Friday, June 10, 2016

அனைத்து செல்போன்களிலும் அவசரகால அழைப்பு பொத்தான் வசதி: நிறுவனங்களுக்கு தொலைத் தொடர்புத்துறை உத்தரவு

THE HINDU

செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் செல்போன்கள் அனைத்திலும் அவசரகால அழைப்பு பொத்தான் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என தொலைத் தொடர்புத் துறை (டிஓடி) வலியுறுத்தியுள்ளது.

அடுத்த ஆண்டு (2017) ஜனவரி முதல் தேதியிலிருந்து புதிதாக விற்பனைக்கு வரும் அனைத்து மொபைல் போன்களிலும் இத்தகைய வசதி கட்டாயமாக இருக்க வேண்டும் என முன்னர் வலியுறுத்தியிருந்தது.

தற்போது புதிதாக அனுப்பப் பட்டுள்ள சுற்றறிக்கையின்படி ஏற் கெனவே உள்ள பழைய போன் களிலும் இதற்கான சாஃப்ட்வேரை நிறுவுமாறு கேட்டுக் கொண்டுள் ளது. அவ்விதம் நிறுவித் தரு வதற்கு எவ்வித காலக் கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

அவசர கால பொத்தானாக 9 அல்லது 5-ஐ அழுத்தினால் அவசர கால அழைப்பாக 112 எண்ணுக்குத் (காவல்துறை) தொடர்பு கொள்ளும் வகையில் இதை உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே உள்ள போன் களில் அவசர கால பொத்தானை தீர்மானித்துவிட்டு, அதற்குரிய சாஃப்ட்வேரை அளிக்க வேண் டும். பிறகு எதிர்காலத்தில் வரும் போன்களில் அதே எண் அவசர கால பொத்தானாக பயன்படுத்தும் வகையில் தயாரிக்க வேண்டும் என்று டிஓடி குறிப்பிட்டுள்ளது.

2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து செல்போன் களையும் சேட்டிலைட்டுடன் இணைக்கப்பட்ட ஜிபிஎஸ் வசதி கொண்டதாக தயாரிக்கப்பட வேண்டும் என அரசு வலியுறுத்தி யுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024