Thursday, June 16, 2016

‘அப்பா நீங்க ஏன் அம்மாவுடன் சேரக்கூடாது’’: விவாகரத்து பெற்ற தம்பதியின் குழந்தை கேட்ட கேள்வியால் அதிர்ந்த நீதிமன்றம்

THE HINDU

மேற்குவங்கத்தில் விவகாரத்து பெற்ற தம்பதியின் 6 வயது குழந்தை நீதிமன்ற வளாகத்தில் எழுப்பிய கேள்வி சுற்றியிருந்த அனைவரது உள்ளத்தையும் கணக்க வைத்தது.

மேற்குவங்க மாநிலம் சிலிகுரியை சேர்ந்த தம்பதி கடந்த 2005-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கணவன் மீதுள்ள பாசத்தால் அவர் சார்ந்த இஸ்லாம் மதத்துக்கே மனைவியும் மாறினார். இவர்களுக்கு 2010-ல் பெண் குழந்தையும், 2012-ல் ஆண் குழந்தையும் பிறந்தது. அதே சமயம் திடீரென கணவன் மீதான சந்தேகத்தால் அவரிடம் இருந்து பிரிந்த மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டில் தஞ்சமடைந்தார். மீண்டும் மனைவியுடன் வாழ்வதற்காக கணவன் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

இதையடுத்து, குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டு, சிலிகுரி மாவட்ட நீதி மன்றத்தில் கணவர் வழக்கு தொடர்ந்தார். மனைவி தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் பெண் குழந்தை தந்தையிடமும், ஆண் குழந்தை தாயிடமும் வளர தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனைவி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷிதா மகாத்ரே மற்றும் ராகேஷ் திவாரி அடங்கிய அமர்வு, இரு குழந்தைகளும் தாயின் பாது காப்பில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டு, கோடைக் கால விடு முறைக்கு பின் வழக்கு விசார ணையை ஒத்திவைத்தது.

அதன் அடிப்படையில் நேற்று இவ்வழக்கு மீண்டும் விசார ணைக்கு வந்தது. அப்போது கணவர் சார்பில் ஆஜரான வழக்க றிஞர், ‘‘தாயிடம் வசிக்க பெண் குழந்தைக்கு பிடிக்கவில்லை. எனவே இரு குழந்தைகளையும் தந்தையிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என வாதாடினார். அதை ஏற்காத நீதிபதிகள் அடுத்த உத்தரவு வரும் வரை, இடைக்காலமாக தாயிடமே குழந்தைகள் வளர வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே வந்த 6 வயது பெண் குழந்தை தனது தந்தையிடம், ‘அப்பா நீங்க ஏன் அம்மா கூட சேர்ந்து இருக்கக் கூடாது? உங்களோட இருக்க எனக்கு பிடிக்கும்னு ஏன் நீதி மன்றத்துல சொல்லல?’ என அந்த பிஞ்சுக் குழந்தை கேள்வி எழுப்பி யது.

அருகில் இருந்த 4 வயது ஆண் குழந்தையும் அப்பாவுடன் செல்ல வேண்டும் என அழுதது. விவாகரத்து பெற்ற தம்பதியின் குழந்தைகள் பாசத்துக்காக ஏங்கி அழுத இந்த காட்சிகள் கொல்கத்தா நீதிமன்ற வளாகத்தில் இருந்த ஒவ்வொருவரையும் மிகுந்த வேதனைப்படுத்தியது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024