தமிழ் சினிமா உலகில் தற்போது அதிகம் பேசப்படும் படம் ‘கபாலி’. பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ பட ரிலீஸுக்காக ஒட்டுமொத்த திரையுலகமும் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். அதிலும் படத்தின் டீஸர், மற்றும் பாடல்கள் வெளியான பிறகு இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு இன்னும் எகிறியுள்ளது. இந்தச் சூழலில் ‘கபாலி’ படத்தைப் பற்றிய சில விவரங்களை படக்குழுவினரிடம் இருந்து சேகரித்தோம்.
கதை என்ன?
தன் வாழ்க்கையின் 25 ஆண்டுகளைச் சிறையில் கழித்துவிட்டு வெளியில் வரும் ஒரு மனிதன், மீண்டும் தன் வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக்கொள்கிறான் என்பதுதான் படத்தின் கதைக்களம் என்று கூறப்படுகிறது. பல வருடங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வரும் ரஜினி, ‘43 ஓ’ என்ற வில்லன் கும்பலைத் தனி நபராக எதிர்த்து நிற்கிறார். வில்லன் கோஷ்டியை அவர் எதிர்கொள்ளும் காட்சிகள், ரஜினி ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமையும் என்கிறது ‘கபாலி’ படக்குழு. ரஜினி ரசிகர்களுக்கு தீனி போடுவதற்காகவே சென்னை, மலேசியா, கோவா உள்ளிட்ட இடங்களில் சுமார் 110 நாட்களுக்கும் மேல் பார்த்துப் பார்த்து எடுத்து படத்தைச் செதுக்கியுள்ளனர்.
நீண்ட காலத்துக்குப் பிறகு ரஜினியின் நடிப்புக்கு முக்கியத் துவம் அளித்திருக்கும் படமாக 'கபாலி' இருக்கும் என்கிறது படக்குழு. அதே நேரத்தில் இதிலும் ரஜினியின் ஸ்டைல் இருக்கிறது. ஆனால், படமாக பார்க் கும்போது ஸ்டைலை விட ரஜினியின் நடிப்பு ரசிகர்களை அதிகம் கவரும் என்கிறார்கள் படக்குழுவினர்.
நட்சத்திர பட்டாளம்
இப்படத்தில் ரஜினிக்கு மனைவி யாகவும் தோட்டத் தொழிலாளியாகவும் குமுதவல்லி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ராதிகா ஆப்தே. யோகி என்னும் ரவுடிக் கூட்டத்தில் இருக்கும் பெண்ணாக தன்ஷிகாவும், ரஜினி நடத்தி வரும் பள்ளியின் ஆசிரியர் தமிழ்க்குமர னாக கலையரசனும், ஒரு ரவுடியின் மகனாக தினேஷும், ரஜினியின் நண்பராக அமீர் என்ற பாத்திரத்தில் ஜான்விஜய்யும் நடித்துள்ளனர். வில் லன்களாக கிஷோர், வின்ஸ்டன் சாவ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
‘கபாலி’யின் சாதனைகள்
ஒரு மாதத் துக்கு முன் வெளியான ‘கபாலி’ படத்தின் டீஸரை இதுவரை 2 கோடியே 23 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதன் மூலம் அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஆமிர்கான், சல்மான்கான் போன்ற இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களின் டீஸர் செய்த சாதனையை ‘கபாலி’ முறியடித்துள்ளது. டீஸருக்குக் கிடைத்திருக்கும் வர வேற்பால், இப்படத்தின் வியாபாரம் 200 கோடியைத் தாண்டும் என்கிறார்கள்.
கபாலி படத்தின் பாடல்களும் சாதனைகளைப் படைத்து வருகிறது. திரைப்பட பாடல் சிடிக்கள் இப்போது அதிகம் விற்பனையாவதில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலை யிலும் ‘கபாலி’ படத்தின் சிடிக்கள் 15 ஆயிரத்துக்கும் அதிகமாக விற் றிருக்கின்றன. ஆயிரக்கணக்கான வர்கள் அதை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து கேட்டுள்ளனர். இப்படி ரிலீ ஸாகும் முன்பே சாதனைகள் பலவற்றை செய்துள்ள கபாலி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகிழ்ச்சி!
This comment has been removed by a blog administrator.
ReplyDelete