்வதற்கு மனம் ஒப்புக்கொள்ளாதபோது, வெறுமனே இருக்கும்போது, வெறுத்துப் போயிருக்கும்போது, கவலைப்படும்போது, மனம் பதற்றமாக இருக்கும்போது, ஏதாவது தோல்விகளைச் சந்திக்கும்போது, உணர்ச்சிவசப்படும்போது, நெருக்கடிகளைச் சந்திக்கும்போது, ஏமாற்றங்கள் மிஞ்சும்போது, தனக்கு விருப்பமில்லாமல் அடுத்தவரின் கட்டாயத்துக்காகச் செயல்படும்போது, தன்னம்பிக்கையை இழக்கும்போது எனப் பலதரப்பட்ட உளவியல் பிரச்சினைகள் நகம் கடிக்கும் பழக்கத்தைத் தூண்டும். பலருக்கும் இம்மாதிரியான பிரச்சினைகள் எளிதாக முடிந்துவிடும். அதனால், நகம் கடிக்கும் பழக்கமும் பிரச்சினை முடிந்தவுடன் மறைந்துவிடும்.

    சிலருக்கு இம்மாதிரியான தோல்விகளும் ஏமாற்றங்களும் அச்சங்களும் நீடிக்கும். அப்போது அது மன அழுத்த நோய்க்குப் பாதை அமைத்துவிடும். அதிலிருந்து தற்காலிக விடுதலை பெறுவதற்கான வழியாக, நகம் கடிக்கும் பழக்கம் நீடித்துவிடும். இவர்களால் நகம் கடிப்பதை எளிதில் விட்டுவிடமுடியாது. உளவியல் சிகிச்சைக்குப் பிறகே இதற்குத் தீர்வு கிடைக்கும்.

    நோய் காட்டும் கண்ணாடி

    நகத்தை நோய் காட்டும் கண்ணாடி என்கிறார்கள் மருத்துவர்கள். ரத்தசோகை, மஞ்சள் காமாலை, இதயநோய்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு, உடலில் பிராணவாயு குறைவு போன்ற பல பிரச்சினைகளை நகங்கள் உடனே வெளிக்காட்டும். எவ்வித பரிசோதனையும் இல்லாமலேயே இம்மாதிரியான நோய்களை எளிதில் இனம் காணமுடியும். எனவே, நகங்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்.

    கெரட்டின் எனும் புரதத்தால் ஆன நகங்கள் உயிரற்றவை. இறந்துபோன செல்களின் தொகுப்பே நகங்கள். அதனால்தான் அவற்றைக் கடிக்கும்போதும், நகவெட்டியால் வெட்டும்போதும் வலிப்பதில்லை. வலி இல்லை என்பதால்தான், நகம் கடிக்கும் பழக்கம் பலருக்கும் நீடிக்கிறது.

    நகம் கடிக்கும் பழக்கம் பெண்களைவிட ஆண்களிடம்தான் அதிகம். காரணம், பெண்கள் தங்கள் நகங்களை அழகுபடுத்துவதில் அதிக அக்கறை செலுத்துவது வழக்கம். அதனால், அவற்றைக் கடிக்க அவர்களுக்கு மனம் வராது. (ஒரு சில பெண்கள் விதிவிலக்காக இருக்கலாம்). அத்துடன் மன அழுத்தத்திலிருந்து விடுபட பெண்கள் வேறு வழிகளைத் தேடுகின்றனர். வளரிளம் பருவத்தில் அநேகம் பேருக்கு இது இருக்கிறது. இந்தப் பழக்கம் குழந்தைகளையும் விட்டுவைப்பதில்லை. 100-ல் 35 குழந்தைகளுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். புத்தகம் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற வேறு செயல்களில் ஈடுபடும்போதுகூட பலர் தங்களை அறியாமலேயே நகம் கடிக்கின்றனர்.

    என்ன பாதிப்பு ஏற்படும்?

    நகத்தை அழகுபடுத்த எவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்கிறோமோ, அதே அளவுக்கு அவற்றைச் சுத்தமாக வைத்துக்கொள்வதிலும் கவனம் தேவை. இல்லாவிட்டால், நகங்கள் உடல் நோய்களுக்கு வாசலாகிவிடும்.

    நகம் கடிக்கும் பழக்கத்துக்கு மருத்துவ உலகம் ‘ஆனிகோஃபேஜியா’ (Onychophagia) என்று பெயர் சூட்டியுள்ளது. சிலர் திரும்பத் திரும்ப கை கழுவுவதுபோல், நகம் கடிக்கும் பழக்கமும் அடிக்கடி செய்யத் தூண்டும் செயலாகக் கருதப்படுவதால், ‘ஓ.சி.டி’ (Obsessive Compulsive Disorder – OCD) எனும் உளவியல் பிரச்சினையோடு இதற்குத் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

    புகைபிடித்தலைப் போல் நகம் கடிக்கும் பழக்கமும் ஒரு கெட்டப் பழக்கம். அது நாகரிகம் குறைந்த செயலாகவும் கருதப்படுகிறது. அதற்குக் காரணம் இருக்கிறது. குடலில் புழுக்கள் தோன்றுவதற்கு நகம் கடிக்கும் பழக்கம் ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது. மஞ்சள் காமாலை, டைபாய்டு காய்ச்சல், வாந்தி பேதி, சீதபேதி, அஜீரணம், குடல் நோய்கள் போன்றவை ஏற்படவும் இந்தப் பழக்கம் வழி அமைக்கிறது. சிலர் மிகவும் தீவிரமாக நகம் கடித்து, கடித்த இடத்தில் புண் ஏற்பட்டு, ரத்தம் கசியும் அளவுக்கு பிரச்சினையைப் பெரிதாக்கி விடுகின்றனர். அப்போது அங்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. நகத்தின் முனையில் தசை பழுதடைந்து, விரிசல் விழுந்து பார்ப்பதற்கு அசிங்கமாகிவிடுகிறது.

    என்ன செய்யலாம்?

    நகத்தைச் சுத்தமாகக் கழுவி, ஒட்ட வெட்டிவிட வேண்டும்.

    நகம் கடிக்கத் தோன்றும்போது, கைவிரல்களுக்கு வேறு வேலை கொடுத்துவிட வேண்டும். எடுத்துக்காட்டாக, செல்போனை நோண்டுவது, பேனாவால் எழுதுவது போன்ற வேலைகளைச் செய்யலாம்.

    நகத்தின்மீது துவர்ப்புச் சுவை கொண்ட வர்ணத்தைப் பூசிக்கொள்ளலாம்.

    அக்ரலிக் செயற்கை நகங்களைப் பொருத்திக்கொள்ளலாம்.

    நகத்தில் பிளவுகள், தொற்றுகள் போன்றவை காணப்பட்டால், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

    தட்டச்சு செய்வது, கணினியில் வேலை பார்ப்பது, வாகனம் ஓட்டுவது போன்றவை சிரமமாக இருக்கும் அளவுக்கு நகங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

    மனதை வாட்டும் பிரச்சினைகளுக்கு உளவியல் தீர்வு காண வேண்டும்.

    (நிறைவடைந்தது)
    கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்,
    தொடர்புக்கு: gganesan95@gmail.com
    டிமென்ஷியா: அக்கறை கூடினால் பிரச்சினை குறையும்

    Published : 26 Aug 2017 11:09 IST

    டி. கார்த்திக்




    எழுபது ஆண்டுகளுக்கு முன் ஓர் இந்தியரின் சராசரி ஆயுட்காலம் 37 வயதுதான். இந்த 70 ஆண்டுகளில் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 63 வயதுக்கு மேலாகக் கூடியிருக்கிறது. மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், புதிய மருத்துவக் கண்டுபிடிப்புகள் போன்றவை மனிதர்களின் ஆயுட்காலத்தை அதிகரித்திருக்கின்றன. அந்த வகையில் உலகெங்கும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

    டிமென்ஷியா தாக்கம்

    முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைப்போலவே இன்னொரு புறம் அவர்களுக்கு வரக்கூடிய நோய்களும் அதிகரித்திருக்கின்றன. அதில் முக்கியமானது ‘டிமென்ஷியா’ என்றழைக்கப்படும் ஞாபக மறதி நோய். தொடக்கத்தில் சிறுசிறு ஞாபக மறதியாகத் தொடங்கி முற்றிய பிறகு பெற்ற பிள்ளைகள், கட்டிய மனைவி அல்லது கணவனைகூட மறந்துவிடும் அளவுக்கு இந்த நோயின் தாக்கம் இருக்கும். இந்த நோய்க்கு முக்கிய காரணம் மூளை தேய்வதுதான். இது எப்படி ஏற்படுகிறது?

    காரணம் என்ன?

    மூளையில் படியக்கூடிய சில நச்சுப் புரதங்களால் ஞாபக மறதி நோய் வருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, முதியவர்களுக்கு இந்த நோய் வருவதற்கு நாட்பட்ட நீரிழிவு, உயர் ரத்தஅழுத்த நோயும் முக்கியக் காரணம். விபத்துகளால் ஏற்படும் தலைக் காயம், போதைப் பொருள் பயன்பாட்டாலும் ஞாபக மறதி நோய் வருகிறது. குறிப்பாக மூளையில் புரதங்கள் படிவதற்கு போதைப் பொருள் பழக்கமே காரணம். இப்படி வரக்கூடிய ஞாபக மறதி நோயைத்தான் அல்சைமர் என்று அழைக்கிறார்கள். அல்சைமர் என்பது டிமென்ஷியாவில் ஒரு வகை. இதன் பாதிப்புகளும் விளைவுகளும் ஒரே மாதிரியானவைதான்.

    நவீன மருந்துகள்

    பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை ஞாபக மறதி நோய்க்கு குறிப்பிட்ட சில மருந்துகளே இருந்தன. இன்று ஞாபக மறதி நோய்க்கான சிகிச்சை முறைகள் மாறியிருக்கின்றன. “ஞாபக மறதி நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்த நவீன சிகிச்சை முறைகள் இன்று வந்துவிட்டன. முன்பைவிட மேம்பட்ட மருந்துகளும் உள்ளன. அதிகபட்சமாக ஞாபக மறதி நோய்க்கு தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி வேகம் எடுத்திருக்கிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் அதற்கான முயற்சிகள் வேகம் அடைந்துள்ளன. ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். அதைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கும் நவீன மருந்துகள் உள்ளன” என்கிறார் திருச்சி மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் அலீம்.

    பராமரிப்பு முக்கியம்

    ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிப்பது சவாலான காரியம். தினசரி மருந்து, மாத்திரைகள் எடுக்கவும் உணவைச் சாப்பிடவும்கூட அவர்கள் மறந்துவிடுவார்கள். அவர்களைக் குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் கண்காணித்து பராமரிக்க முன்வருவது பாதிக்கப்பட்டவருக்குப் பெரிதும் உதவும்.

    மாறிவரும் வாழ்க்கை முறையில் தனித்துவிடப்படும் முதியவர்கள் அதிகமாகிவிட்டார்கள். இதுபோன்ற முதியவர்களுக்கு ஞாபக மறதி நோயும் வந்துவிட்டால் பெரும் சிக்கல்தான். பாதிக்கப்பட்டவர்களைத் தனியாக ஒருவர் பராமரிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களைக் கவனிப்பவர் ஞாபக மறதியின் பாதிப்பைக் குறைக்கக்கூடிய சில விஷயங்களை செய்தாகவும் வேண்டும்.

    அக்கறை அவசியம்

    “ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பழக்க வழக்க மாறுதல்களால், வீட்டில் பலரும் அதைத் தொல்லையாக நினைப்பார்கள். ஞாபக மறதியைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது, பழக்கவழக்களில் ஏற்படும் மாறுதல்களைத் தவிர்ப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் மன சஞ்சலங்களைப் போக்குவது போன்றவற்றை மருந்து, மாத்திரை மூலம் கட்டுப்படுத்தலாம்.


    டாக்டர் அலீம்

    பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி அறிவு, கம்ப்யூட்டர் அறிவைப் பெருக்குவதன் மூலம், இந்த நோயின் தாக்கத்தைக் குறைக்கலாம் என்று ஆய்வு முடிகள் வந்திருக்கின்றன. கல்வி அறிவும், கனிணியை இயக்கும் அறிவும் இருந்தால் சுடோகு, புதிர்கள், சவாலான விஷயங்களைப் படிப்பது போன்றவற்றால், மூளைக்கு வேலை கொடுத்து ஞாபக மறதியின் பாதிப்பைக் குறைக்கலாம்.

    நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதைத் தானாகவே செய்ய மாட்டார்கள். அவர்களைக் கவனிப்போர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் அவர்களை அதுபோன்ற வேலைகளில் ஈடுபடுத்த வேண்டும். அதற்குப் பொறுமை வேண்டும்” என்கிறார் டாக்டர் அலீம்.

    மேம்பட்ட மருத்துவத்தின் மூலம் ஞாபக மறதி நோயின் பாதிப்பை வேண்டுமானால் குறைக்கலாம்.

    ஆனால், ஞாபக மறதியால் பாதிக்கப்படும் முதியவர்கள் குழந்தைகளுக்கு சமம் எனும் சிந்தனை விசாலமானால், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் குடும்பத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் குறைத்துவிடலாம்.
    சாம்பாரே மருந்து!

    Published : 02 Sep 2017 10:44 IST

    எல். ரேணுகா தேவி




    நமது விருந்துச் சாப்பாட்டின் தனித்துவமான அம்சம் கமகமக்கும் சாம்பார். சாதாரணச் சாப்பாட்டிலும்கூட வாரத்தின் இரண்டு மூன்று நாட்களாவது சாம்பார் இடம்பெற்றுவிடுகிறது. சாப்பாட்டுடன் சாம்பாரைக் கலந்து சாப்பிடுபவர்கள் ஒரு ரகம் என்றால், சாம்பாரை சர்பத் போலக் குடிப்பவர்கள் இன்னொரு ரகம்.

    அதைப் பார்த்து யாராவது இனி உங்களை ‘சரியான ‘சாம்பார்’ கணேசனாக இருப்பே போலிருக்கே’ என்று சொன்னால், சந்தோஷமாகச் சிரியுங்கள். ஏன் தெரியுமா, அவர்களைக் காட்டிலும் குடல் புற்றுநோய் உண்டாவதற்கான சாத்தியம் உங்களுக்கு மிகவும் குறைவு.

    ஆம், தினமும் சாம்பார் சாப்பிடுவதால் குடல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்கிறார்கள் மணிப்பால் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.

    புற்றைத் தடுக்கும் மஞ்சள்

    மணிப்பால் மருந்தியல் கல்லூரியும், மணிப்பால் பல்கலைக்கழகமும் இணைந்து தென்னிந்தியர்களின் முக்கிய உணவான சாம்பாரில் குடல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது எனக் கண்டறிந்துள்ளனர்.

    மருந்தியல் ஆய்வாளர்கள் வி.கங்கா பிரசாத், அல்பி பிரன்சிஸ், கே. நந்தகுமார் ஆகியோர் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் ‘பார்மகோக்னாஸி மேகசின்’ எனும் மருந்தியல் இதழில் சமீபத்தில் வெளியாயின.

    உலகளவில் நடத்தப்பட்ட புற்றுநோய் தொடர்பான ஆய்வுகளில் அதிக அளவு மஞ்சள் உட்கொள்வதால் குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

    உணவும் மருந்தும்

    அமெரிக்காவில் நடத்தப்பட்ட மருத்துவரீதியான ஆய்வில் அமெரிக்கர்களைத் தாக்கும் புற்றுநோய்களில் குடல் புற்றுநோய் மூன்றாவது இடத்தில் உள்ளதும் அது பெரும்பாலும் உணவுப் பழக்கத்துடன் தொடர்புடையதாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

    “அதிக அளவு மஞ்சள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகம் கொண்ட வெங்காயம் சேர்த்த உணவுப் பொருட்களில் குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது” என்கின்றனர் ஆய்வுக் குழுவினர்.

    மரபுரீதியாகச் சிலருக்கு, குடல்களில் ‘பாலிப்ஸ்’ எனும் சிறு கட்டிகள் தோன்றும். முறையாகக் கவனிக்காமல் விட்டால், இவை பின்னாளில் புற்றுநோயாக மாறுவதற்கான சாத்தியம் அதிகம். இந்தக் கட்டிகளுக்கு ஏற்ற அருமருந்தாக சாம்பார் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதற்கு முக்கியக் காரணம், அந்த சாம்பாரில் உள்ள மசாலாப் பொருட்கள்தான்.

    சாம்பாரில் உள்ள மல்லிவிதை, வெந்தயம், மஞ்சள், கறுப்பு மிளகு, கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம் ஆகிய மசாலாப் பொருட்களால் புற்றுநோய்க் கட்டிகள் உருவாவது தடுக்கப்படுவதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மசாலாவின் மகிமை

    மும்பை புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் முதன்மை ஆய்வாளர் ஒருவர் கூறும்போது சாம்பாரில் பயன்படுத்தப்படுகிற ஒவ்வொரு மசாலாப் பொருளும் தனித்தன்மை உடையதாக உள்ளது. சாம்பாரில் உள்ள சீரகம், பெருங்காயம் போன்ற பொருட்கள் உடலுக்குச் செரிமானத் திறனை அதிகரிக்கின்றன. செரிமானம் நன்றாக இருந்தாலே, குடல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்கிறார்.

    “பொதுவாக சாம்பார் அதிகளவு காரம் இல்லாத உணவாக இருப்பதால் குடலின் உட்புறம் பாதுகாக்கப்படுவதுடன், குடல் புற்றுநோயை உண்டாக்கும் டைமெத்தில்ஹைட்ராக்சின் எனும் காரணியை, சாம்பாரில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் ஆரம்ப நிலையிலேயே தடுத்துவிடுகின்றன” என்கிறார் புற்றுநோய் மருத்துவர் எஸ்.வி.எஸ்.எஸ்.பிரசாத்.

    மலச்சிக்கல் இல்லை

    இந்தியாவைப் பொறுத்தவரை குடல் புற்றுநோயின் தாக்கம் வடஇந்தியர்களுக்குத்தான் அதிகளவில் காணப்படுகிறது. இதற்குக் காரணம் அவர்களின் உணவில் கோதுமை அதிக அளவு இருப்பதே. இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆனால், தென்னிந்தியர்களின் உணவு முறையில் எளிதில் செரிமானமாகக்கூடிய பொருட்கள் அதிகளவில் சேர்க்கப்படுகின்றன.

    “இந்தியாவில் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதத்தினர் வடஇந்தியர்கள். பொதுவாக வறுத்துப் பொடித்த மசாலாப் பொருட்களை அவர்கள் அதிகமாகச் சேர்த்துக்கொள்கின்றனர். ஆனால், தென்னிந்தியர்களின் உணவில் பெரும்பாலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. மஞ்சளில் பொதுவாகவே புற்றுநோயைத் தடுக்கும் அம்சங்கள் உண்டு. அதனால், இவர்களுக்குக் குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு” என்கிறார் புற்றுநோய் மருத்துவர் டி.பி.எஸ்.பண்டாரி.

    காய்களும் ஒரு காரணம்

    அதேபோல, ருசிக்காக மட்டுமல்லாமல் சாம்பாரில் சேர்க்கப்படும் காய்கறிகளுக்காகவும் இரைப்பைக் குழாய் நிபுணர்களால் மக்களுக்கு அது பரிந்துரைக்கப்படுகிறது.

    “பொதுவாக இந்திய உணவு வகைகளில் அதிக அளவு நார்ச்சத்து இருக்கிறது. அதிலும் சாம்பாரில் கேரட், பாகற்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், தக்காளி போன்ற காய்கறிகள் சேர்த்துச் சமைக்கப்படுகின்றன. காய்கறிகளில் உள்ள சத்துகளும் சாம்பார் மூலமாகக் கிடைப்பதால், உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க இவை உதவுகின்றன. அதனால் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கப்படும். பொதுவாக அதிக அளவு கொழுப்புச் சத்து, குறைந்த அளவு நார்ச்சத்துக் கொண்ட சக்கை உணவை (Junk food) உட்கொண்டால் குடல் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம்” என எச்சரிக்கிறார் குடல் இரைப்பை மருத்துவ நிபுணர் விமலாகர் ரெட்டி.

    சாம்பார் மிகவும் பிரபலமான உணவாக இருப்பதற்குக் காரணம் அதில் சேர்க்கப்படும் மிளகு, பெருங்காயம் போன்ற மசாலாப் பொருட்கள்தான். சாம்பார் சாப்பிடுவதால் குடல் புற்றுநோயைத் தடுக்க முடியும் என்ற ஆராய்ச்சி தற்போது முதல்கட்டத்தில்தான் உள்ளது. என்றாலும் அந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளைப் புறக்கணிக்க முடியாது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஆயிஷா பாத்திமா.

    இனி, சாம்பாரே மருந்து!
    92 வயதிலும் வாசிப்பை நேசிக்கும் ஆசிரியர்: வாசிப்புக்கு முதுமை தடையல்ல என்கிறார்

    Published : 05 Sep 2017 11:31 IST

    கி. மகாராஜன்மதுரை




    டி.வி. சிவசுப்பிரமணியன்


    நாளிதழ் வாசிப்பதை நாள் விடாமல் தொடர்ந்து இளைய தலைமுறையினருக்கு வாசிப்பின் மீது நேசிப்பு ஏற்படுவதற்கு சிறந்த உதாரணமாக இருந்து வருகிறார் ஓய்வுபெற்ற ஆசிரியர் டி.வி. சிவசுப்பிரமணியன் (92).

    இவர், திருச்சி மாவட்டம், திம்மாச்சிபுரத்தில் 1925-ல் பிறந்தார். அங்கு பள்ளி படிப்பை முடித்தபின் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.ஏ. படித்தார். பின்னர், கூட்டுறவுத் துறையில் ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். அங்கு 8 ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில், ஆசிரியர் பணி மீதான ஆர்வத்தால் ஆசிரியர் படிப்பை முடித்தார். மதுரை பசுமலை சிஎஸ்ஐ பள்ளியில் ஒரு ஆண்டும், பின்னர் மதுரை தூயமரியன்னை மேல்நிலைப் பள்ளியிலும் ஆசிரியராக பணிபுரிந்து 1983-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.


    தற்போது, மதுரை சர்வேயர் காலனியில் குடும்பத்துடன் வசிக்கிறார். டி.வி. சிவசுப்பிரமணியன், 92 வயதிலும் நல்ல பார்வைத் திறனுடன் ஆரோக்கியமாக இருக்கிறார். இந்த வயதிலும் புத்தகம், நாளிதழ் வாசிப்பின் மீதான காதல் குறையாமல் உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த வாசிப்பு பழக்கம் இன்றும் தொடர்கிறது. காலை நேரம் முழுவதும் நாளிதழ் வாசிக்கிறார். தான் படித்த தகவல்களை பேரன், பேத்திகளிடம் பகிர்ந்து கொள்கிறார்.

    இதுகுறித்து டி.வி.சிவசுப்பிரமணியன், ‘தி இந்து’விடம் கூறியதாவது: புத்தகம், நாளிதழ் வாசிப்பு பழக்கம் அறிவாற்றல், நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளேன். இன்றைய இளைய தலைமுறையினர் கணினி, செல்போனில் பயனற்ற விஷயங்களை தவிர்த்துவிட்டு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நல்ல விளைவுகள் ஏற்படும்.

    நாளிதழ் வாசிப்பதை ஒருநாள் கூட தவற விட்டதில்லை. என்றார்.

    ‘பரந்த அறிவுக்கு வயது ஒரு தடையல்ல’ என்பதையும், ‘வயதுக்கு தான் முதுமை, வாசிப்புக்கு முதுமையே கிடையாது’ என்பதையும் 92 வயதிலும் நிரூபித்து வருகிறார் சிவசுப்பிரமணியன்.
    அறம் பழகு எதிரொலி: ஏழை மாணவரின் பொறியியல் கல்விச் செலவை ஏற்ற சிங்கப்பூர் வாழ் 'தி இந்து' வாசகர்!

    Published : 05 Sep 2017 18:44 IST

    க.சே.ரமணி பிரபா தேவி




    ராஜ்குமார் (இடது) | ரகுபிரகாஷ் (வலது) - படம்: எல்.சீனிவாசன்

    படிப்பு, விளையாட்டு, கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், நடனம், யோகா என எக்கச்சக்கமான திறமைகளோடு இருந்தும், பொருளாதாரத்தின் காரணமாக மட்டுமே முடங்கிப் போயிருக்கும் முத்தான மாணவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முயற்சிக்கும் தொடர் 'அறம் பழகு'.

    உதவி தேவைப்படும் மாணவர்கள் குறித்த செய்தி 'அறம் பழகு' தொடர் மூலம் 'தி இந்து' இணையதளத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது.


    அவற்றைப் படித்த சிங்கப்பூர் வாழ் தமிழரான 'தி இந்து' வாசகர் ரகுபிரகாஷ், ஏழ்மை நிலையில் இருந்தாலும் கடின உழைப்பால் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு உதவ விரும்புவதாகத் தெரிவித்தார்.

    இந்நிலையில் மயிலாப்பூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்னும் மாணவர் குறித்து தகவல் கிடைத்தது. 12-ம் வகுப்பில் 1,112 மதிப்பெண்களும் 10-ம் வகுப்பில் 486 மதிப்பெண்களும் பெற்றவர் அவர். ஓய்வு நேரங்களில் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு தண்ணீர் கேன் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பொறியியல் படிப்புக்கு இடம் கிடைத்தும் பணமில்லாமல் கல்லூரியில் சேரக் காத்திருந்தார் ராஜ்குமார்.

    ராஜ்குமார் குறித்த தகவல்களை தக்க சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்களோடு, ரகு பிரகாஷிடம் பகிர்ந்தோம். தனியார் பொறியியல் கல்லூரியின் ஆண்டுக் கட்டணமான ரூ.55,635 செலுத்த 3 நாட்களே இருந்தன. இந்நிலையில் குறிப்பிட்ட தொகையை உடனே அனுப்பி வைத்தார் ரகுபிரகாஷ். கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டதால் ஆனந்தத்துடன் கல்லூரி செல்ல ஆரம்பித்தார் ராஜ்குமார்.

    காலத்தினாற் செய்த உதவி குறித்து ரகுபிரகாஷிடம் பேசினோம். ''தாய்நாட்டை விட்டு சிங்கப்பூர் வந்துவிட்டாலும் தமிழகம் மீதான அன்பு குறையவில்லை. தொடர்ந்து தமிழக செய்திகளைப் படிப்பேன். அப்படி ஒரு நாள் இணையத்தில் இருந்தபோதுதான் 'அறம் பழகு' தொடரைப் படித்தேன்.

    என்னுள் பொதுவாகவே ஓர் எண்ணம் உண்டு. அதிக மதிப்பெண்கள் பெற்றும், உயர் கல்விக்குச் செல்ல முடியாமல் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆசைதான் அது. பொருளாதாரம் என்ற ஒற்றைக் காரணியால் மட்டுமே ஒருவருக்கு வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது. இதனால் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 10 மாணவர்களுக்கு, நண்பர்களின் உதவியுடன் உதவத் திட்டமிட்டிருக்கிறேன்.

    'ஏழை மாணவர்களுக்கு உதவத் தயார்'

    அத்தகைய மாணவர்கள் குறித்து உங்களில் யாருக்காவது தெரிந்தால் என்னைத் தொடர்பு கொள்ளலாம். இவை அனைத்துக்கும் பின்புலமாக இருப்பது என்னுடைய ஆசிரியர் ராஜேந்திரன் சார்தான். அவரின் ஊக்கம் மற்றும் உறுதுணையால்தான் என்னால் இத்தகைய செயல்களில் ஈடுபட முடிகிறது.

    ஆசிரியர் தினமான இன்று அவர் குறித்து கூற வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்'' என்கிறார் ரகுபிரகாஷ்.

    ரகுபிரகாஷைத் தொடர்பு கொள்ள - raghu.educationtrust@gmail.com



    ராஜ்குமாரின் குடும்பம். படம்: எல்.சீனிவாசன்

    உதவி கிடைத்த மகிழ்ச்சியில் உணர்ச்சிப் பெருக்கோடு பேசுகிறார் மாணவர் ராஜ்குமார். ''இந்த உதவியை நிச்சயம் மறக்க மாட்டேன். தொடர்ந்து நன்கு படித்து, முன்னேறி, உதவி தேவைப்படும் மக்களுக்கு என்னால் ஆனதைச் செய்வேன்'' என்கிறார் ராஜ்குமார்.

    இதைப் பகிர்ந்துகொள்வதில் 'தி இந்து' பெருமிதம் கொள்கிறது.

    தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in
    நீட் எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர் போராட்டம்

    Updated : 05 Sep 2017 21:50 IST

    சென்னை







    நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

    பெரும் கனவுடன் மருத்துவப் படிப்புக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரியலூர் மாணவி அனிதா கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நியாயம் வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

    இன்று காலை திடீரென லயோலா கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். நடிகை ரோகிணி, திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், கவுதமன் ஆகியோர் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.

    நந்தனம் ஆடவர் கலைக் கல்லுரி மாணவர்கள், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மாநில கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள், தியாகராயா கலைக்கல்லூரி மாணவர்கள், மீனம்பாக்கம் ஏஎம் ஜெயின் கலைக் கல்லூரி மாணவர்கள், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் என சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவையில் ஏஐஎஸ்எப் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் 13 பேர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்று, கைதாகினர்.ரேஸ்கோர்ஸில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த 15 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர். கோவில்பாளையம், ஈச்சனாரி, குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தனியார் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பொள்ளாச்சியில் பாரதியார் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி மற்றும் என்ஜிஎம் கல்லூரி மாணவர்கள், தங்கள் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரியில் இந்திய மாணவர் சங்கம், மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட 20 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ராஜிவ்காந்தி சதுக்கம் நான்குமுனை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.

    திருநெல்வேலியில் மதிதா இந்துக் கல்லூரி, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி, தூய யோவான் கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்டத்தில் செய்துங்கநல்லூரிலுள்ள பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.


    போராட்டத்தில் ஈடுபட்ட சேலம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் | படம்: எஸ்.குருபிரசாத்

    சேலத்தில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். ஓசூர் ரயில் நிலையத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வேலூர் ஊரீசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகம் முன்பாக அமர்ந்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரி, திருச்சி அரசு சட்டக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து அந்தந்த கல்லூரி வாயில்கள் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள மருதன்கோன்விடுதி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

    திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையத்தில் தலித் மக்கள் முன்னணியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் திருப்பதியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கருடாத்திரி விரைவு ரயிலை மறித்து முழக்கமிட்டனர்.

    மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் திராவிடர் கழகம் சார்பில், மறியல் போராட்டம் நடந்தது. இது தொடர்பாக மாவட்ட செயலர் மணிகண்டன் உட்பட 12க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.இ

    மதுரை செல்லூர் 60-அடி ரோட்டில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், நீட் தேர்வு ரத்து, அனிதா மரணம் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    திண்டிவனம் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 1500 பேர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த திண்டிவனம் போலீஸார்,

    சேலத்தில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் தர்ணாவில் அமர்ந்தனர்.

    கும்பகோணம் அரசு தன்னாட்சி கலைக் கல்லூரி மாணவர்கள் நேற்று காலை கல்லூரி வளாகத்துக்குள் மாணவர் பாலமுருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    போதைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்...

    2017-09-05@ 15:51:34




    நன்றி குங்குமம் டாக்டர்

    - இளங்கோ கிருஷ்ணன்

    டாஸ்மாக் கடையை அகற்றச்சொல்லி தமிழகம் முழுதும் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கும் காலம் இது. மொத்த சமூகத்தின் பெரும்பகுதி குடிநோயாளிகளாகவும் மனநோயாளிகளாகவும் மாறிக்கொண்டிருக்கும் கொடூரமான காலத்தில் நாம் இருக்கிறோம். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பத்து பேர் போதைப் பழக்கத்தால் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறது ஒரு பகீர் புள்ளிவிவரம். போதை என்பது ஆல்கஹால் மட்டும் இல்லை. புகையிலை முதல் கஞ்சா, ஹெராயின் வரை உள்ள அனைத்துமே போதைப் பொருட்கள்தாம்.

    தவிர சில இருமல் மருந்துகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் தின்னர் போன்றவற்றையும் போதைப் பொருளாக சிலர் பயன்படுத்துகின்றனர்.கிராமங்களைவிட நகரங்களிலேயே போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதிகமாக உள்ளனர். குறிப்பாக, இளைஞர்களிடையே இந்தப் பழக்கம் அதிகமாக உள்ளது என்பதுதான் வேதனை. இந்தியாவில் உள்ள 75 சதவிகிதக் குடும்பங்களில் யாராவது ஒருவரேனும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவராக இருக்கிறார் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

    போதைகள் பலவிதம்
    போதைப் பழக்கம் என்று பொதுவாக நாம் சொன்னாலும் இதில் பலவகை உள்ளன. சிலவகை போதைப் பொருட்களை விற்பனை செய்ய அரசே அனுமதி அளித்துள்ளது. உதாரணமாக சிகரெட், மதுபானங்கள் போன்றவற்றைச் சொல்லலாம். இதைத் தவிர மருத்துவக் காரணங்களுக்காக மெத்தடோன் (Methadone), ஆக்ஸிகோடோன் (Oxycodone), சோல்பிடெம் (Zolpidem) போன்ற மருந்துகள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றை சிலர் போதைப் பொருளாக சட்டத்துக்குப் புறம்பாகப் பயன்படுத்துகின்றனர். கஞ்சா, ஹெராயின், எல்.எஸ்.டி உட்பட பலவகையான போதைப் பொருட்கள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகின்றன.

    இந்த சட்டவிரோத போதைப் பொருட்களின் சந்தை மதிப்பு சட்டப் படியான போதைப் பொருட்களின் சந்தை மதிப்பைவிடவும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகச் சொல்கிறார்கள். போதைப் பொருட்களை அவற்றின் பண்பின் அடிப்படையில் பிரித்திருக்கிறார்கள். டிப்ரசன்ட் (Depressant): ஆல்கஹால் நிறைந்த பானங்களும் சால்வென்ட்ஸ் எனப்படும் சில திரவங்களுமே டிப்ரசன்ட். மூளை செல்களைக் கட்டுப்படுத்தி அதன் செயல்பாட்டை மந்தப்படுத்துவதால் இதற்குஇந்தப் பெயர்.

    ஹல்லூசினேஷன்கள்: இல்லாததை இருப்பது போல் காட்டுவது ஹல்லூசினேஷன். நாம் காணும் காட்சிகள், கேட்கும் ஒலிகள் ஆகியவற்றில் குழப்பங்களை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களைக் கொண்டுள்ள போதைப் பொருட்கள் இவை. கானபிஸ் (Cannabis), எல்எஸ்டி (LSD) போன்றவை இந்த வகையில் அடங்கும். வலி நிவாரணிகள்: நரம்பு மண்டலத்தை மட்டுப்படுத்தி வலி உணர்வுகளை உணரச் செய்வதைக் கட்டுப்படுத்தும் வேதிப்பொருட்கள் இவை. மருத்துவக் காரணங்களுக்காக இவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆஸ்பிரின் போன்ற மருந்துகளும் ஹெராயின் போன்ற லாகிரி வஸ்துகளும் இந்தப் பிரிவில்தான் வருகின்றன.

    செயலூக்கிகள் (Performance enhancer): தசைகளின் ஊக்கத்து க்கு உதவும் மருந்துகள் இந்தவகையைச் சேர்ந்தவை. குறிப்பாக, அனபாலிக் ஸ்டீராய்டு மருந்துகள். இவையும் மருத்துவக் காரணங்களுக்காகத்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், சிலர் சட்டத்துக்குப் புறம்பாக மருத்துவக் காரணங்களுக்கு வெளியே போதைக்காகப் பயன்படுத்துகிறார்கள். தூண்டிகள் (Stimulants): மூளையில் உள்ள செல்களை தற்காலிகமாகத் தூண்டி செயல்பட வைக்கும் திறனுடையவை. புகையிலை, காபீன் மற்றும் எக்ஸ்டசி போன்ற போதைப் பொருட்கள் இந்தவகையைச் சேர்ந்தவை. இருக்கும் விவரங்களைப் பார்த்துவிட்டோம்.

    மனநல மருத்துவரான அசோகன் இது குறித்து என்ன சொல்கிறார்?‘

    ‘பழக்கத்துக்கு அடிமையாவது தான் போதை. அதாவது நமது உடலில் உள்ள செல்களுக்கு குறிப்பிட்ட பொருளில் உள்ள ஒரு வேதித்தன்மை மிகவும் பிடித்துப்போய்விட்டது என்றால் அதற்கு நம் உடல் மிக விரைவாக அடிமையாகத் தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் அது இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்குச் செல்கிறது. இப்படி அடிமையாகும் போதைப் பொருள், லாகிரி வஸ்துவாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அது மருந்தாகக் கூட இருக்கலாம்.

    ஆனால், மருத்துவரின் பரிந்துரையோடு நோயாளியின் உடலின் தேவை அறிந்து மருந்துகளாகத் தரப்படுபவை என்பதால் அவற்றால் ஆபத்து இல்லை. போதைதரும் பொருட்களின் இந்த வகை மருத்துவப் பயன்பாட்டை ‘use’ என்கிறோம். உதாரணமாக இடுப்பு வலி இருக்கிறது என்றால் அதற்கு மருத்துவர் பரிந்துரைக்கும் வலி நிவாரணியைப் பரிந்துரைக்கும் அளவில் பயன்படுத்தினால் அது ‘யூஸ்’. அதே மருந்தை மருத்துவர் பரிந்துரையின்றி ஒருவர் வலி நிவாரணத்துக்காகப் பயன்படுத்தினால் அது Misuse.மருத்துவர்கள் பயன்படுத்தும் போதை தரும் மருந்தையோ அல்லது அதில் உள்ள போதை தரும் அம்சத்தை மட்டும் பிரித்தெடுத்து அதை போதைக்காக மட்டுமே பயன்படுத்துவதையோ ‘அப்யூஸ்’ என்கிறோம்.

    ‘ட்ரக் அப்யூஸ்’ என்பது எல்லாவகை போதைப்பொருளையும் பயன்படுத்துவதுதான். இந்த போதைப் பொருளைத் தொடர்ந்து ஒருவர் பயன்படுத்தும்போது அவர் போதையைச் சார்ந்திருந்தல் (Drug Dependant) என்ற நிலைக்குச் செல்கிறார். இதன் தொடர்ச்சியான அடுத்த நிலைதான் போதைக்கு அடிமையாதல் (Drug addiction). தமிழகத்தில் மதுவுக்கு அடிமையான கூட்டத்தைப் போலவே பல்வேறு வகையான போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. புகையிலையையும் ஆல்கஹாலையும் போதைப் பழக்கத்தின் நுழைவாயில் என்பார்கள்.

    ஒருவர் இந்தப் பழக்கங்களுக்குள் நுழைந்துவிட்டால் மெல்ல மெல்ல ஹெராயின், கஞ்சா, எல்எஸ்டி என ஒவ்வொரு போதைப் பொருளாகப் பயன்படுத்தும் ஊக்கத்தையும் ஆர்வத்தையும் பெற ஆரம்பிப்பார். ஆனால், ஹெராயின் உள்ளிட்ட டிசைனர் ட்ரக்ஸுகளுக்கு இன்றைய இளைய தலைமுறை நேரடியாகவே அடிமையாகி இருக்கிறது என்பதுதான் கொடுமை. இவற்றின் விலை தங்கத்தைவிட அதிகம் என்பதால் வசதியான வீட்டுப்பிள்ளைகளே அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் வார இறுதி பார்ட்டிகளில் இந்த டிஸைனர் ட்ரக்ஸ்களை ஆண் பெண் பேதமின்றி பயன்படுத்துகின்றனர். இதனால் செக்ஸுவல் அப்யூஸ் உட்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

    போதைக்கு அடிமையானவர்கள் போதைப் பழக்கத்துக்காக எதையும் செய்யும் நிலைக்குச் செல்வார்கள். பொய் சொல்வது, திருடுவது, வன்முறையில் ஈடுபடுவது என குற்றச்செயல்களில்கூட தயங்காமல் இறங்குவார்கள். முதன் முறை பயன்படுத்தும் போது பெரும்பாலானவர்களுக்கு பெரிய இன்பம் கிடைக்காது. வித்தியாசமான அனுபவமாக மட்டுமே இருக்கும். ஆனால், தொடர்ந்து இதைப் பயன்படுத்தும்போது மனமும் உடலும் மெல்ல இதற்கு அடிமையாகும். பிறகு இது இல்லாவிட்டால் இன்பமே இல்லை என்ற நிலைக்கு உடல் செல்லும். ஒருவர் தொடர்ந்து ஒரு மாதத்துக்கு சிகரெட் பிடித்தால் அந்தப் பழக்கத்துக்கு அடிமையாவார். தொடர்ந்து 20 நாட்கள் குடிப்பவர் குடிக்கு அடிமையாவார்.

    ஆனால், ஹெராயின், கஞ்சா போன்ற போதை மற்றும் லாகிரி வஸ்துகளை பத்து நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தினாலே அடிமையாகிவிடுவார்.
    போதைப் பழக்கத்தை நிறுத்தும்போது ஏற்படும் உடல் மற்றும் மன பாதிப்புகளை வித்ட்ராயல் சிம்ப்டம்ஸ் (Withdrawal symptoms) என்பார்கள்.
    அந்தப் பொருளை உடனே நுகர வேண்டும் என்ற ஆர்வம் தோன்றும். உடலெங்கும் நடுக்கம் ஏற்படும். பதற்றமும், கோபமும், எரிச்சலும் ஏற்படும். எதிலும் ஆர்வ மின்மை, கவனச்சிதறல் போன்றவை ஏற்படும். கஞ்சா, ஹெராயின், பிரவுன் சுகர் போன்ற டிசைனர் ட்ரக்ஸ்களுக்கு அடிமையானவர்களுக்கு இந்த வித்ட்ராயல் சிம்ப்டம்ஸ் தீவிரமாக இருக்கும்.

    கடுமையான உடல் வலி, குடலே வெளிவந்து விடுவதைப் போன்ற வாந்தி, தலைவலி போன்றவை உக்கிரத்துடன் வெளிப்படும். இன்று மறுவாழ்வு மையங்கள் நாள்தோறும் பெருகிவருகின்றன. போதை அடிமைகள் அதிகரித்து வருவதன் சாட்சி இது. அரசின் அனுமதி பெற்ற போதை அடிமைகள் மறுவாழ்வு மையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் முறையான சிகிச்சை பெற்றால் மறுவாழ்வுக்குத் திரும்பலாம். போதை அடிமைகளின் மறுவாழ்வுக்கு அவர்களின் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அவசியம். அவர்கள் தினசரி போதைப் பொருளைப் பயன்படுத்தும் நேரம் வந்ததும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். குடும்பத்தினரும் நண்பர்களும் இதைப் புரிந்துகொண்டு ஒரு குழந்தையைப் பராமரிப்பது போல் அவர்களைக் கவனிக்க வேண்டும். ஓரளவு உடலும் மனமும் தேறி வரும்வரை அவர்களைக் கிண்டல் செய்வது, திட்டுவது, மனம் வெறுக்கும்படி நடந்துகொள்வது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்...’’ என்கிறார் டாக்டர் அசோகன்.
    தாம்பரத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏலச்சீட்டு நடத்தி ரூ.9 கோடி மோசடி: தம்பதியை கண்டுபிடித்தால் சன்மானம்

    2017-09-05@ 02:00:31




    தாம்பரம்: ஏலச்சீட்டு நடத்தி ரூ.9 கோடிக்கு மேல் மோசடி செய்து தலைமறைவாக உள்ள தம்பதியரை கண்டுபிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என தாம்பரம் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ‘கடந்த ஓராண்டாக காணவில்லை. பலரது பல கோடி சீட்டு பணங்களை மோசடி செய்த தம்பதியர் சேகா (எ) ராஜசேகர் அவரது மனைவி மலர் இவர்களை பற்றி தகவல் கொடுத்தாலோ அல்லது கண்டுபிடித்து கொடுத்தாலோ தக்க சன்மானம் வழங்கப்படும். இப்படிக்கு பாதிக்கப்பட்ட மக்கள்’’ என தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: மேற்கு தாம்பரம், இரும்புலியூர், ஏரிக்கரை தெருவை சேர்ந்த சேகா (எ) ராஜசேகர் மற்றும் இவரது மனைவி மலர். இருவரும் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி சுமார் ரூ.9 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களைப் பிடித்து அவர்களது பணத்தை மீட்டு தரவேண்டும். இவர்களை பற்றி பொதுமக்கள் யாருக்காவது தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கொச்சி விமான நிலையத்தில் ஓடு பாதையில் இருந்து விலகியது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்
    2017-09-06@ 00:43:40




    திருவனந்தபுரம்: கொச்சி விமான நிலையத்தில் நேற்று அதிகாலை தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ஓடு பாதையில் இருந்து விலகி, மழைநீர் வடிகால் கால்வாயில் இறங்கியது. இதில் விமான பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் போயிங் விமானம் அபுதாபியில் இருந்து கொச்சிக்கு நேற்றுஅதிகாலை 2.45 மணியளவில் வந்தது.

    கன மழை காரணமாக ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியிருந்தது. விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம், நிறுத்தும் இடத்துக்கு திரும்பும்போது சறுக்கியது. அருகில் உள்ள மழைநீர் வடிகால்வாயில் விமானத்தின் முன்சக்கரம் இறங்கி சேதமடைந்தது. அந்த விமானத்தில் வந்த 102 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
    மூத்த குடிமக்களின் கட்டண சலுகையை பறிக்க ரயில்வே திட்டம்: முன்பதிவு படிவத்தில் தனிக்கேள்வி


    2017-09-06@ 01:35:17




    நாகர்கோவில்: மத்திய அரசு பல்வேறு துறைகளில் மானியத்தை ரத்து செய்து வருகிறது. ரயில்வேயில் செலவுகளை குறைத்து வருவாயை பெருக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மானியங்கள், சலுகைகளை குறைத்து வருவாயை பெருக்கும் நோக்கில் மூத்த குடிமக்களிடம் ரயில் பயண கட்டணத்தில் உள்ள சலுகையை பறிக்க திட்டமிட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் தற்போது மூத்த குடிமக்கள் என்ற முன்னுரிமையை வழங்கி அதற்கான சலுகையை ரயில்வே வழங்குகிறது. ஆண்களுக்கு 40 சதவீதமும், பெண்களுக்கு 50 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. 

    இந்தநிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கின்ற மூத்த குடிமக்களிடம் நீங்கள் உங்களுக்கான கட்டண சலுகையை முழுவதுமாக அல்லது 50 சதவீதம் விட்டுக்ெகாடுக்கிறீர்களா? என்று கேள்வியுடன் முன்பதிவு படிவம் இடம்பெற உள்ளது.

    இதன் மாதிரி படிவம் அனைத்து ரயில்வே கோட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சாப்ட்வேரில் இந்த மாற்றத்தை கொண்டுவர சென்டர் பார் ரயில்வே இன்பர்மேஷன் சிஸ்டம், ஐஆர்சிடிசி ஆகியவற்றுக்கு ரயில்வே அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது. கடந்த ஜூலை 15ம் தேதி முதல் இதனை அமல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அதனை செயல்படுத்த இயலவில்லை. படிவங்கள் அச்சடிப்பதில் உள்ள தாமதம் காரணமாக செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது இதனை செயல்படுத்தும் முயற்சியில் ரயில்வே இறங்கியுள்ளது.

    Use Of Aadhaar To Get Mobile SIM Connections: Legal Issues Involved | Live Law

    Use Of Aadhaar To Get Mobile SIM Connections: Legal Issues Involved | Live Law: These days, telecom operators are relying on Aadhaar data for customer verification before activating SIM cards.  Reliance Jio, which is creating waves in the telecom field, is making use of this facility to its fullest potential. Operators like Airtel and Vodafone have also started to make use of Aadhaar date. Ever wondered how such private …

    Can A Governor ‘Summon’ A Chief Minister? | Live Law

    Can A Governor ‘Summon’ A Chief Minister? | Live Law: The Kerala Governor, P.Sathasivam tweeted on July 30 that he summoned the Chief Minister of Kerala, and the State Police Chief to know about action taken by State government on law and order issues in Thiruvananthapuram.   Another tweet from the Governor said that the Chief Minister, who met him at the Raj Bhavan, assured …

    Upload Impugned Lower Court Orders Corresponding To Judgments On The Madras HC Website: CIC Recommends [Read Order] | Live Law

    Upload Impugned Lower Court Orders Corresponding To Judgments On The Madras HC Website: CIC Recommends [Read Order] | Live Law: The Central Information Commission has recommended Madras High Court to upload impugned orders of lower courts and tribunals corresponding to the judgments available on its website. Information Commissioner Mr. R.K. Mathur observed that uploading the impugned orders would “help the general public, litigants and all other stake holders in linking the Hon’ble High Court’s orders/judgments …

    Madras HC Directs State Election Commission To Conduct Local Body Elections By 17 November [Read Judgment] | Live Law

    Madras HC Directs State Election Commission To Conduct Local Body Elections By 17 November [Read Judgment] | Live Law: The Madras High Court, on Monday, directed the Tamil Nadu State Election Commission (TNSEC) to conduct the local body elections by 17 November. The Bench comprising Chief Justice Indira Banerjee and Justice M. Sundar took note of the urgency of the situation, as a period of almost one year had elapsed from the date of …

    Rajasthan HC Quashes FIR Against Lawyer For Allegedly Rendering Wrong Legal Advice To Bank [Read Order] | Live Law

    Rajasthan HC Quashes FIR Against Lawyer For Allegedly Rendering Wrong Legal Advice To Bank [Read Order] | Live Law: The Rajasthan High Court, last week, quashed an FIR filed by a Bank alleging wrong legal advice by a lawyer in the form of a forged search report for grant of loan. The Court was hearing a Petition filed by Mr. Rajendra Singh under Section 482 of the Cr.P.C. seeking quashing of an FIR registered …

    Resignation of bank employees cannot be treated as voluntary retirement: HC

    Rejects plea of former bank employees for inclusion under pension scheme

    In a setback to a group of former employees of banks, the Karnataka High Court has held that bank employees who have resigned from service cannot claim that their “resignation” should be treated as “voluntary retirement” to make them eligible for applying for the pension scheme.
    Also, the court reiterated an earlier declaration that “once the period is over for opting for the pension scheme, the employees cannot be permitted to exercise their option for the scheme, as pension fund is created by surrender of the Contributory Provident Fund by the employees and hence the option for seeking the pension has to be exercised within a limited time frame.”
    Justice Raghvendra S. Chauhan passed the order while dismissing petitions filed by P.D. Nanaiah and 150 other former employees of banks. The petitioners had resigned from service between 2007 and 2010.
    The court also said it cannot order extending of the pension scheme’s benefit to the present petitioners based on the High Court’s April 18, 2012 judgment, which had quashed a clause in the pension scheme barring extension of the scheme to resigned employees, and had directed grant of pension to those resigned employees who had approached the High Court.
    Justice Chauhan, citing an apex court verdict on delay in approaching courts, said the benefit of the 2012 judgment cannot be extended to the present petitioners as they had approached court after a delay of four years as the pension scheme was announced back in 2010.
    The present petitioners “chose to wait and watch the outcome of series of litigation pending between their other colleagues and the respondent bank”, and approached the HC only in 2014 after the Supreme Court in December 2013 upheld the High Court’s April 2012 judgment in petitions filed by C. Narasimhappa and Others vs Vijaya Bank.

    NEWS TODAY 21.12.2024