Monday, June 20, 2016

வீட்டை காலி செய்யும் பிரச்சினையில் போலீஸார் தலையிடக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு



வீட்டை காலி செய்வது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் இடையில் ஏற்படும் பிரச்சினையில் போலீஸார் தலையிடக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், குருவி குளத்தில் வீட்டின் உரிமையாளர் ஒருவர், தனது வீட்டில் வாடகைக் குக் குடியிருப்பவரை வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். அவர் காலி செய்ய மறுத்ததால் வீட்டின் உரிமையாளர் குருவிகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 2 மாதங்களில் வீட்டை காலி செய்வதாக வாடகைதாரர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வீட்டை காலி செய்யும் விவகாரம் சிவில் பிரச் சினை. இதில் தலையிடுவதற்கு போலீஸாருக்கு அதிகாரம் கிடை யாது. இதனால் வீட்டை காலி செய்யும் பிரச்சினையில் கட்டப் பஞ்சாயத்து நடத்தக் கூடாது என நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சங்கரன் கோவில் துணை காவல் கண் காணிப்பாளர், குருவிகுளம் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வாடகைதாரர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.விமலா பிறப்பித்த உத்தரவு: வீட்டின் உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் இடையி லான வீட்டை காலி செய்யும் விவகாரம் சிவில் பிரச்சினை. இதற்கு சம்பந்தப்பட்ட சிவில் நீதிமன்றத்தில்தான் பரிகாரம் பெற முடியும். இந்த பிரச்சி னையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக போலீஸார் நீதிமன் றங்களுக்கு இணையான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது.

வீட்டின் உரிமையாளரின் புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீஸார், 2 மாதங் களில் வீட்டை காலி செய்வ தாக ஒப்புக்கொள்ள வைத்துள்ள னர். சிவில் பிரச்சினையில் போலீஸாரின் இந்த நடவடிக் கையை ஏற்க முடியாது. எனவே மனுதாரர் பிரச்சினையில் போலீஸார் தலையிடக்கூடாது என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024