Wednesday, June 29, 2016

காசு மேல காசு வந்து ... 7வது ஊதிய குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! Read more at: http://tamil.oneindia.com/news/india/the-meeting-union-cabinet-on-today-257027.html

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழு பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு துறைகளில் பணியாற்றி வரும் கடைநிலை ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து 14.27 சதவீதம் வரை ஊதியத்தை உயர்த்தலாம் என கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் 7வது ஊதிய குழு பரிந்துரைத்திருந்தது. 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக குறைந்த அளவில் ஊதி யத்தை உயர்த்த 7வது ஊதிய குழு பரிந்துரை செய்ததால், அதை திருத்த அமைச்சரவை செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான செயலர்கள் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஊதிய குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து சமீபத்தில் தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் அடிப்படை யில் நிதியமைச்சகம் குறிப்பு தயாரித்து அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. ரூ.7 ஆயிரமாக உள்ள குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18 ஆயிரமாகவும், ரூ.90 ஆயிரமாக உள்ள அதிகபட்ச ஊதியத்தை ரூ.2.5 லட்சமாகவும் உயர்த்தலாம் என்ற 7-வது ஊதிய குழுவின் பரிந் துரையையும் அமைச்சரவை செயலர்கள் குழு திருத்தியுள்ளது. அதில் குறைந்தபட்சமாக ரூ.23,500 ஆகவும், அதிகபட்சமாக ரூ.3.25 லட்சமாகவும் ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழு பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஊதிய குழுவின் பரிந்துரைகள் கடந்த ஜனவரி 1ம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7வது ஊதியக் குழு பரிந்துரைகளால் ஊழியர்களுக்கு ​மொத்தமாக 23.6 சதவீத ஊதிய உயர்வு கிடைக்கும். அதாவது, அடிப்படை ஊதியத்தில் 14.27 சதவீதம் உயர்வு மற்றும் இதர படிகளை சேர்த்து மொத்தமாக 23.6 சதவீத ஊதிய உயர்வு கிடைக்கும். மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படுகிறது. இதற்கு முன் 6வது ஊதியக் கமிஷன் கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட்டது. 7வது சம்பள கமிஷனை அமல்படுத்த இந்தாண்டு பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதனால் ரூ.70 ஆயிரம் கோடி இடைக்கால ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/the-meeting-union-cabinet-on-today-257027.html

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024