Thursday, November 23, 2017

Anna University debars 1,070 teachers for faulty evaluation

Inquiry finds alarming variations in awarding marks

Anna University has barred as many as 1,070 teachers from taking up examination-related activities for up to three years. These include activities such as setting question papers and evaluation.
The university conducted an inquiry based on the central valuation done by examiners during April/May 2017 examinations. It has been receiving flak as, increasingly, students who apply for revaluation had also received better grades.

A student pays Rs. 300 for a photocopy and Rs. 400 for revaluation per script. The student can also challenge the valuation for Rs. 3,000 per script.

Inquiry in three cities

The university conducted an inquiry on September 27 and October 21 in three cities — Chennai, Tiruchi and Coimbatore.

Sources in the university said the teachers whose evaluations did not corroborate with the revaluation results were called and asked to revaluate the papers
.
At the end of the enquiry, of the 1,169 faculty members, only 99 were spared punishment. The most number of “illogical evaluations” were committed by faculty from Chennai region (680). In Coimbatore region, only two of the 121 faculty escaped punishment.

The inquiry report said there were “alarming variations in awarding marks in central valuation.” The committee had given them an opportunity to “substantiate your reasons for awarding illogical marks in the valuation, you have miserably failed to do so.”

The report stated, “The committee found you have not evaluated the answer scripts according to the instructions and guidelines given to you and failed to carry over the duties and responsibilties assigned to you as an examiner.”

“We analysed the result and listed answer scripts wherever there was a jump by two grades after revaluation. Based on the jump in marks, we called the teachers for enquiry,” said Higher Education Secretary and the university’s convenor committee chairman Sunil Paliwal.

“Anna University makes money from revaluations. We wanted to correct the system,” he added.
Complaints ranged from faculty skipping the first day of evaluation devoted to instruction to colleges sending junior faculty in their place. The evaluators contended that they did not have access to answer keys.

New rules

From now on, 10 evaluators will report to one senior professor (chairman) instead of 20. Earlier, only the chairman had the answer key but henceforth each evaluator would have an answer key.
The University proposes to include evaluation as a criterion for affiliation as University officials complaind that evaluation process was affected as affiliated colleges sent junior teachers instead of senior faculty for evaluation.

“Affiliation will be based on evaluation performance: how well the colleges cooperate by sending senior faculty; ensuring that faculty attend the orientation programme prior to evaluation; and if the faculty do the evaluation properly,” Mr. Paliwal said.

The university will also include the clause that teachers who violate the evaluation rules would be debarred. Their names would also be uploaded on the University website, the official said.
“This time we have not done so as in the appointment orders for evaluation we did not include the clause,” he said.

We analysed and listed answer scripts wherever there was a jump by two grades
Sunil Paliwal,
Higher Education Secretary
நீதிபதியிடம் மன்னிப்பு கேட்ட ஆசிரியர் சங்க நிர்வாகிகள்

Added : நவ 22, 2017 23:46

சென்னை: உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததற்காக, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், நேற்று, நீதிமன்றத்தில் ஆஜராகி, மன்னிப்பு கேட்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து, நீதிபதி கிருபாகரன் கண்டித்தார். இதையடுத்து, சமூக வலைதளங்களில், நீதிபதியை விமர்சித்து, செய்திகள் வந்தன. ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் சிலரும், நீதிபதியை விமர்சித்தனர். 

இவ்வாறு விமர்சிப்பவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க கோரி, வழக்கறிஞர்கள், செந்தில்குமார், சூரியபிரகாசம் உள்ளிட்டோர் முறையிட்டனர்.

இந்த வழக்கு, சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தரப்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, நீதிமன்றத்தில், நிர்வாகிகள் ஆஜராகும்படி, நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நேற்று சங்க முன்னாள் தலைவர், மாயவன், தலைவர், பக்தவத்சலம், பொதுச்செயலர், கோவிந்தன், முன்னாள் பொருளாளர், சொர்ணலதா ஆகியோர் ஆஜராகி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர். 'நீதிமன்றத்தை அவதுாறு செய்யும் நோக்கம் இல்லை' எனவும், அவர்கள் தெரிவித்தனர்.


தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, கூடுதல் அட்வகேட் - ஜெனரல், வெங்கட்ரமணி தெரிவித்தார். 'தற்போதைய நிலையில், இந்த வழக்கை முடிக்கக் கூடாது' என, வழக்கறிஞர், செந்தில்குமார் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, 'அவசரப்பட்டு இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க விரும்பவில்லை' எனக் கூறிய, நீதிபதி கிருபாகரன், விசாரணையை, டிச., ௬க்கு தள்ளிவைத்தார்.
***
ஆசிரியர் காலியிடம் நிரப்ப அரசு திடீர் தடை

Added : நவ 22, 2017 22:04

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், 37 ஆயிரம் அரசு பள்ளிகள், 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 63 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு பள்ளி களிலும், 37 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு உதவி பள்ளிகளிலும் பணியாற்றுகின்றனர். மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 30 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். 

ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், மாணவர், ஆசிரியர்கள் விகிதத்தில், அதிக முரண்பாடுகள் உள்ளன. மாணவர்களை விட ஆசிரியர்களின் விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது.


இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை ஆய்வு நடத்தியுள்ளது. அதன்படி, அரசு உதவி பெறும் பள்ளிகளில், போதிய மாணவர்கள் இன்றி, ஆசிரியர்களை மட்டும் நியமித்து, தில்லுமுல்லு நடப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், 3,500 ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடக்க கல்வி இயக்குனரக அனுமதியின்றி, மாவட்ட கல்வி அதிகாரிகள், புதிய நியமனங்கள் செய்வதோ, இடமாறுதல் வழங்குவதோ கூடாது என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -

சிவகங்கை அருகே ஊரை காலி செய்யும் மக்கள் : 20 ஆண்டு கோரிக்கை நிறைவேறவில்லை

Added : நவ 23, 2017 00:43

சிவகங்கை: சிவகங்கை அருகே பாதை இல்லாததால் கிராம மக்கள் ஊரை காலி செய்ய முடிவு செய்துள்ளனர். சிரமம் ஊராட்சி ஆலங்குடியில் 200 பேர் வசிக்கின்றனர். இவர்களுக்கான ரேஷன்கடை 2 கி.மீ., உள்ள சேம்பார் கிராமத்தில் உள்ளது. 

பஸ் ஏறுவதற்கும் அக்கிராமத்திற்கு தான் செல்ல வேண்டும். அதேபோல் ஆலங்குடியைச் சேர்ந்த 20 குழந்தைகள் சேம்பார் நடுநிலைப் பள்ளியில் படிக்கின்றனர்.
ஆனால் ஆலங்குடியில் இருந்து சேம்பார் செல்வதற்கு பாதை
கிடையாது.


இதனால் கிராம மக்கள், மாணவர்கள் கண்மாயின் குறுக்கே தற்காலிக பாதை அமைத்து சென்று
வருகின்றனர். 


கண்மாயில் நீர் நிரம்பினால் இந்த பாதையை பயன்படுத்த முடியாது. அந்த சமயங்களில் தண்ணீருக்குள் நனைந்த படிதான் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியும். பாதை இல்லாததால் அக்கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வருவதில்லை. 


நோயாளியை துாக்கி சென்று சேம்பாரில் தான் ஏற்ற வேண்டும். இருபது ஆண்டுகளாக பாதை கேட்டு அக்கிராமமக்கள் போராடி வருகின்றனர். கிராமத்தினர் தொடர்ந்த வழக்கில் பாதை அமைத்து தரவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.


கலெக்டர் ஆய்வு: இரண்டு ஆண்டுகளுக்கு முன் கலெக்டர் ஆய்வு செய்தார். பின், கண்மாய் குறுக்கே 16 லட்சம் ரூபாய்க்கு பாலம், 24 லட்சம் ரூபாய்க்கு சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதன்பின் கலெக்டர் மாறியதால் திட்டம் கிடப்பில்
போடப்பட்டது.


இதுவரை பாதை இல்லாததால் அக்கிராமமக்கள் ஊரை காலி செய்ய முடிவு செய்துள்ளனர்.
டி.சண்முகம், ஏ.ராஜசேகரன் கூறியதாவது: அனைத்து தேவைகளுக்கும் சேம்பாருக்கு கண்மாய் வழியாகத் தான் செல்ல வேண்டும். கண்மாய் நிரம்பினால் சிக்கல்தான்.


கலெக்டர் முயற்சியால் பாலம், சாலை கிடைத்துவிடும் என்ற மகிழ்ச்சியில் இருந்தோம்.
அதுவும் நடக்கவில்லை. நான்கு ஆண்டுகளாக விவசாயமும் பொய்த்துவிட்டது, பாதையும் கிடைக்கவில்லை. இதனால் ஊரை காலி செய்வதை தவிர வேறுவழியில்லை, என்றனர்.

மின் வாரியத்திற்கு சனிக்கிழமை விடுமுறை : வைர விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகை

Added : நவ 22, 2017 22:01

வைர விழாவை முன்னிட்டு, பொதுத்துறை வங்கி களில் இருப்பது போல், நான்காவது சனிக்கிழமை, ஊழியர்களுக்கு விடுமுறை விட, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, அனல், நீர், எரிவாயு மின் நிலையங்கள் உள்ளன. தமிழகத்தில், மின் வினியோக பணிகளை, மின் வாரியம் மட்டுமே மேற்கொள்கிறது.


மின் வாரியத்திற்கு, காலை, 10:30 மணி முதல் மாலை, 5:00 வரை வேலை நேரம். மின் கட்டண மையங்கள், காலை, 8:00 மணி முதல், மதியம், 2:30 மணி வரை செயல்படுகின்றன.
வாரத்தில், இரண்டாவது சனிக்கிழமை தவிர்த்து, மற்ற அனைத்து சனிக்கிழமைகளும் வேலை நாள்.

இது குறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு துறை அலுவலகங்கள், காலை, 10:00 மணி முதல், மாலை, 5:45 மணி வரை வேலை நேரம்; அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை. அதேபோல், மின் வாரியத்திலும், அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை விடுமாறும், வைர விழாவை முன்னிட்டு, சிறப்பு ஊதிய உயர்வு வழங்குமாறும், ஊழியர்கள் கோரி வருகின்றனர்.அவர்களுக்கு, 2015 டிச., மாதம் முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வும், இதுவரை வழங்கவில்லை.தற்போது, நிலுவை தொகை இன்றி, ஊதிய உயர்வு வழங்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை திருப்தி படுத்தும் வகையில், பொதுத் துறை வங்கிகளுக்கு, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை இருப்பது போல், மின் வாரியத்திற்கும், நான்காவது சனிக்கிழமை விடுமுறை விட, திட்டமிடப்பட்டு உள்ளது. 


மின் வினியோக பிரச்னை ஏற்படும் போது, அதை சரி செய்யும் பணியில், வழக்கம் போல், எந்நேரமும் ஈடுபடுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
மாநில அரசின் உத்தரவால் பீஹார் ஆசிரியர்கள் கோபம்

Added : நவ 22, 2017 23:10

பட்னா: 'திறந்தவெளியில் அசுத்தம் செய்வோருக்கு ஆலோசனை வழங்க வேண்டும்; அவ்வாறு அசுத்தம் செய்வோரை படம் எடுக்க வேண்டும்' என்ற மாநில அரசின் உத்தரவால், பீஹாரில், ஆசிரியர்கள் கோபத்தில் உள்ளனர்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. பிரதமர் மோடியின் துாய்மை இந்தியா மற்றும் நிதிஷ் குமாரின் ஏழு இலக்குகள் திட்டங்களின் கீழ், பீஹாரில் துாய்மைப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
திறந்தவெளியில் அசுத்தம் செய்யாத மாநிலமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, 'இது தொடர்பாக மக்களுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும். அசுத்தம் செய்வதை தடுக்க வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, மாநில கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்கு, ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. பீஹார் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலர், சத்ருகன் பிரசாத் சிங் கூறியதாவது:


ஆசிரியர்களுக்கு ஏற்கனவே ஆசிரியர் பணியைத் தவிர, மற்றப் பணிகள் அதிகளவில் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இந்தப் பணியும் வழங்குவது அவர்களுக்கு கூடுதல் சுமையாகவே இருக்கும்; இது, ஆசிரியர்களை அவமதிக்கும் செயலாகவும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.


மாநில கல்வி அமைச்சர், கிருஷ்ண நந்தன் பிரசாத் வர்மா கூறியதாவது:
இது, ஆசிரியர்களை அவமதிக்கும் செயல் அல்ல. ஆசிரியர்களுக்கு சமூகத்தில் நல்ல மதிப்பு உள்ளது. அவர்கள் சொல்வதை மக்கள் கேட்பர். 


மேலும், காலை அல்லது மாலையில் நேரம் கிடைக்கும்போது, மக்களுக்கு ஆலோசனைகள் வழங்கும்படி கேட்டுஉள்ளோம். இதனால், அவர்களது ஆசிரியர் பணி எந்த வகையிலும் பாதிக்காது. துாய்மைப் பணியில் ஆசிரியர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

குறையுது முட்டை விலை : அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி


Added : நவ 22, 2017 22:02

சென்னை: தமிழகத்தில், 15 நாட்களாக எகிறிய முட்டை விலை, இரண்டு நாட்களாக குறைய துவங்கி உள்ளது. சென்னையில், சில்லரை விற்பனையில், முட்டை விலை, 7.50 ரூபாயில் இருந்து, 6.25 ரூபாயாக குறைந்துள்ளது. தமிழகத்தில், 4.36 ரூபாயாக முட்டையின் கொள்முதல் விலை, 15 நாட்களுக்கு முன், திடீரென, 5.65 ரூபாயாக உயர்ந்தது. இதனால், சென்னை யில், முட்டை விலை, ஆறு ரூபாயில் இருந்து, 7.50 ரூபாய் வரை அதிகரித்தது. இந்நிலையில், இரண்டு நாட்களாக முட்டை விலை குறைந்து வருகிறது.

இது குறித்து, சென்னை முட்டை மொத்த வியாபாரிகள் கூறியதாவது: நாடு முழுவதும், மழை பொழிவு அதிகம். இதனால், வட மாநிலங்களுக்கான முட்டை ஏற்றுமதி, 20 நாட்களாக அதிகரித்தது. காய்கறி விலை அதிகரிப்பால், முட்டை பயன்பாடு அதிகரித்து, விலை உயர்ந்தது. இரண்டு நாட்களாக, அவற்றின் விலை குறைந்து வருகிறது. நேற்று, கொள்முதல் விலை, நாமக்கல்லில், 5.05 ரூபாய்; சென்னையில், 5.40 ரூபாயாக இருந்தது. சில்லரையில், 7.50 ரூபாயில் இருந்து, 6.25 ரூபாயாக குறைந்துள்ளது. சில நாட்களில் விலை, இயல்பு நிலைக்கு வந்து விடும். இதனால், அசைவ பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

NEWS TODAY 07.07.2026