Wednesday, September 6, 2017

மூத்த குடிமக்களின் கட்டண சலுகையை பறிக்க ரயில்வே திட்டம்: முன்பதிவு படிவத்தில் தனிக்கேள்வி


2017-09-06@ 01:35:17




நாகர்கோவில்: மத்திய அரசு பல்வேறு துறைகளில் மானியத்தை ரத்து செய்து வருகிறது. ரயில்வேயில் செலவுகளை குறைத்து வருவாயை பெருக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மானியங்கள், சலுகைகளை குறைத்து வருவாயை பெருக்கும் நோக்கில் மூத்த குடிமக்களிடம் ரயில் பயண கட்டணத்தில் உள்ள சலுகையை பறிக்க திட்டமிட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் தற்போது மூத்த குடிமக்கள் என்ற முன்னுரிமையை வழங்கி அதற்கான சலுகையை ரயில்வே வழங்குகிறது. ஆண்களுக்கு 40 சதவீதமும், பெண்களுக்கு 50 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. 

இந்தநிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கின்ற மூத்த குடிமக்களிடம் நீங்கள் உங்களுக்கான கட்டண சலுகையை முழுவதுமாக அல்லது 50 சதவீதம் விட்டுக்ெகாடுக்கிறீர்களா? என்று கேள்வியுடன் முன்பதிவு படிவம் இடம்பெற உள்ளது.

இதன் மாதிரி படிவம் அனைத்து ரயில்வே கோட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சாப்ட்வேரில் இந்த மாற்றத்தை கொண்டுவர சென்டர் பார் ரயில்வே இன்பர்மேஷன் சிஸ்டம், ஐஆர்சிடிசி ஆகியவற்றுக்கு ரயில்வே அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது. கடந்த ஜூலை 15ம் தேதி முதல் இதனை அமல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அதனை செயல்படுத்த இயலவில்லை. படிவங்கள் அச்சடிப்பதில் உள்ள தாமதம் காரணமாக செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது இதனை செயல்படுத்தும் முயற்சியில் ரயில்வே இறங்கியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024