Wednesday, June 29, 2016

சில நிமிடங்களிலேயே முடிந்த தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு


சென்னை : தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இதன் காரணமாக அதிகாலை முதலே ரயில்வே டிக்கெட் கவுன்டர்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ஆனால் டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் புக் ஆகி விட்டதால், அதிகாலை முதலே டிக்கெட் முன்பதிவு செய்ய காத்திருந்தோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் மிக விரைவாக ஒரு சில நிமிடங்களிலேயே டிக்கெட்கள் அனைத்தும் முன்பதிவாகி முடிந்தன.

இதனால் அக்டோபர் 29ம் தேதி தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு எப்படி செல்வது என பலரும் இப்போதே கலக்கம் அடைந்துள்ளனர். இத்தகைய டிக்கெட் தட்டுப்பாடு மற்றும் ரயில்களில் பண்டிகை கால கூட்ட நெரிசலை தடுக்க கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024