Sunday, January 25, 2015

Why NTRUHS plans to conduct online PGMET 2015 ?

Latest News
You may be aware about the online entrance test for PG Medical Course (PGMET 2015) by Dr. NTR University of Health Sciences (NTRUHS). The authorities of Dr. NTR University of Health Sciences in Andhra Pradesh are planning to provide admission to post graduate courses in medicine (Medical PG) through online entrance test in the states of Andhra Pradesh and Telangana from 2015.

 The aim to introduce this new reform is to get away with the loopholes of pen and paper exam pattern which provides the scope for exam paper leakage and mass copying, causing troubles in the PG Medical admissions. The permission has been given to the university’s proposal to conduct online entrance test for PG Medical admissions in Andhra Pradesh and Telangana by the Andhra Pradesh Medical and Health department. “Learning from our experiences last year, we don’t take any chances this year. The government has given permission to conduct online test. With this we can put a check on the loopholes and bring in more transparency and accountability in the conduct of admission test,” said an official to Pharmabiz at the NTR Health University. 

 The demand for Post graduate Medical course is increasing rapidly in Andhra Pradesh and Telangana and the seats available are limited in both the states. There are about 2200 PG medical seats for which 18000 MBBS students from both the states are competing. Considering this as an advantage gangs and fraudsters mislead the students and indulge in various illegal methods.

 Last year, the PG Medical entrance exam in the state was cancelled by the AP government and re-exam was conducted as it witnessed a big controversy due to leakage of exam paper. The issue came to light when a few failed MBBS students got top ranks in the Medical PG test. With this trouble the admission to PG course was delayed in both the states.

1983 உலகக் கோப்பை: "நடக்கக் கூடாதது" நடந்துவிட்டது

இறுதி ஆட்டத்தில் ரிச்சர்ட்ஸை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்த கபில் தேவை பாராட்டும் ரசிகர்கள்

இனி இதுபோல நடக்கக் கூடாது என்று கண்டிப்பாகச் சொன்னார் கிளைவ் லாயிட்ஸ். ஆனால் அது மீண்டும் நடந்தது. ஒரு முறை அல்ல. இரு முறை. அதிலும் அந்த இரண்டாவது முறை நடந்ததை லாயிட்ஸால் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது.

1983-ல் இந்தியா உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்கி மூன்றாவது தொடரிலேயே இந்தியா இந்தச் சாதனையைப் புரிந்தது. அந்தச் சாதனைதான் உலகின் மிகச் சிறந்த அணியாக அன்று கருதப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேதனையாக மாறியது.

இரண்டு உலகக் கோப்பைப் போட்டிகளில் படுதோல்வி அடைந்த இந்தியாவை மூன்றாவது உலகக் கோப்பைப் போட்டியில் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்தியாவிலும் யாருக்கும் பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லை. சொல்லப்போனால் அணியினருக்கும் அந்த நம்பிக்கை இருந்திருக்க வாய்ப்பில்லை. தன்னம்பிக்கையோடு முன்னணியில் நின்று தலைமை ஏற்ற கபில்தேவும்கூட இதைக் கற்பனை செய்திருப்பார் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஆனால் அந்த அதிசயம் நடந்தது. உலகமே இந்தியாவை வியப்புடன் பார்த்தது. இந்திய கிரிக்கெட்டையும் உலக கிரிக்கெட்டையும் நிரந்தரமாக மாற்றிய திருப்பமாக அது அமைந்துவிட்டது.

அரங்கேறிய அதிசயங்கள்

லாயிட்ஸின் கண்டிப்பான வார்த்தைகளுக்கு வருவோம். உலகக் கோப்பை தொடங்குவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு இந்திய அணி, மே.இ. தீவுகளை எதிர்த்து ஒருநாள் போட்டித் தொடர் ஒன்றில் ஆடியது. 1983-ம் ஆண்டின் தொடக்கத்தில் மே.இ. தீவுகளில் நடந்த அந்தத் தொடரில் ஒரு போட்டியின் முடிவில்தான் லாயிட்ஸ் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.

மூன்று போட்டிகள் கொண்ட அந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் (மார்ச் 29) இந்தியா வெற்றிபெற்றது. மே.இ. தீவுகளுக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் இந்தியா பெற்ற முதல் வெற்றி அது. அந்தத் தோல்வி மே.இ. தீவுகள் அணிக்குக் கடும் அதிர்ச்சியையும் ரோஷத்தையும் ஏற்படுத்தியது. அதனால்தான் அணித் தலைவர் லாயிட்ஸ் “இனி ஒருபோதும் இப்படி நடக்கக் கூடாது” என்று தன் அணியினரை எச்சரித்தார்.

அப்படி ரோஷம் வருமளவுக்கு அது வலுவான அணியாக இருந்தது. கார்டன் கிரீனிட்ஜ், டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ், லாயிட்ஸ் போன்ற அபாரமான மட்டையாளர்கள்; மால்கம் மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங், ஆன்டி ராபர்ட்ஸ், ஜோயல் கார்னர் ஆகிய வேகப் பந்து வீச்சாளர்கள், லாரி கோம்ஸ் என்னும் ஆல் ரவுண்டர், மட்டையாட்டத்திலும் சிறந்து விளங்கிய ஜெஃப் துஜோன் என்னும் விக்கெட் காப்பாளர் ஆகியோரைக் கொண்ட அந்த அணி உலகின் எந்த அணிக்கும் சவாலாக விளங்கிய காலம் அது. அந்த அணியை இந்தியா அதன் மண்ணிலேயே வீழ்த்தினால் ரோஷம் வராதா?

ஆனால் தோற்கக் கூடாது என்னும் எச்சரிக்கை பலிக்கவில்லை. அதே ஆண்டில் மேலும் இரண்டு முறை அதே இந்திய அணியிடம் மே.இ. தீவுகள் அணி தோற்றது. அதில் ஒன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டியாக அமைந்துவிட்டது.

இது வேறு அணி

கடந்த இரு போட்டிகளைப் போல அல்லாமல் இந்த முறை இந்தியா ஒப்பீட்டளவில் வலிமையான அணியாக இருந்தது. கபில் தேவின் தலைமையில் புதிய வேகம் பெற்றிருந்தது.

முதல் உலகக் கோப்பைப் போட்டியில் டெஸ்ட் இன்னிங்ஸை ஆடிய சுனில் கவாஸ்கர் சுதாரித்துக்கொண்டு ஒரு நாள் போட்டிக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொண்டிருந்தார். கவாஸ்கருடன் இன்னிங்ஸைத் தொடங்கிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் டெஸ்ட் போட்டியையே ஒரு நாள் போட்டிபோல ஆடுபவர்.

இடை நிலையில் மொஹீந்தர் அமர்நாத், யாஷ்பால் ஷர்மா ஆகிய அருமையான மட்டையாளர்களுடன் சந்தீப் பாட்டீல் என்னும் அதிரடி இளம் ஆட்டக்காரரும் இருந்தார். இவர்களை அடுத்து அதிரடிக்குப் பேர்போன கபிலும் நேர்த்தியாக மட்டையைச் சுழற்றக்கூடிய விக்கெட் காப்பாளர் சையது கிர்மானியும் இருந்தார்கள்.

பந்து வீச்சைப் பொறுத்தவரை கபில் தேவ் உலகத் தரமான வீச்சாளர். பல்வீந்தர் சிங் சந்து, ரோஜர் பின்னி, மதன்லால் போன்றவர்கள் வேகத்தில் பின்தங்கினாலும் ஸ்விங் பௌலிங்கில் தேர்ந்தவர்கள். பந்தை வீசும் அளவிலும் வரிசையிலும் கட்டுக்கோப்புக் கொண்டவர்கள். இங்கிலாந்து ஆடுகளங்கள் இவர்களது பந்து வீச்சுக்கு உறுதுணையாக இருந்தன.

போதாக்குறைக்கு யாராலும் புரிந்துகொள்ள முடியாத விதத்தில் பந்து வீசும் அமர்நாத்தும் திறமையான சுழல் பந்து வீச்சாளர் ரவி சாஸ்திரியும் இருந்தார்கள். மேற்கிந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு இணையான பந்து வீச்சாக இல்லை என்றாலும் அலட்சியப்படுத்த முடியாத வலிமை கொண்டதாகவே இந்தியப் பந்து வீச்சு இருந்தது.

என்றாலும் உலகக் கோப்பையை வெல்லக்கூடிய அணி என்று யாரும் இதைச் சொல்லவில்லை. காரணம், மே.இ. தீவுகள் தவிர, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் பலம் பொருந்திய அணிகளாக இருந்தன. இந்த அணிகளைத் தாண்டி அரை இறுதியை எட்டுவதே கஷ்டம் என்னும் நிலை இருந்தது. இந்த எண்ணத்தைத் தகர்த்து கோப்பையைக் கைப்பற்றி உலகை வாயடைக்கவைத்தது இந்தியா.

இந்தச் சாதனைக்கு மொத்த அணியினரும் காரணம் என்றாலும் கபில் தேவுக்கு அந்தப் பெருமையைக் கூடுதலாக வழங்க வேண்டும். முன்னுதாரணமாக விளங்கும்தலைமைப் பண்பு, எத்தகைய நிலையிலும் மனம் தளராத உறுதி, பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்திய விதம், தடுப்பு வியூகத்தில் காட்டிய மதிநுட்பம், சிறப்பான பந்துவீச்சாலும் தேவைப்படும் சமயங்களில் மட்டையாலும் பங்களித்த விதம் ஆகியவற்றால் அந்த வெற்றியின் ஆணி வேர் என்று கபில் தேவைச் சொல்லலாம்.

கடந்து வந்த பாதை

ஒரு பிரிவில் இருந்த நான்கு அணிகளும் ஒவ்வொன்றையும் எதிர்த்து இரு முறை விளையாடும். இதில் எடுத்த எடுப்பில் இந்தியா உலக சாம்பியனுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இரண்டு அணிகளுக்கும் அதுதான் முதல் போட்டி. முதலில் ஆடிய இந்தியா யாஷ்பால் (89), பாட்டீல் (36), பின்னி (27) ஆகியோரின் மட்டையாட்டத்தால் 262 ரன்களைக் குவித்தது. ஆகச் சிறந்த வேகப் பந்து வீச்சை எதிர்த்து முதல் போட்டியிலேயே இந்தியா இத்தனை ரன்கள் அடித்தது.

ஆனால் மேற்கிந்திய அணியின் மட்டை வலுவுக்கு இது பிரமாதமான இலக்கு அல்ல. எனினும் இந்தியாவின் சிக்கனமான பந்து வீச்சும் பின்னி, சாஸ்திரியின் திறமையான வீச்சும் (இருவருக்கும் தலா 3 விக்கெட்) சேர்ந்து எதிரணியை 54.1 ஓவர்களில் 228 ரன்களுக்குச் சுருட்டின. எது நடக்கக் கூடாது என்று லாயிட்ஸ் சொன்னாரோ அது நடந்துவிட்டது.

இதைக் கெட்ட கனவாக நினைத்து மறக்கவே மேற்கிந்திய அணி நினைத்திருக்கும். அதற்கேற்ப அடுத்த ஐந்து போட்டிகளிலும் அது வென்றது. அடுத்து வந்த அரை இறுதியையும் வென்றது. ஆனால் இறுதிப் போட்டியில் மீண்டும் இந்தியாவிடம் தோற்றது. எது நடக்கக் கூடாது என்று லாயிட்ஸ் எச்சரித்தாரோ அது மீண்டும் ஒரு முறை நடந்தது. வரலாறு மாற்றி எழுதப்பட்டது.

5 ரூபாய்க்கு சென்னை சிறுவன் விற்பனை? விசாரணையை துவங்கியது மத்திய அரசு

Dinamalar 25.01.2015

சென்னை: 'க்விக்கர்.காம்' இணைய தளத்தில், 'சென்னை சிறுவன் விற்பனைக்கு...' என, விளம்பரம் வெளியிட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த விளம்பரத்தை வெளியிட அனுமதித்த, இணையதள நிர்வாகத்துக்கு, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

விளம்பரம்:

'சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த, ராகுல் என்ற சிறுவன், 5 ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளான். தொடர்புக்கு - ஹமீதியா காம்பளக்ஸ், திருவல்லிக்கேணி' என்ற வாசகங்கள் இடம் பெற்ற விளம்பரம், கடந்த டிசம்பரில், 'க்விக்கர்.காம்' இணையதளத்தில் வெளியானது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த, தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு கண்காணிப்பகம், தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையத்திடம் புகார் செய்தது. 'இப்புகார் மீது, விசாரணை நடத்த வேண்டும்; விசாரணை அறிக்கையை, 10 நாட்களுக்குள் தர வேண்டும்' என, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையை, தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம், ஜன., 14ம் தேதி கேட்டுக் கொண்டது. உடனே மத்திய அரசு, 'க்விக்கர்.காம்' இணையதள நிர்வாகத்துக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளதோடு, விளம்பரம் கொடுத்தவரை பிடிக்கும்படி, தமிழக போலீசுக்கும் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து, 'க்விக்கர்.காம்' இணையதள நிர்வாகத்தைச் சேர்ந்த, பெயர் வெளியிட விரும்பாதவர் கூறுகையில், 'தினமும் பல ஆயிரம் பேர், நாட்டின் பல்வேறு மூலைகளில் இருந்து, 'க்விக்கர்.காம்' இணையதளத்தில் விளம்பரம் செய்கின்றனர். இந்த விளம்பரங்களை, சரிபார்க்க போதிய ஆட்கள் இல்லை. விளம்பரம் செய்தவரின் விவரமும் இல்லை' என்றார்.

இணையதளத்தின் இந்த பதிலை, குழந்தை உரிமை ஆர்வலர்கள் ஏற்க மறுக்கின்றனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:

முகவரி:

ஊடகங்களில் விளம்பரம் செய்வோர், தங்கள் முகவரியை அளிக்க வேண்டும். எப்படிப்பட்ட விளம்பரங்களை வெளியிடலாம் என்ற, கட்டுப்பாடும், ஊடகங்களுக்கு உண்டு. இணையத்தில், ஒரு தகவலை வெளியிடுகிறோம் என்றால், அதை யார், எங்கிருந்து, எந்த உபகரணம் மூலம் வெளியிட்டார் என்பதை கண்டறிய முடியும். 'க்விக்கர்.காம்' இணையதளத்தில், சிறுவன் விற்பனைக்கு என்ற, விளம்பரத்தை வெளியிட்டவர் பற்றிய, விவரத்தை சேகரிப்பது கடினமான ஒன்று அல்ல. எனவே சம்பந்தப்பட்டவரை, பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

'க்விக்கர்.காம்' செய்வது என்ன?

பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிடும் தளமாக, 'க்விக்கர்.காம்' இணையம் உள்ளது. இதில், உறுப்பினராக சேர்ந்த பின், தாங்கள் விரும்பும் பொருட்களை, விற்பனை செய்ய, விளம்பரங்கள் செய்யலாம். விளம்பரம் செய்யும் பொருளின் புகைப்படம், அதன் பயன்பாடு, விலை ஆகியவற்றை பொருளின் சொந்தக்காரரே முடிவு செய்யலாம். இதன் மூலம், பயன்படுத்திய பொருட்களை, விற்பனை செய்வது எளிது என, 'க்விக்கர்.காம்' இணையதளமும், விளம்பரம் செய்து வருகிறது.

அரசு மருத்துவ கல்லூரி முதல்வர்கள் மாற்றம்

சென்னை: தமிழகத்தில், ஆறு, அரசு மருத்துவ கல்லூரி முதல்வர்கள், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நான்கு பேராசிரியர்களுக்கு முதல்வராக, பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:


பெயர் பழைய இடம் புதிய இடம்


மீனாட்சி சுந்தரம் ஸ்டான்லி திருவாரூர்


குணசேகரன் கீழ்ப்பாக்கம் திருவண்ணாமலை


நாராயணபாபு திருவண்ணாமலை கீழ்ப்பாக்கம்


சாந்தகுமாரி மதுரை தூத்துக்குடி


எட்வின் சோ தூத்துக்குடி கோவை


ரேவதி கோவை மதுரை


பதவி உயர்வு (பேராசிரியர்களுக்கு முதல்வர் பதவி)


ஜான் மோசஸ் கோவை செங்கல்பட்டு


வடிவேல் முருகன் மதுரை கன்னியாகுமரி


சங்கர நாராயணன் தஞ்சை தஞ்சை


நசீர் அகமது சையத் மதுரை தர்மபுரி

Court: Passports should have provision to name stepparent

Court: Passports should have provision to name stepparent


Holding that relationships constantly get redefined and legal issues become more complex as society evolves, the Madras high court has said passport applications must have suitable columns to indicate names of biological parents or adoptive parents or stepparents, or all of them, as the situation demands.Justice V Ramasubramanian, taking into account the predicament of divorced parents who remarry and then want to make suitable changes in passports of their children, on Friday said the ministry should come up with innovative steps such as additional columns for stepparents in passport applications.
He was issuing directions on a petition filed by B S Deepa, who wanted to change the initials of her 13-year-old daughter. She married M Irudayaraj in 1998, and they had a girl, I Kerenshruthi. They got divorced in 2003. The child remained with the mother, and her initial was changed to `D'.In 2013, Deepa married R Lakshmanan, gave the girl in adoption to him and wanted the initial to be changed to `L'.
The minor girl's passport application was kept pending due to the `discrepancy'. While the birthhospital records showed her biological father as Irudayaraj, the passport application said it Lakshmanan.Deepa filed the petition seeking a direction to passport authorities to accept the changed initial.
Justice Ramasubramanian said that while it was necessary to secure a passport for the minor girl at the earliest, it was also necessary to ensure the emergent needs did not destroy the future rights of the child. In this regard, he visualised three situations: One, even if passport authorities changed the name of the biological father, it will be in conflict with the entry found in the birth register; two, if there is yet another marriage, is it possible to change the name of parents every time there is a divorce followed by a fresh marriage; three, if the biological father leaves behind a large estate, will it be possible for the child to establish her identity and claim the right of inheritance, after changing the name in all records?
Holding that Deepa's act of giving her daughter in adoption to the stepfather as invalid, Justice Ramasubramanian pointed out that as per Section 9 of the Hindu Adoption and Maintenance Act, 1956 a mother could give her child in adoption only if the biological father is dead or renounced the world or ceased to be a Hindu.In this case none of these has happened. “The fundamental premise on which the Hindu adoption law proceeds is that the relationship between the biological parents and the children can never get severed, except in accordance with the provisions of this Act,“ he said.
The judge then asked passport authorities to issue a passport to Deepa's daughter indicating Lakshmanan as stepfather in the column for father's name, within four weeks.

பிளஸ்–2 தேர்ச்சி பெறாமல் சட்டம் படித்தவர் வக்கீலாக பணியாற்ற தடை ஐகோர்ட்டு உத்தரவு

கடந்த 1997–ம் ஆண்டு பாப்புதுரை என்பவர் 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். பின்னர் அவர் 1999–ம் ஆண்டு பிளஸ்–2 முடித்தார். ஆனால் ஒரு பாடத்தில் அவர் தோல்வி அடைந்தார். அதைத்தொடர்ந்து அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி மூலம் பி.ஏ. படித்தார். அதன் பிறகு 2010–ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தோல்வி அடைந்த பாடத்தை எழுதி, பிளஸ்–2 தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

அதைத்தொடர்ந்து நெல்லை சட்டக்கல்லூரியில் 3–ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்துவிட்டு, 2013–ம் ஆண்டு பார் கவுன்சிலில் வக்கீலாக தனது பெயரை பதிவு செய்ய பாப்புதுரை முயன்றார். ஆனால் அவரது கல்வி குறித்து அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகத்துக்கு புகார் அனுப்பப்பட்டது.

அதன் அடிப்படையில் பாப்புதுரையிடம் விளக்கம் கேட்டு பல்கலைக்கழகம் நோட்டீசு அனுப்பியது. இந்த நோட்டீசை ரத்து செய்யும்படி ஐகோர்ட்டில் பாப்புதுரை மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

10–ம் வகுப்பு, 12–ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்து விட்டு அதன் பிறகே சட்டப்படிப்பு படிக்க வேண்டும். ஆனால் இந்த கல்வி விதிகளை அவர் பின்பற்றவில்லை. எனவே அவர் வக்கீலாக தொழிலாற்ற முடியாது.

என்றாலும், அவர் படிப்பு வெறும் காகிதமாக ஆவதற்கு நான் விரும்பவில்லை. அவருக்கு தனியார் நிறுவனங்கள் வேலை வழங்குவதில் கோர்ட்டு குறுக்கே நிற்காது. ஆனால் வக்கீல் தொழிலாற்றும் உரிமையை அவர் கோர முடியாது. பல்கலைக்கழகத்தின் நோட்டீசும் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பழைய மீட்டர்கள் மாற்றப்படுகிறது புதிய டிஜிட்டல் மின் மீட்டர்கள் பொருத்த கட்டணம் கிடையாது தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு



பழைய மின்சார மீட்டர்களுக்கு பதிலாக புதிய டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தப்படுகிறது. இதற்காக யாரும் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

டிஜிட்டல் மின்மீட்டர்கள்

தமிழ்நாட்டில் பழைய தொழில்நுட்பத்துடன் இயங்கும் மின் மீட்டர்களை மாற்றி, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பிரிவு அலுவலகத்தில் உள்ள ஆய்வாளர்கள், மின் உதவியாளர்கள் ஆகியோர் இந்த புதிய டிஜிட்டல் மின் மீட்டர்களை எவ்வித கட்டணமும் இன்றி பொருத்த வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.

கட்டணம் தேவையில்லை

எனவே, புதிய டிஜிட்டல் மின் மீட்டர்கள் மாற்றுவதற்கு மின்சார வாரிய பணியாளர்களுக்கு பொதுமக்கள் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இதற்கு யாரேனும் பணம் கேட்டால் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆகவே, புதிய டிஜிட்டல் மின் மீட்டர்கள் பொருத்துவதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும், யாரேனும் பணம் கேட்டால் கொடுக்க வேண்டாம் எனவும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

NEWS TODAY 10.06.2026