நாடு முழுவதிலும் புதிய மருத்து வக் கல்லூரிகள் மற்றும் கூடுதல் மருத்துவ இடங்களுக்கு அனுமதி கேட்டு இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (எம்.சி.ஐ) இந்த ஆண்டு வந்த விண்ணப்பங்களில் 80 கோரிக்கைகள் நிராகரிக்கப் பட்டன.
நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளை கண்காணித்து வழிநடத்தவும், புதிய கல்லூரி களுக்கு அனுமதி அளிக்கவும் இந்திய மருத்துவ கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கவுன்சிலிடம் வரும் 2016-17-ம் கல்வியாண்டுக்கு கூடுதல் இடங்களுக்கு மருத்துவக் கல்லூரிகள் அனுமதி கேட்டி ருந்தன. இதையடுத்து அந்த மருத்துவக் கல்லூரிகளில் அடிப் படை கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் உள்ளனவா என எம்.சி.ஐ. குழு நேரில் சென்று ஆய்வு செய்தது. இதில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு 47 மருத்துவக் கல்லூரிகளின் கோரிக்கை நிரா கரிக்கப்பட்டுள்ளது. இத்தகவல், மத்திய சுகாதார அமைச்சக வட்டாரம் மூலமாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் மத்திய சுகாதார அமைச்சக அதி காரிகள் மேலும் கூறும்போது, “இந்த மருத்துவக் கல்லூரிகளில் ஏற்கெனவே அளிக்கப்பட்ட சேர்க்கை அனுமதியின்படி பேரா சிரியர்கள் எண்ணிக்கை பதிவேடு களில் மட்டுமே இருப்பது தெரிய வந்தது. இந்தப் பேராசிரியர்கள் தங்கள் பெயரை மட்டும் அக்கல்லூரிகளில் பதிவு செய்து விட்டு தனியாக மருத்துவமனை நடத்தியும் பணியாற்றியும் வரு கின்றனர். எனவே அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் பேராசிரியர்கள் விவரம் மற்றும் அவர்களின் தகுதிகளை கேட்டு எம்.சி.ஐ கடிதம் எழுதியுள்ளது. இதை ஆராய்ந்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்” என்றனர்.
புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கூடுதல் இடங்களுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்ட பட்டியலில் தமிழகம் முதலி டத்தில் உள்ளது. இதையடுத்து மேற்கு வங்கம், பிஹார் ஆகிய மாநிலங்கள் முறையே இரண் டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன. இவை தவிர ஆந்திரா, கர்நாடகா, தெலங் கானா, உ.பி., கேரளா ஆகிய மாநிலங்களின் விண்ணப் பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. அடிப்படை கட்டமைப்பு வசதி களை பூர்த்தி செய்த பின் 2017-18-ம் கல்வியாண்டில் மீண்டும் விண்ணப்பிக்குமாறு இக்கல்லூரி களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் 380 மருத்து வக் கல்லூரிகளில் சுமார் 50,000 மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். என்றாலும் இந்த எண்ணிக்கை போதாது என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கேட்டு அதிக விண்ணப்பங்கள் வந்திருந்தன. இவற்றில் 33 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட தாக தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment