நீட் எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர் போராட்டம்
Updated : 05 Sep 2017 21:50 IST
சென்னை
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
பெரும் கனவுடன் மருத்துவப் படிப்புக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரியலூர் மாணவி அனிதா கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நியாயம் வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இன்று காலை திடீரென லயோலா கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். நடிகை ரோகிணி, திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், கவுதமன் ஆகியோர் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.
நந்தனம் ஆடவர் கலைக் கல்லுரி மாணவர்கள், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மாநில கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள், தியாகராயா கலைக்கல்லூரி மாணவர்கள், மீனம்பாக்கம் ஏஎம் ஜெயின் கலைக் கல்லூரி மாணவர்கள், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் என சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் ஏஐஎஸ்எப் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் 13 பேர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்று, கைதாகினர்.ரேஸ்கோர்ஸில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த 15 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர். கோவில்பாளையம், ஈச்சனாரி, குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தனியார் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொள்ளாச்சியில் பாரதியார் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி மற்றும் என்ஜிஎம் கல்லூரி மாணவர்கள், தங்கள் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் இந்திய மாணவர் சங்கம், மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட 20 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ராஜிவ்காந்தி சதுக்கம் நான்குமுனை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலியில் மதிதா இந்துக் கல்லூரி, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி, தூய யோவான் கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்டத்தில் செய்துங்கநல்லூரிலுள்ள பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட சேலம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் | படம்: எஸ்.குருபிரசாத்
சேலத்தில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். ஓசூர் ரயில் நிலையத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் ஊரீசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகம் முன்பாக அமர்ந்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரி, திருச்சி அரசு சட்டக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து அந்தந்த கல்லூரி வாயில்கள் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள மருதன்கோன்விடுதி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையத்தில் தலித் மக்கள் முன்னணியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் திருப்பதியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கருடாத்திரி விரைவு ரயிலை மறித்து முழக்கமிட்டனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் திராவிடர் கழகம் சார்பில், மறியல் போராட்டம் நடந்தது. இது தொடர்பாக மாவட்ட செயலர் மணிகண்டன் உட்பட 12க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.இ
மதுரை செல்லூர் 60-அடி ரோட்டில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், நீட் தேர்வு ரத்து, அனிதா மரணம் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
திண்டிவனம் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 1500 பேர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த திண்டிவனம் போலீஸார்,
சேலத்தில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் தர்ணாவில் அமர்ந்தனர்.
கும்பகோணம் அரசு தன்னாட்சி கலைக் கல்லூரி மாணவர்கள் நேற்று காலை கல்லூரி வளாகத்துக்குள் மாணவர் பாலமுருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:
Post a Comment