Monday, March 27, 2017

Headless body of retired university professor found
Trichy 
 
TIMES NEWS NETWORK 
 


The headless body of a retired professor of Madurai Kamraj University was found on the bund of a lake in Sittilarai village near Musiri in Trichy district on Saturday.
  Musiri police identified the body with the help of a driving licence recovered from the corpse.
The deceased was identified as Krishnan, 61, from Madurai city . His son Om Prakash Venkatesh, 31, who reached the spot after receiving information from police, confirmed that it was the body of his father.
Passersby found the headless body on Saturday afternoon and informed Musiri police. The abdomen had been cut open and the intestine had been removed .

Police searched for the severed head in nearby areas, but their effort went in vain.However, they recovered Krishnan's car with a puncture on one of the tyres, on the roadside at Kaikatti, about a kilometre away from the spot where the body was found. Police recovered a dhoti with blood stains on it.They suspect that the murderers abandoned the car after the puncture.

  Police also found documents in the car and matched them with the driving licence to verify the identity of the body .
Further investigation has revealed that Krishnan, who was residing with his son, left home on March 24. Madurai police were also searching for him following a complaint lodged by the family.
The body of Krishnan was sent to Mahatma Gandhi Memorial Government Hospital (MGMGH). Police have launched an investigation to ascertain the motive behind the murder.
கட்டாயம்!
மொபைல் போன் 'சிம் கார்டு' பெற ஆதார் எண்...
பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு அதிரடி
 

spaceplay / pause
qunload | stop
ffullscreen
shift + slower / faster
volume
mmute
seek
 . seek to previous
126 seek to 10%, 20% … 60%
புதுடில்லி:மொபைல் போன் சேவைகளை பயன்படுத்தி வரும் அனைவரை பற்றிய தகவல்களையும், ஆதார் எண் அடிப்படையில் சரிபார்க்கும்படி, தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள் ளது. இதனால், மொபைல் போன் சிம் கார்டு வாங்குவதற்கு, இனி, ஆதார் எண் கட்டாய மாகிறது. மேலும், ஏற்கனவே, சிம் கார்டு வாங்கியவர்களிடமும், ஆதார் எண் பெறும் நடவடிக்கையும் துவங்க உள்ளது.


நாடு முழுவதும், நுாறு கோடி பேருக்கும் அதிகமானோர், மொபைல் போன் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும், அடையாள அட்டை, இருப்பிட சான்று அளித்து, சிம் கார்டு பெற்று, மொபைல் போன் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அனைத்து தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, மத்திய தொலைத் தொடர்புத் துறை சமீபத்தில் கடிதம் அனுப்பி யுள்ளது.

அதில், 'அனைத்து, பிரி பெய்டு, போஸ்ட் பெய்டு, மொபைல் போன் சந்தாதாரர் களின் அடையாளம் மற்றும் இருப்பிடம் தொடர்பான தகவல்களை, ஆதார் அட்டை அடிப்படையில் மீண்டும் சரிபார்க்க வேண்டும்' எனக் கூறப்பட்டு
உள்ளது. பத்திரிகை மற்றும் ஊடகங்களில் விளம்பரங் கள் அளித்தும், எஸ்.எம்.எஸ்., அனுப்பியும், ஆதார் அட்டை மூலம், தகவல்கள் மீண்டும் சரிபார்க்கப்பட உள்ளது தொடர்பாக, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, தொலைபேசி சேவை நிறுவனங்கள் தெரியப்படுத்த வேண்டுமென, அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களின் இணையதளங்களிலும், இது குறித்த தகவல் கள் இடம்பெற வேண்டும் என, தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து, சி.ஓ.ஏ.ஐ., எனப்படும், மொபைல் போன் சேவை நிறுவனங்கள் சங்க இயக்குனர் ராஜன் மேத்யூஸ் கூறியதாவது:

ஆதார் அட்டை அடிப்படையில்சந்தாதாரர்களின் தகவல்கள் சரிபார்க்கப்பட வேண்டும் என்ற நடவடிக்கையை, எங்கள் சங்கம் வரவேற்கிறது.

அதேசமயம், இந்த நடவடிக்கையை அமல்படுத்த, 1,000 கோடி ரூபாய் செலவாகும். அதை, மொபைல் சேவை நிறுவனங்கள் ஏற்க வேண்டும் என்பதை, கருத்தில் கொள்ள வேண்டும். ஆதார் அடிப்படை யில் தகவல்களை மீண்டும் சரிபார்ப்ப தால், போலி சந்தாதாரர்கள் நீக்கப்படுவர்.

சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள, ஒரு ஆண்டு அவகாசத் திற்குள், நாடு முழுவதும், ஆதார் அடிப்படையில் சந்தாதாரர்களின் தகவல்கள் சரிபார்க்கும் பணி களை முடித்து விடுவோம். அதற்குள் முடியாத பட்சத்தில், தொலைபேசித் துறையிடம் கூடுதல் அவகாசம் கேட்போம். இவ்வாறு அவர் கூறினார்.

பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தோர், போலி யான ஆவணங்களை கொடுத்து, சிம் கார்டு வாங்கி, தொலைத் தொடர்பு சேவையை பெறுகின் றனர். பின், அந்த போன் மூலம், சட்டவிரோத நடவடிக்கை களுக்கு, தகவல்களை பரிமாறி கொள்கின்றனர். இதுபோன்ற மோசடிகளை தவிர்க்கவே, பாதுகாப்பு காரணம் கருதி, ஆதார் எண், கட்டாயமாக்கப்பட   உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


ஓட்டுனர் உரிமத்துக்கும்இனி ஆதார் வேண்டும்

கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டுவதற்கு, ஓட்டுனர் உரிமம் பெறப்பட வேண்டும். ஒரு வரே, முறைகேடாக, பல ஓட்டுனர் உரிமங் களை பெறுவதும் நடக்கிறது. ஏதாவது ஒரு காரணத்தால், ஒரு ஓட்டுனர் உரிமம் முடக்கப் பட்டால்,மற்றொரு உரிம அட்டையை பயன் படுத்தி, அந்த நபர், தொடர்ந்து வாகனங்களை ஓட்டுவதற்காக,இதுபோன்ற சட்ட மீறல்கள் நிகழ்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டுனர் உரிமங்களால், போலி அடையாளங்கள் உருவாக்கப்படும் பிரச்னையும் எழுகிறது.

இத்தகைய முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், ஓட்டுனர் உரிமம் பெற, ஆதார் அடையாள அட்டையை கட்டாயம் ஆக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இது தொடர்பாக, அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. ஒரே பெயரில் பல ஓட்டுனர் உரிமங்கள் பெறப்படு வதை தடுக்கும்படி, அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கான ஓட்டுனர் உரிமங்களுக்கு, ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கும் திட்டம், அக்டோபர் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, நாடு முழுவதும் உள்ள, பிராந்திய போக்குவரத்து அலுவலகங்களில், ஓட்டுனர் உரிமங்கள் பெற்றவர்கள் தொடர்பான அனைத்து தகவல் களும், என்.ஐ.சி., எனப்படும், தேசிய தகவல் மைய இணைய தளத்தில் பதிவேற்றப் பட்டுள்ளன. ஓட்டுனர் உரிமம் கோரி விண்ணப்பிக்கும் ஒருவர், ஏற்கனவே, உரிமம் பெற்றுள்ளாரா என்பதை, என்.ஐ.சி., இணைய தளம் மூலம், பிராந்திய போக்குவரத்து அலுவலர் தெரிந்து கொள்ள முடியும்.
 திருச்சி - தஞ்சை இரட்டை பாதை : 90 சதவீத பணிகள் நிறைவு

திருச்சி: திருச்சி - தஞ்சை இரட்டை ரயில் பாதை பணிகள், 90 சதவீதம் முடிந்து விட்டதால், இன்னும் சில மாதங்களில் ரயில்கள் இயக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. புகழ் பெற்ற ஆன்மிக தலங்கள் அதிகம் இருப்பதால், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே, 'திருச்சியிலிருந்து தஞ்சை வரை, இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்தது.


ரூ.190 கோடி : கடந்த, 2011ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், திருச்சி - தஞ்சை இரட்டை ரயில் பாதை அமைக்க, முதல் கட்டமாக, 190 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. திட்டத்தின் மொத்த மதிப்பு, 450 கோடி ரூபாய்.திருச்சி, பொன்மலையில் துவங்கும் இந்த பாதை, தஞ்சை ரயில் நிலையத்தில் முடியும் வகையில், 49 கி.மீ.,க்கு திட்டமிடப்பட்டது. நில ஆர்ஜித பணிகள் முடிந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன், ரயில் பாதை அமைக்கும் பணிகள் துவங்கின. இந்த வழித்தடத்தில், 13 பெரிய, 90 சிறிய பாலங்கள், மூன்று இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டு, பணிகள் நடந்தன.
விரிவாக்கம் :

 மேலும், இரட்டை ரயில் பாதையை கையாளும் வகையில், பொன்மலை, பூதலுார், சோளகம்பட்டி உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களையும் விரிவாக்கம் செய்யும் பணியும் நடந்தது. இப்படி, இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக நடந்த இரட்டை ரயில் பாதை பணி, தற்போது, 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. ஏற்கனவே, ரயில்வே நிர்வாகம், '2017 ஏப்ரலில், இரண்டாவது வழித்தடத்தில் ரயில் இயக்கப்படும்' என அறிவித்திருந்தது. ஆனால், 'அதற்குள் பணிகள் முடிய வாய்ப்பில்லை என்பதால், இன்னும், மூன்று மாதங்களில், பணிகள் முழுமையாக நிறைவுற்று, ஜூலையில், இரட்டை பாதை பயன்பாட்டுக்கு வரும்' என, ரயில்வே துறையினர் தெரிவிக்கின்றனர்.அதன்பின், திருச்சியிலிருந்து தஞ்சைக்கு, எக்ஸ்பிரஸ் ரயிலில், 30 நிமிடங்களிலும், பாசஞ்சர் ரயிலில், 50 நிமிடங்களிலும் செல்ல முடியும்.
 நீதிமன்ற உத்தரவுகள் தெளிவாக இருக்க வேண்டும் : ஐகோர்ட் அதிரடி

சென்னை: 'பரிச்சயம் இல்லாத வார்த்தை சுருக்கங்களை, நீதிமன்ற உத்தரவில் பயன்படுத்த வேண்டாம்; சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில், உத்தரவுகள் தெளிவாக இருக்க வேண்டும்' என, கீழமை நீதிமன்றங்களை, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில், 2014ல் ஆஜர்படுத்தப்பட்டனர். அந்த வழக்கில், தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜர்படுத்தப்பட்டும், காவல் நீட்டிப்பு குறித்து முறையான உத்தரவு பிறப்பிக்காததால், சட்டவிரோத காவலில் அவர்கள் இருந்தனர். எனவே, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் நாகமுத்து, சத்தியநாராயணன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பார்த்தோம். அதில், வார்த்தை சுருக்கம் காணப்படுகிறது. அதை புரிந்து கொள்ள, எங்களுக்கு சிரமம் ஏற்பட்டது. மூத்த வழக்கறிஞர் முத்துகுமாரசாமி, வார்த்தை சுருக்கங்களை, எங்களுக்கு விளக்கினார்.இப்படி பரிச்சயமில்லாத வார்த்தைகளை பயன்படுத்துவது, கண்டிக்கத்தக்கது. நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை, சாதாரண மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிய வேண்டும்.

 இனிமேல், இதுபோன்ற வார்த்தை சுருக்கத்தை, தமிழகம் மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பயன்படுத்த மாட்டார்கள் என, எதிர்பார்க்கிறோம். உத்தரவுகள் தெளிவாக, பரிச்சயமான வார்த்தைகளை கொண்டிருக்க வேண்டும்.இந்த வழக்கைப் பொறுத்தவரை, சிறப்பு நீதிமன்ற நீதிபதி, எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. வாரன்ட் உத்தரவில், குறிப்புகளை எழுதி உள்ளார். இது, சட்டப்படியானது அல்ல. எனவே, காவல் நீட்டிப்பு உத்தரவு, முறையாக இல்லை என்றாலும், அதை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட காவல் நீட்டிப்பு உத்தரவுகள் முறையானது என்பதால், சட்டவிரோத காவல் என, கூற முடியாது.இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது.

 ஒரே பதவிக்கு 2 அதிகாரிகள் : பெரம்பலூரில் தான் இந்த கூத்து!

பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள, மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பதவியை இரண்டு அதிகாரிகள் பார்த்து வருவதால், குழப்பம் நிலவுகிறது.பெரம்பலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில், இணை இயக்குனராக பணியாற்றி வருபவர் செல்வராஜன். இவர், 2016 நவ., 2ல் கடலுார் மாவட்டத்திலிருந்து, பதவி உயர்வில் இங்கு வந்தார்.இவரை, பிப்., 17ல் சென்னைக்கு மாற்றம் செய்தனர். இதை எதிர்த்து, செல்வராஜன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, மாற்றல் உத்தரவுக்கு தடை பெற்றார். இதன்பின், 14ம் தேதி செல்வராஜன் மீண்டும் பணிக்கு திரும்பினார்.

 ஆனால், இவருக்கு பணியிடம் வழங்கப்படவில்லை.தினமும் காலை அலுவலகத்துக்கு வரும் இவர், மாலை வரை, 'சும்மா' இருந்துவிட்டு வீட்டுக்கு திரும்புகிறார். இணை இயக்குனர் இருக்கையில் அமரும் இவர், அந்த பணிகளை பார்ப்பதில்லை. காரணம், கண்காணிப்பாளர் சசிகலாவே, இணை இயக்குனராக கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.ஒரே பதவியில், இரு அதிகாரிகள் இருப்பதால், கீழ்மட்ட ஊழியர்கள், கோப்புகளில் யாரிடம் கையெழுத்து பெறுவது என்ற குழப்பத்தில் உள்ளனர்.செல்வராஜன் கூறியதாவது:இங்கு வந்த, இரண்டரை மாசத்துக்குள் என்னை மாற்றினர். அதனால், கோர்ட்டில், 'ரிட்' போட்டு, தடை வாங்கினேன். இயக்குனர் உத்தரவுப்படி, கண்காணிப்பாளர் சசிகலா, இணை இயக்குனர் பொறுப்பு வகிக்கிறார்.நான் தினமும் அலுவலகம் வருவேன்; மற்ற வேலைகளை பார்ப்பேன். ஆபீஸ் சம்பந்தப்பட்ட வேலைகளை கொடுக்க மாட்டேன் என்கின்றனர். என் விஷயத்தில், 'டிரான்ஸ்பர் ஆர்டர்' போட்ட இயக்குனர் தான் முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுடில்லி : செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, பதில் அளிக்க, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது.










 செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் பதில் அளிக்க ரிசர்வ் வங்கி மறுப்பு

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு, நவம்பரில், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை அறிவித்தார். அப்போது, செல்லாத ரூபாய் நோட்டுகளை, 2017, மார்ச் 31 வரை, வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

ஆனால், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மட்டுமே, செல்லாத ரூபாய் நோட்டுகளை, மார்ச் 31 வரை, வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம் என, பின், அறிவிக்கப்பட்டது. செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஆர்.டி.ஐ., கீழ், ரிசர்வ் வங்கிக்கு, சமூக ஆர்வலர் ஒருவர் அனுப்பிய கேள்வியில், 'மார்ச் 31 வரை, செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என, பிரதமர் முதலில் அறிவித்தார். இதன்பின், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மட்டுமே, மாற்றிக் கொள்ளலாம் என மாற்றப்பட்டது ஏன்' என, கேட்கப்பட்டிருந்தது.

ஆனால், இதற்கு பதில் அளிக்க, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது. 'செல்லாத ரூபாய் நோட்டு குறித்த தகவல்களை வெளியிட்டால், நாட்டின் பொருளாதார நலனுக்கு விரோதமாக அமைந்துவிடும்; அதனால், தகவல்களை வெளியிட முடியாது' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரியவகை வெளிநாட்டு கிளி மாயம் போலீசில் புகார் 
 
வண்டலூர்,

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த 10–ந் தேதி ஊழியர்கள் கூண்டில் இருக்கும் பறவைகளுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தனியாக கூண்டில் வைக்கப்பட்டு இருந்த வெளிநாட்டை சேர்ந்த ‘மொலுகான்’ கொண்டைக்கிளி மாயமானது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர் பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் தந்தார். உடனே விரைந்து வந்த பூங்கா அதிகாரிகள் ஊழியர்கள் மூலம் கடந்த 16 நாட்களாக பூங்காவில் தொடர்ந்து தேடிப்பார்த்தனர். ஆனால் கிளி கிடைக்கவில்லை,

இதனையடுத்து ஓட்டேரி போலீசில் வண்டலூர் உயிரியல் பூங்கா வனச்சரக அலுவலர் பிரசாத், வெளிநாட்டைச் சேர்ந்த அரியவகை கிளியை காணவில்லை என்று நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிளியை தேடி வருகின்றனர். இரவு நேரத்தில் கூண்டை உடைத்து மர்ம நபர்கள் கிளியை திருடிச்சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NEWS TODAY 25.12.2025