Sunday, June 12, 2016

தளம் புதிது : எளிதாக புக்மார்க் செய்ய!



சைபர் சிம்மன்

இணையதளங்களை புக்மார்க் செய்வது இதைவிட எளிதாக இருக்க முடியாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு, சுலபமாக நாம் பார்க்கும் இணையதளங்களைக் குறித்து வைக்க வழி செய்கிறது சேவ்டு.இயோ (saved.io) இணையதளம்.

சேவ்டு.இயோ சேவையைப் பயன்படுத்தி புக்மார்க் செய்ய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இதில் உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ள வேண்டியது மட்டும்தான்.

அதன் பிறகு, இந்தத் தளத்துக்கு விஜயம் செய்யாமலேயே, தேவையான இணையதளங்களை புக்மார்க் செய்துகொள்ளலாம்.

இதற்காக, எதையும் டவுன்லோடு செய்துகொள்ளும் தேவையும் கிடையாது. எந்த தளத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோமோ அதன் இணைய முகவரியின் முடிவில் சேவ்டு.

இயோ என டைப் செய்தால் போதும், அந்தத் தளம் சேமிக்கப்பட்டுவிடும். இப்படிப் பயனுள்ள தளங்களை எல்லாம் புக்மார்க் செய்து, தேவைப்படும்போது பார்த்துக்கொள்ளலாம்.

இணைய முகவரிகளை வகைப்படுத்த விரும்பினால், அதற்கான தலைப்பைக் குறிப்பிட்டு டைப் செய்தால் போதுமானது. ஒவ்வொரு இணைப்புக்கும் ஒரு வரிக் குறிப்பை எழுதலாம்.

மற்றபடி வேறு எந்த உபவசதியும் இல்லாமல் எளிமையாக இருக்கிறது. விரைவாகச் செயல்படும் சேவையாக இது இருக்கும் என்று சேவ்டு. இயோ சேவையை உருவாக்கிய ஆந்தோனி பியண்ட் குறிப்பிடுகிறார்.

இணையதள முகவரி: http://saved.io

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024