Wednesday, June 29, 2016

எறும்புக்குக் கூட தொந்தரவு கொடுக்காத இளகிய மனம் படைத்த சுவாதி.. அந்தணர் முன்னேற்றக் கழகம் இரங்கல்

எறும்புக்குக் கூட தொந்தரவு கொடுக்காத இளகிய மனம் படைத்த சுவாதி.. அந்தணர் முன்னேற்றக் கழகம் இரங்கல் By: Sutha

 Published: Wednesday, June 29, 2016, 13:48 [IST]

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/amk-s-condoles-the-murder-swathy-257051.html

சென்னை: எறும்புக்குக் கூட தொந்தரவு கொடுக்காத இளகிய மனம் படைத்தவர் சுவாதி என்று அந்தணர் முன்னேற்றக் கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்தணர் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: இன்று அந்தணர் முன்னேற்ற கழக சார்பாக ,இறைவனடி சேர்ந்த செல்வி சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது சித்தப்பா கோவிந்தராஜன் மற்றும் குடும்ப உறவுகளை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க அந்தணர் முன்னேற்ற கழகத்தின் மாநில இளைஞரணி தலைவர் பாலாஜி ஷர்மா, மாநில ஆன்மீக அணி செயலாளர் இராமசந்திர குருக்கள், தென்சென்னை இளைஞரணி தலைவர் சண்முகம் குருக்கள், தென்சென்னை அமைப்பு செயலாளர் மணிகண்டன் குருக்கள், காஞ்சி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் ஐயர், மாநில ஊடகதுறை செயலாளர் வெங்கட்ராமன் ஐயர் ஆகியோர் சென்றனர். 1. ஒரு அப்பாவி தெய்வநம்பிக்கையுள்ள பிராமண பெண் ,அடையாளம் தெரியாத ஒரு கயவனால் அநியாயமாக கொலை செய்யப்பட்டிருக்கிறாள். 2. தினமும் காலையில் சுவாமியிடம் உலக மக்கள் அனைவரும் நலமாக வாழ பிரார்த்தனை செய்யும் பெண்,சம்பவம் நடந்த அந்த வெள்ளியன்று கூட கிளம்பும் சமயம் வீட்டு வாசலில் கூட்டமாக சென்ற பத்து எறும்பை கூட தொந்தரவு செய்யாத ஒரு இளகிய மனம் படைத்த பெண். 3. மறைந்த செல்வி சுவாதியின் மரணத்தை ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் பேசி அந்த குடும்பத்தின் நிம்மதியை தயவு செய்து கெடுத்து விடாதீர்கள். 4. முகநூல், வாட்ஸ்அப் மற்றும் ஊடகங்கள் அந்த பெண்ணின் மரணத்தை பற்றி தேவையில்லாத விமர்சனம் மூலம் கொச்சைப்படுத்தாதீர்கள். 5. அவரது நடத்தையை உண்மை விவரம் தெரியாமல் களங்கப்படுத்தாதீர்கள். 6. தினமும் சுந்தரகாண்டம் பாராயணம் செய்த பெண்ணுக்கு அவப்பெயரை உண்டாக்காதீர்கள். 7. காவல்துறை உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். 8. தமிழக அரசே எம்குலப் பெண்களுக்கு தேவையான பாதுகாப்புக்களை செய்து தர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். 9. ரயில்வே நிலையங்களில் சிசிடிவி பொறுத்த வேண்டும். இதுபோன்ற கொலைகள் செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்று மனவேதனையுடன் தெரிவித்து கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/amk-s-condoles-the-murder-swathy-257051.html

காசு மேல காசு வந்து ... 7வது ஊதிய குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! Read more at: http://tamil.oneindia.com/news/india/the-meeting-union-cabinet-on-today-257027.html

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழு பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு துறைகளில் பணியாற்றி வரும் கடைநிலை ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து 14.27 சதவீதம் வரை ஊதியத்தை உயர்த்தலாம் என கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் 7வது ஊதிய குழு பரிந்துரைத்திருந்தது. 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக குறைந்த அளவில் ஊதி யத்தை உயர்த்த 7வது ஊதிய குழு பரிந்துரை செய்ததால், அதை திருத்த அமைச்சரவை செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான செயலர்கள் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஊதிய குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து சமீபத்தில் தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் அடிப்படை யில் நிதியமைச்சகம் குறிப்பு தயாரித்து அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. ரூ.7 ஆயிரமாக உள்ள குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18 ஆயிரமாகவும், ரூ.90 ஆயிரமாக உள்ள அதிகபட்ச ஊதியத்தை ரூ.2.5 லட்சமாகவும் உயர்த்தலாம் என்ற 7-வது ஊதிய குழுவின் பரிந் துரையையும் அமைச்சரவை செயலர்கள் குழு திருத்தியுள்ளது. அதில் குறைந்தபட்சமாக ரூ.23,500 ஆகவும், அதிகபட்சமாக ரூ.3.25 லட்சமாகவும் ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழு பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஊதிய குழுவின் பரிந்துரைகள் கடந்த ஜனவரி 1ம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7வது ஊதியக் குழு பரிந்துரைகளால் ஊழியர்களுக்கு ​மொத்தமாக 23.6 சதவீத ஊதிய உயர்வு கிடைக்கும். அதாவது, அடிப்படை ஊதியத்தில் 14.27 சதவீதம் உயர்வு மற்றும் இதர படிகளை சேர்த்து மொத்தமாக 23.6 சதவீத ஊதிய உயர்வு கிடைக்கும். மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படுகிறது. இதற்கு முன் 6வது ஊதியக் கமிஷன் கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட்டது. 7வது சம்பள கமிஷனை அமல்படுத்த இந்தாண்டு பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதனால் ரூ.70 ஆயிரம் கோடி இடைக்கால ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/the-meeting-union-cabinet-on-today-257027.html

எத்தனை காலமும் ஏமாற்றலாம்!

எத்தனை காலமும் ஏமாற்றலாம்! Read more at: http://tamil.oneindia.com/columnists/subha-veerapandian/jayalalithaa-s-double-standard-rajiv-murder-convicts-257055.html



சுப வீரபாண்டியன்


"இராசீவ் காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் பேரறிவாளன் ஆகியோரை, ஏனைய குற்றவாளிகளான நளினி உள்ளிட்ட நால்வரோடு சேர்த்து விடுதலை செய்வதெனத் தமிழக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இம்முடிவு மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்படும். இன்னும் மூன்று நாள்களுக்குள் மத்திய அரசிடமிருந்து எந்த விடையும் வரவில்லையென்றால், தமிழக அரசே தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்யும்" என்று 2014 பிப்.19 அன்று சட்டமன்றத்திலேயே அறிவித்தார், 

அன்றும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா. இப்போது சில நாள்களுக்கு முன் (ஜூன் 25), சென்னை உயர்நீதிமன்றத்தில், விடுதலை கோரி நளினி அளித்திருந்த மனுவிற்குப் பதில் மனு (counter) அளித்த தமிழக அரசு, அவர் மனுவைத் தள்ளுபடி செய்யுமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. இப்போதும் தமிழகத்தின் முதலமைச்சர் அதே ஜெயலலிதாதான். பிறகு ஏன் இந்த மாற்றம்? மலையிலிருந்து மடுவில் குதித்திருப்பதன் நோக்கம் என்ன? 

இந்தப் 'பச்சை இரட்டை வேடத்தை' எவரும் கண்டிக்கவில்லையே என்? இவ்வாறு பல வினாக்கள் எழுகின்றன. விடுதலை செய்யப்போவதாக அவர் அறிவித்த நேரம், இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருந்த கால கட்டம். தமிழ்த் தேசியவாதிகள் அந்த அறிவிப்பில் மகிழ்ந்து அறிக்கை விட்டனர். 25 ஆண்டுகளாகத் தான் பிள்ளையைப் பிரிந்து வாடும் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மா, ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, நெகிழ்ந்துபோய் நன்றி சொன்னார். அந்த நிழற்படம் ஊடகங்களுக்குச் சென்றது. சுவரொட்டியாகவும் மாறி, அ.தி.மு.க.விற்கு ஆதரவைப் பெருக்கியது. ஆனால் விடுதலை மட்டும் வரவே இல்லை. என்ன காரணம்? மத்திய அரசுக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில், இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் (Cr.P.C) 435(1) ஆம் பிரிவின் கீழ் விடுதலை செய்யவுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். அந்தச் சட்டப் பிரிவில், "மத்திய அரசுடன் கலந்துரையாடி (in consultation with...)என்று ஒரு தொடர் உள்ளது. கலந்துரையாடல் என்றால் மத்திய அரசுக்கு அறிவித்தல்தான் என்றனர் 

வழக்கறிஞர்கள் சிலர். ஆனால் அதனை மத்திய அரசு ஏற்கவில்லை. உச்சநீதி மன்றத்திற்குச் சென்று, எங்களைக் கேட்காமல் விடுதலை செய்ய மாநில அரசுக்கு உரிமை இல்லை என்று மனு அளித்தது. அந்த மனுவை ஏற்று விசாரித்த உச்ச நீதி மன்றம், 2015 டிசம்பர் 2 அன்று, கலந்துரையாடல் என்றால் மத்திய அரசின் ஒப்புதல் பெறுவதுதான் (in consultation means getting concurrence) என்று தீர்ப்பளித்தனர். அதனையொட்டி ஊடகங்களில் நடைபெற்ற விவாதங்களில், நளினியின் வழக்குரைஞர் ராதாகிருஷ்ணன், தோழர் தியாகு போன்றவர்கள், சட்டப் பிரிவு 435 குறித்து நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை

. இந்திய அரசமைப்புச் சட்டம் 161ஆவது பிரிவின்படி தமிழக அரசு தானே அவர்களை விடுதலை செய்ய முடியும். அதனை மத்திய அரசோ, நீதி மன்றங்களோ தடுக்க முடியாது என்றனர். அந்தப் பிரிவு மாநில ஆளுநரின் அதிகாரம் (Governor's power) பற்றி பேசுகிறது. "பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது....(The Government of State shall have the power to grant pardons....)" என்றுதான் அந்த விதி தொடங்குகிறது. யாரும் தடுக்க முடியும் என்பது போன்ற குறிப்புகள் ஏதும் அதில் காணப்படவில்லை. அவர்கள் சொன்னது சரியாகத்தான் இருந்தது. ஆனால் அதற்கும் ஒருபடி மேலே போய், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், "அந்த அம்மாவுக்கு அந்தத் துணிச்சல் உண்டு. பாருங்கள் இன்னும் இரண்டு நாள்களில் அவர்களை அவர் விடுதலை செய்து விடுவார்" என்று பாராட்டுப் பத்திரம் படித்தார். அற்புதம் அம்மாவும், அந்த அம்மா தன் பிள்ளையை விடுதலை செய்து விடுவார் என்று நம்பினார். இந்தப் பாராட்டு, நம்பிக்கை எல்லாம் 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு, ஜெயலலிதாவுக்குப் பயன்பட்டதே அன்றி, பாதிக்கப் பட்டவர்களின் விடுதலைக்கு உதவவில்லை.

 அண்மையில் கூட, அவர்களை விடுதலை செய்யக் கோரி, ஒரு கோரிக்கைப் பேரணி நடைபெற்றது. வேலூரிலிருந்து தொடங்குவதாக இருந்த அந்தப் பேரணிக்கு அனுமதி மறுத்த தமிழக அரசு, சென்னையில் மட்டும் நடத்த அனுமதித்தது. பேரணி நடத்தக் கூட அனுமதியில்லையா என்று யாரும் பொங்கி எழவில்லை. "அம்மா" சொன்னதை அப்படியே கேட்டு நடந்தார்கள். சரி, வீரியத்தை விடக் காரியம்தான் முக்கியம், நல்லது நடக்கட்டும் என்று நாடு காத்திருந்தது. ஆனால் இறுதியில் எதுவுமே நடக்கவில்லை. இப்போது நளினியின் மனுவையும் தள்ளுபடி செய்யக் கோருகிறது தமிழக அரசு.

 இந்தச் சூழலிலும் அந்தத் "துணிச்சல்கார அம்மாவின்" பிம்பத்தை யாரும் குலைக்க விரும்பவில்லை. அவருடைய இரட்டை வேடத்தை கண்டித்து எந்த அறிக்கையும், எந்தத் தமிழ்த் தேசியத் தலைவரிடமிருந்தும் வரவில்லை. இதுவே தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றிருந்தால், நாடே அல்லோல கல்லோலப் பட்டிருக்கும்! மூன்று செய்திகளை உள்வாங்கி இந்தக் கட்டுரையை நாம் நிறைவு செய்யலாம்.

 1. உண்மையாகவே அவர்களின் விடுதலையில் ஜெயலலிதாவிற்கு விருப்பம் இருந்திருந்தால் அவர் இந்திய அரசமைப்புச் சட்டம் 161 ஆவது பிரிவைத்தான் பயன்படுத்தி இருப்பார். அப்படி அவர் செய்யவில்லை

. 2. இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் 435(1) பிரிவின் கீழ் விடுதலை செய்ய முடிவெடுத்திருப்பதாகக் கூறியது, மத்திய அரசின் மேல் பழி போட்டுத் தான் தப்பித்துக் கொள்ள மட்டுமே!

 3. கோரிக்கைப் பேரணி நடத்துவதற்கும், நீதிமன்றத்தில் மனு அளிப்பதற்கும் கூட ஒப்புதல் தர மறுக்கும் ஜெயலலிதா அவர்களுக்கு விடுதலை வழங்குவார் என்று இன்னும் சிலர் நம்புகின்றனர். சரி, இன்னும் எத்தனை காலம் வேண்டுமானாலும் அவர் நம்மை ஏமாற்றலாம்! http://subavee-blog.blogspot.com

சில நிமிடங்களிலேயே முடிந்த தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு


சென்னை : தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இதன் காரணமாக அதிகாலை முதலே ரயில்வே டிக்கெட் கவுன்டர்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ஆனால் டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் புக் ஆகி விட்டதால், அதிகாலை முதலே டிக்கெட் முன்பதிவு செய்ய காத்திருந்தோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் மிக விரைவாக ஒரு சில நிமிடங்களிலேயே டிக்கெட்கள் அனைத்தும் முன்பதிவாகி முடிந்தன.

இதனால் அக்டோபர் 29ம் தேதி தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு எப்படி செல்வது என பலரும் இப்போதே கலக்கம் அடைந்துள்ளனர். இத்தகைய டிக்கெட் தட்டுப்பாடு மற்றும் ரயில்களில் பண்டிகை கால கூட்ட நெரிசலை தடுக்க கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Time matters, so we prefer BE: Students

DECCAN CHRONICLE.
CHENNAI: Candidates who surrendered government quota MBBS seats on the first day of engineering counselling cited the long duration of medical course as one of the main reasons for their decision. Currently, MBBS duration is five-and-a-half years which includes four-and-a-half years of curriculum and one year of internship. In engineering, students have a bright chance of getting campus placement after four years if they get admission into top colleges.

S.I. Tamizhi of Erode got an MBBS seat in Government medical college at Omandurar Government Estate in Chennai. She was interested in engineering and management from the beginning. “In medical stream, it will take eight to 10 years to get settled. Some medical graduates I know are still studying at the age of 25 or 26,” she said. “My cut-off mark for engineering (197.75) is lower than I expected and I had doubt about getting admission in top colleges like Anna University. So, I participated in medical counselling,” she said.

After surrendering her MBBS seat, she selected computer science engineering in PSG College of Technology in Coimbatore. Another candidate P. Muraliprasath of Coimbatore also surrendered his MBBS seat and joined PSG College of Technology. He got MBBS seat in ESIC medical college in Coimbatore. His mother M. Radha said they were confused before taking the decision. Finally, she agreed to her son’s wish which is to become a software engineer.

M. Sowmia of Chennai surrendered her MBBS seat from ESIC medical college in Chennai. She selected Chemical Engineering in Alagappa College of Technology. Though her father Mukundan is a paediatrician at Korattur, she said her parents left it to her choice. Tamil Nadu Engineering Admission committee officials said that on the second day of counselling no student surrendered MBBS seat.

Tuesday, June 28, 2016

விஸ்வரூபம் எடுக்கும் சுவாதி படுகொலை.. அதிகாரிகளுடன் ஜெ. அவசர ஆலோசனை


சென்னை: தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, உள்துறை செயலர் அபூர்வா வர்மா, டிஜிபி அசோக்குமார் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வெள்ளிக்கிழமையன்று இளம்பெண் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. சென்னையில் மட்டும் ஜூன் மாதத்தில் 9 படுகொலைகள் நடந்துள்ளன. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாக பல்வேறு அரசியல் கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சேலத்தில் இளம்பெண் வினுப்பிரியா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆபாச புகைப்படம் வெளியானதாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சுவாதி கொலை, வினுப்பிரியா தற்கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொது இடங்களில் மக்களின் பாதுகாப்பு குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆந்திராவை போல் பொது மக்களின் பாதுகாப்புக்கு ஏன் தனிச் சட்டம் இயற்றக் கூடாது?.குற்றச் செயல்களை தடுக்க காவல்துறை அவசியம் என்று தெரிந்தும், காவலர் பணியிடங்களை ஏன் நிரப்பவில்லை என்பன உள்ளிட்ட 10 அம்சங்கள் நிறைந்த கடிதத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் எழுதியிருந்தார்.

இதனையடுத்து, இக்கடிதத்தில் உள்ள விவரங்களை தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இது குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திவருகின்றார். உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா மற்றும் டிஜிபி அசோக்குமார், காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரிப்பு ரவுடிகளை சுட்டுத்தள்ள உத்தரவு என்கவுன்டர் பட்டியல் தயாரிப்பு தீவிரம்


நெல்லை: தமிழகத்தில் கூலிப்படையினர் அட்டகாசம் அதிகரித்து வருவதைத்தொடர்ந்து ரவுடிகளை சுட்டுத்தள்ள போலீசுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐடி நிறுவன ஊழியர் சுவாதி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர சென்னையில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 3 வக்கீல்கள் உள்ளிட்ட 11 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலைகளில் கூலிப்படையினருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுபோல் தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பழைய குற்றவாளிகள், ரவுடிகளை கைது செய்து வருகின்றனர். சென்னையில் மட்டும் கடந்த 4 நாளில் 491 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் 53 ரவுடிகளும், சிவகங்கையில் 12, ராமநாதபுரத்தில் 35, திண்டுக்கல் 80, விருதுநகர் 31 ரவுடிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்பு உடையவர்கள்.

அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர்கள் மீது உள்ளன.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் டிஐஜி தினகரன் உத்தரவின்பேரில் எஸ்பிக்கள் விக்ரமன், அஸ்வின்கோட்னீஸ் ஆகியோர் தலைமையில் போலீசார் அதிரடி வேட்டை நடத்தி சுமார் 180 ரவுடிகளை கைது செய்துள்ளனர். இவர்கள் தவிர பழைய குற்றவாளிகள், கொடூரச் செயல்களில் ஈடுபட்டு ஜாமீனில் வந்தவர்கள் ஆகியோரை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பெரும்பாலான கொலைகள் கூலிப்படையினர் மூலமே நடக்கின்றன.

மேலும் தென் மாவட்டங்களில் இருந்து தான் சென்னை, கோவை, சேலம், திருச்சி போன்ற இடங்களுக்கு கூலிப்படையினர் சென்று கொலைகளை கச்சிதமாக முடிக்கின்றனர். சமீபத்தில் சுவாதி கொலையில் கொலையாளி தண்டவாளத்தில் வீசிச்சென்ற கத்தி கூட தென் மாவட்டத்தினர் பயன்படுத்தும் கத்தியாக இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

சுவாதி கொலை சம்பவத்திலும் ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தொடர் கொலை சம்பவங்களில் ஈடுபடும் கூலிப்படையினர் மற்றும் ரவுடிகளை சுட்டுத்தள்ள போலீசுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான பட்டியலையும் அவர்கள் ரகசியமாக தயாரித்து வருகின்றனர்.



இதனால் ரவுடிகள், வெளி மாநிலங்களுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்..

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...